Published:Updated:

''ரன்ன்ன்ஸ்ஸ்''… மைக்கேல் ஹோல்டிங்கின் இந்த கணீர்க் குரலை இனி கேட்கமுடியாதா?!

மைக்கேல் ஹோல்டிங்

ஹோல்டிங் என்ன புத்தரா அத்தனைக்கும் அமைதி காக்க? இல்லை. ஆக்ரோஷத்தில் ஆயிரம் கங்குலிக்கு சமம்... கோடி கோலிக்கு சமம் அவர். ஒரு முறை நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் நடுவர் அவுட் தர மறுத்ததால் ஸ்டம்ப்புகளை எட்டி உதைத்து தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தியவர் ஹோல்டிங்.

''ரன்ன்ன்ஸ்ஸ்''… மைக்கேல் ஹோல்டிங்கின் இந்த கணீர்க் குரலை இனி கேட்கமுடியாதா?!

ஹோல்டிங் என்ன புத்தரா அத்தனைக்கும் அமைதி காக்க? இல்லை. ஆக்ரோஷத்தில் ஆயிரம் கங்குலிக்கு சமம்... கோடி கோலிக்கு சமம் அவர். ஒரு முறை நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் நடுவர் அவுட் தர மறுத்ததால் ஸ்டம்ப்புகளை எட்டி உதைத்து தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தியவர் ஹோல்டிங்.

Published:Updated:
மைக்கேல் ஹோல்டிங்
"இறைவனாக வழிபடப்படும் இயேசுவின் உருவப் படத்தை பாருங்கள். வெள்ளைத் தோல், நீல நிறக் கண்கள், தங்கம் போன்ற தலை முடி. அதுவே அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசின் படங்களைப் பாருங்கள். யார் இந்த வரையறைகளை வகுத்தது? வரலாற்றின் மோசமான மனிதர்களுக்கு எல்லாம் கறுப்பு வண்ணம் பூசுவது யார் கொண்டு வந்த சட்டம்?"

கடந்த ஆண்டு ‘Black lives Matter’ இயக்கம் உச்சத்தில் இருந்த போது இங்கிலாந்து தேசத்தில் இருந்து ஒலித்தது இந்த கணீர் குரல். மொத்த கிரிக்கெட் உலகமும் திரும்பிப் பார்க்கும் போது, "எங்களை தயவு செய்து சமமாக வாழ விடுங்கள்" என்று கேட்பது போல கண்களின் கண்ணீர் ததும்ப ஒரு பெரியவர் நின்று கொண்டிருந்தார். தமிழ் சினிமாவில் மாமூல் கேட்டு வரும் ரவுடிகள் தள்ளி விடுவார்களே... அது போன்ற பெரியவர் கிடையாது இவர். "ஒரு காலத்துல இவர் எப்படி வாழ்ந்த மனுசன் தெரியுமா?" என்று ‘முத்து’ படத்தில் வரும் flashback ரஜினி போன்ற கதாப்பாத்திரம் இந்த மைக்கேல் ஹோல்டிங்.

மைக்கேல் ஹோல்டிங் - ஒரு காலத்தில் பேட்டிங் பிடிக்க வரும் அத்தனை வீரர்களின் கால்களையும் கதகளி ஆட வைத்த பெயர். எரிகற்கள் போல இவர் வீசும் பந்துகளால் விக்கெட் போனால் கூட பரவாயில்லை உயிர் போய்விடக் கூடாது என்ற நினைப்பில் பேட்டிங் பிடித்தவர்கள் எத்தனையோ பேர். ஓடி வரும் தொனியே பேட்டிங் பிடிப்பவரின் கால்களை நடுங்க வைக்கும் அளவுக்கு ஆற்றல் கொண்டது. ‘Whispering Death’ என்று புனைப்பெயர் கொண்ட இவரது பவுன்சர்களுக்கு உலகம் முழுதும் அஞ்சியது.

மைக்கேல் ஹோல்டிங்
மைக்கேல் ஹோல்டிங்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இத்தனை பெரிய திறமைகளை தன்னுள்ளே வைத்திருந்தவரை உலகம் எந்தளவு கொண்டாடி இருக்க வேண்டும்? தற்போது விராட் கோலியை உலக நாடுகள் கொண்டாடுகின்ற அளவுக்கு கொண்டாடி இருக்க வேண்டும் அல்லவா? ஆனால் இதெல்லாம் ஹோல்டிங் வாழ்க்கையில் நடந்ததே இல்லை. ஆயிரம் தான் உலகமே உற்றுப் பார்க்கும் அளவுக்கு ஆட்டத்திறன் இருந்தாலும் அவர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டார். காரணம், ஹோல்டிங்கின் நிறம் கறுப்பு.

