Published:Updated:

``இது நாங்கள் பார்த்த ஆஸ்திரேலியா இல்லை"- விமர்சனம் செய்த ஹர்பஜன் சிங்!

ஹர்பஜன் சிங்

ஆஸ்திரேலிய அணி மனதளவில் பலவீனமானவர்கள் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் விமர்சித்திருக்கிறார்.

Published:Updated:

``இது நாங்கள் பார்த்த ஆஸ்திரேலியா இல்லை"- விமர்சனம் செய்த ஹர்பஜன் சிங்!

ஆஸ்திரேலிய அணி மனதளவில் பலவீனமானவர்கள் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் விமர்சித்திருக்கிறார்.

ஹர்பஜன் சிங்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் மோதும் வரலாற்று சிறப்புமிக்க பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

மொத்தம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகள் நடந்து முடிந்திருக்கும் நிலையில் அந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை தக்க வைத்திருக்கிறது. இதனிடையே ஆஸ்திரேலிய அணியுடனான 3 வது டெஸ்ட்  நாளை (மார்ச் 1ம் தேதி) இந்தூரில் தொடங்க உள்ளது.

பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர்
பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர்

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி மனதளவில் பலவீனமானவர்கள் என்று  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்  ஹர்பஜன் சிங்  விமர்சித்திருக்கிறார். 

இது தொடர்பாகப் பேசிய அவர், “ இந்தியாவில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி தெளிவில்லாமல் இருக்கின்றனர். இதற்கு முன் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணியை தற்போது உள்ள அணியுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இது தான் பலவீனமான அணியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். 

திறமை அடிப்படையில் அல்ல, மனரீதியாக அவர்கள் மிகவும் பலவீனமானவர்கள். அவர்களால் அழுத்தத்தைக் கையாள முடிவதில்லை. இது நாங்கள் முன்பு பார்த்த அல்லது விளையாடிய ஆஸ்திரேலிய அணி அல்ல என்று ஹர்பஜன் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், “ எந்த நாட்டிற்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு முன் ஆஸ்திரேலிய வீரர்கள் பல திட்டங்களை வைத்திருப்பார்கள்.

ஆஸ்திரேலிய கிரிகெட் அணி
ஆஸ்திரேலிய கிரிகெட் அணி

மற்ற அணிகளை விட நிலைமையையும் சூழலையும் புரிந்துகொண்டு சிறப்பாக செயல்படுவார்கள். இப்போதுள்ள இந்த அணியில் சவால்களை எதிர்கொண்டு அணிக்கு சாதகமான சூழலை உருவாக்கும் வீரர்கள் யாரும் இல்லை" என்று கூறியுள்ளார்.