நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்ட பெங்களூர் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
பெங்களூர் அணியின் இந்த வெற்றியில் பட்லரை முதல் ஓவரில் ஆட்டம் இழக்கச் செய்த முகமது சிராஜ்க்கு மிக முக்கிய பங்கு உண்டு. இந்தப் போட்டியில் பரபரப்பான கட்டத்தில் துருவ் ஜுரல் அடித்த பந்துக்கு அஸ்வின் இரண்டு ரன்கள் ஓடி எடுத்தார். அப்பொழுது நேராக ஃபீல்டிங் நின்ற மஹிபால் லோம்ரோர் பந்தை சரியாகப் பிடித்து சிராஜ்க்கு வீசாத காரணத்தால் அவர் மீது சிராஜ் கோபப்பட்டு கத்தியிருக்கிறார்.

இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு முகமது சிராஜ் மகிபாலிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் . “ நான் ஒரு கோபமான மனிதன். இதற்காக என்னை மன்னிக்கவும். நான் ஏற்கெனவே மகிபாலிடம் இரண்டு முறை மன்னிப்பு கேட்டுள்ளேன். நான் என்னுடைய ஆக்ரோஷத்தை மைதானத்திற்கு வெளியே கொண்டு செல்லவில்லை. போட்டி முடிந்ததுமே என் கோபம் முடிந்துவிடும்" என்று சிராஜ் கூற இதற்கு பதிலளித்த மஹிபால்,” பரவாயில்லை சிராஜ் பாய். போட்டிகளின்போது சில நேரம் இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்கள் நடந்துக்கொண்டேதான் இருக்கும்" என்று கூறியிருக்கிறார்.