Published:Updated:

`அவங்க கேட்டா `ஓகே’ மட்டும்தான் சொல்லுவேன்!’- தோனி சொல்லும் சாக்‌ஷி சுவாரஸ்யம்

திருமணமாகும் வரைதான் ஆண்கள் சிங்கங்களாக வலம் வர முடியும் என இந்திய வீரர் மகேந்திரா சிங் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

தோனி
தோனி

கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் தோனிக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. உலகக்கோப்பை போட்டிக்குப் பிறகு தோனி இன்னும் கிரிக்கெட் களத்துக்குத் திரும்பவில்லை. தோனியின் வருகைக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். தோனி செய்யும் சின்னச் சின்ன விஷயங்கள் கூட இணையத்தில் வைரலாகும். மகள் ஸிவாவுடன் தோனி அடிக்கும் சேட்டைகள் எல்லாமே வைரல் ரகம். ஸிவாவுக்குப் பெரிய ஃபேன் ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். ஆனால், இந்த முறை வைரலான வீடியோவில் தோனி திருமணம் குறித்து பேசியுள்ளார். அப்படி என்னதான் பேசினார் என்கிறீர்களா. சரி விஷயத்துக்கு வருவோம்.

தோனி
தோனி

தோனி பேசிய வீடியோவில், “ நான் என்னை சிறந்த கணவன் என நினைக்கிறேன். ஏனென்றால் என் மனைவி என்ன செய்ய நினைக்கிறாரோ அதைச் செய்ய அனுமதித்து விடுவேன். மனைவி மகிழ்ச்சியாக இருந்தாலே கணவன்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். என் மனைவி கேட்கும் அனைத்து விஷயங்களுக்கும் நான் சரி என்று சொன்னால் அவர் மகிழ்ச்சியாக இருப்பார். திருமணமாகும் வரைதான் ஆண்கள் சிங்கங்களாக வலம் வர முடியும்’ என்றார், தோனியின் பேச்சைக்கேட்டு அரங்கமே அதிர்ந்தது.