மேற்கிந்திய தீவுகளை விட்டு வெளியே செல்லும் போதெல்லாம் ஹோல்டிங்கிற்கு கிடைத்தது அவமானங்கள்தான். ‘’மரத்துக்குத் திரும்பிப் போ, எங்கள் நாட்டிற்கு கறுப்பு சாயம் பூச வந்து விட்டாயா?" போன்ற வாசகங்கள் எல்லாம் வெளிநாடுகளில் அவருக்கு வாடிக்கை. இதனை எல்லாம் கேட்டுக்கொண்டே தான் வளர்ச்சி பெற்றது ஹோல்டிங்கின் கிரிக்கெட் வாழ்க்கை. ஹோல்டிங் என்ன புத்தரா அத்தனைக்கும் அமைதி காக்க? இல்லை. ஆக்ரோஷத்தில் ஆயிரம் கங்குலிக்கு சமம்... கோடி கோலிக்கு சமம் அவர். ஒரு முறை நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் நடுவர் அவுட் தர மறுத்ததால் ஸ்டம்ப்புகளை எட்டி உதைத்து தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தியவர் ஹோல்டிங். அப்படி இருந்தும் ஆடுகளத்தில்தான் தனது ஆக்ரோஷத்தை காட்டினாரே தவிர, தன்னை இழிவுபடுத்திய சக மனிதர்களை ஒரு நாள் கூட அவர் மோசமாக பேசியது கிடையாது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஹோல்டிங் நினைத்திருந்தால் இவன் என்னை அவமானப்படுத்துகிறான் என்று முறையிட்டிருக்க முடியும். ஆனால் அப்படி செய்திருந்தால் அவர் பெயர் இப்படி கம்பீரமாக இன்று வரை வரலாற்றில் நிற்குமா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை என்பது தான் பதில். இவர்களை எல்லாம் சமாளிக்க ஹோல்டிங் எடுத்த ஆயுதம் வேறு. "அவன் பொருளை எடுத்து அவனையே போடணும்டா" என்னும் ‘வட சென்னை’ திரைப்படத்தின் வசனம்தான் ஹோல்டிங்கின் பாணி. ‘நீ கண்டுபிடித்த கிரிக்கெட்டில் உன்னையையே வீழ்த்துவேன்... அப்போது உன்னால் என் வளர்ச்சியை எப்படி தடுக்க முடியும்’ என்று கேட்பது போல இருக்க ஆரம்பித்தது ஹோல்டிங்கின் ஆட்டம். கடைசியில் ஹோல்டிங்கையும் அவரது வேகத்தையும் சமாளிக்கவே முடியாமல் அவரை ஏற்றுக் கொள்ளத் தொடங்கியது கிரிக்கெட் உலகம்.

மைக்கேல் ஹோல்டிங்
மைக்கேல் ஹோல்டிங்

எந்த நாட்டு ரசிகர்கள் ஒரு காலத்தில் 'எங்கள் நாட்டில் கறுப்பு சாயம் பூச வந்து விட்டாயா?’ என்று கேட்டனரோ அதே நாட்டின் டிவி நிறுவனம் ஒன்று ஹோல்டிங்கை தனது நிறுவனத்தில் வர்ணனை செய்ய அழைத்தது. இங்கிலாந்தில் ஆட்டம் தொடங்கி சில பல பந்துகள் கழித்து ஒரு வீரர் பந்தை பவுண்டரி பக்கம் விரட்டும் போது 'runnnss' என்ற கணீர் குரல் ஒன்று வர்ணனைப் பெட்டியில் இருந்து கேட்குமே… அது ஹோல்டிங்கின் குரல் தான். சுமார் இருபது ஆண்டு காலமாக ஓங்காரமாக ஒலித்த குரல் தற்போது ஓய்வை அறிவித்துள்ளது.

ஹோல்டிங்கின் வர்ணனையில் அழகியலை விட அறிவியல் தான் அதிகம் இருக்கும். ஒரு கண்டிப்பான தந்தை எந்தளவு தனது பிள்ளையின் குற்றம் குறைகளை கண்டிப்பாரோ அந்தளவு காட்டம் இருக்கும், அவரது பேச்சில். தவறான ஷாட் ஆடினால் எவ்வளவு பெரிய வீரர் என்றாலும் பூசி முழுகாமல் உடனே இது மோசமான ஷாட் என்ற வார்த்தைகள் வரும். பந்துவீச்சை பொறுத்தவரை இவரிடம் அரை மணி நேரம் உட்கார்ந்து பேசி விட்டு வந்தால் ஒரு புத்தகமே எழுதலாம். அவ்வளவு பெரிய பல்கலைக்கழகம் இந்த மைக்கேல் ஹோல்டிங்.

தந்தையிடம் கண்டிப்பு மட்டும் தான் இருக்குமா என்ன? கடந்த 2010-ம் ஆண்டு பாகிஸ்தான் அணியின் வீரர் முகமது அமீர் சூதாட்ட குற்றத்தில் கைது செய்யப்படும் போது இவ்வளவு பெரிய திறமையை பணம் விலைக்கு வாங்கி விட்டதே என நேரலை நிகழ்ச்சியில் கண் கலங்கி அழுதார் ஹோல்டிங். கடந்த ஆண்டு "இந்த இனவெறி தாக்குதல்களில் இருந்து தப்பித்துக் கொள்ள கல்வி என்னும் ஆயுதத்தை ஏந்துங்கள். கல்வியை தவிர எதுவும் உங்களைக் காப்பாற்றாது" என ‘அசுரன்’ பட சிவசாமியாக மாறி ஹோல்டிங் பேசிய வார்த்தைகள் எல்லாம் கல் நெஞ்சையும் கரைக்கக் கூடியவை.

மைக்கேல் ஹோல்டிங்
மைக்கேல் ஹோல்டிங்

இந்நாள்வரை டி20 கிரிக்கெட்டை மோசமாக விமர்சிக்கிறார் என்பதுதான் இவர் மேல் இருக்கும் ஒரே பிரச்னை. வரலாற்றில் உங்களுக்கான பெயரை அழுத்தி எழுதப்போகும் டெஸ்ட் கிரிக்கெட்டை விட்டுவிட்டு டி20 கிரிக்கெட் ஆடச் செல்வது அறம் கிடையாது என்று பலமுறை சொல்லியுள்ளார். டி20 கிரிக்கெட் நல்லதா கெட்டதா என்ற வாதத்தை எல்லாம் தள்ளிவைத்துவிட்டு ஹோல்டிங்கின் இடத்திலிருந்து பார்த்தால் அவரின் கோபத்தில் உள்ள அர்த்தம் புரியும்.

இந்த சமூகத்தில் தனக்கென ஒரு செல்வாக்கை ஏற்படுத்திக் கொடுத்த டெஸ்ட் கிரிக்கெட்டை தற்கால தலைமுறை புறம் தள்ளுவதை எப்படி அவரால் ஏற்றுக்கொள்ள முடியும்? புதுமைகளை ஏற்றுக் கொள்வதில் முந்தைய தலைமுறைக்கு எப்படியும் ஒரு அச்சம் இருக்கத்தானே செய்யும். நம்மில் எத்தனை பேருடைய அப்பாக்கள் பணப் பரிவர்த்தனைக்கு gpay போன்ற செயலிகளை யோசிக்காமல் ஏற்றுக் கொண்டுள்ளனர்?

1980-களில் நான் சந்தித்த இன ரீதியான ஒடுக்குமுறை தற்போதும் தொடர்வது வெட்கக்கேடானது என்று ஒரு முறை கூறினார் ஹோல்டிங். சமத்துவ சமூகம் படைக்க நம்மால் முடிந்த பங்களிப்பை அளிப்பதுதான் ஹோல்டிங்கிற்கு நாம் கொடுக்கும் மிகப்பெரிய மரியாதை. அடக்குமுறைகள் எல்லாம் அற்ற சமூகம் ஒன்று பிறந்து விட்டது பாருங்கள் என்று மைக்கேல் ஹோல்டிங்கின் கரத்தைப் பற்றிக்கொண்டு நாம் அவருக்கு காட்டப்போகும் நாள் தான் அவர் வாழ்க்கையிலேயே சிறப்பான நாளாக இருக்கும். அப்படிப்பட்ட சமூகத்தை உருவாக்குவதுதான் நான் ஹோல்டிங்கிற்குச் செய்யும் மரியாதை!