27 நிமிடங்கள்… இலங்கை அணியின் மீதமிருந்த 4 விக்கெட்டுகளை வீழ்த்த நேற்றைய நாளின் தொடக்கத்தில் இந்திய பௌலர்களுக்கு இதுவே போதுமானதாய் இருந்தது. 6 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் என்ற நிலையில் களமிறங்கிய இலங்கையின் இன்னிங்ஸ் அடுத்த 35 பந்துகளில் முடிவுக்கு வந்தது (109/10). இந்திய மண்ணில் முதல் முறையாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார் பும்ரா.

நாளின் தொடக்கத்தில் ஆட்டங்கண்ட இலங்கை அணிக்கு மீண்டுமொரு சவால் நாளின் கடைசி 35 நிமிடங்களில் அமைந்தது. ஆனால் இம்முறையும் தன் அதே துல்லியத்தை இம்மி பிசகாமல் காட்ட முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே திரிமனேவை ரன் ஏதும் இல்லாமல் பெவிலியனுக்கு அனுப்பினார் பும்ரா. 28/1 என்ற நிலையில் நேற்றைய ஆட்டத்தை முடித்திருக்கும் இலங்கை அணிக்கு வெற்றிக்கு தேவை இன்னும் 419 ரன்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSமுன்னதாக முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்து, இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸிலும் ரொம்பவும் சொதப்பினர் இலங்கை அணியின் பௌலர்கள். பிட்சின் தன்மைக்கு ஏற்றாற்போல பந்துவீச தவறியதே இதற்கு முதன்மை காரணம். இதனாலேயே ஓவருக்கு நான்கு ரன்கள் என்ற கணக்கில் 300 ரன்களுக்கு மேல் அடித்து இந்திய அணியால் டிக்ளேர் செய்ய முடிந்தது.

சவாலான இந்த ஆடுகளத்தில், குறிப்பாக ரிஷப் பண்ட் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயரின் பேட்டிங் அத்தனை எளிதாகக் காட்சியளித்தது. விஹாரியின் விக்கெட்டிற்குப் பிறகு களமிறங்கிய பண்ட் தான் சந்தித்த இரண்டாவது பந்திலேயே டவுன் த கிரீஸ் இறங்கி வந்து டீப் மிட் விக்கெட் திசையில் பிரமாண்ட சிக்ஸர் ஒன்றை விளாசினார். டி சில்வா வீசிய அடுத்த ஓவரிலும் அடுத்தடுத்த பந்துகளில் ஃபோர் மற்றும் சிக்ஸரை அடித்தார். ஓவருக்கு குறைந்தபட்சம் ஒரு பவுண்டரி அடித்து வந்த பண்ட் வெறும் 28 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆனார். 1982-ம் ஆண்டில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக கராச்சியில் நடைபெற்ற போட்டியில் 30 பந்துகளில் கபில் தேவ் அடித்திருந்த அரைசதமே இதற்கு முந்தைய சாதனையாய் இருந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
முதல் இன்னிங்ஸை போல போதிய அளவு பவுன்ஸ் ஆகாமல் பெங்களூரு ஆடுகளம் விராட் கோலியை மீண்டுமொரு முறை ஏமாற்ற 16 பந்துகளில் வெறும் 13 ரன்கள் மட்டுமே அடித்து பெவிலியன் திரும்பி இருந்தார் அவர். கடந்த 40 டெஸ்ட் போட்டிகளில் அதாவது 2017-ம் ஆண்டிற்குப் பிறகு தன் டெஸ்ட் சராசரியில் 50-க்கும் கீழ் முதல் முறையாக சரிவைக் கண்டுள்ளார் கோலி.

அதன்பிறகு களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் தன் முதல் இன்னிங்ஸ் ஃபார்மை அப்படியே தொடர இரண்டு எண்டுகளில் இருந்தும் எந்தக் குறையும் இல்லாமல் ரன்கள் வரத்தொடங்கின. ஸ்பின்னர்களின் பந்துகளில் ஷ்ரேயாஸ் லேட் கட் ஆடிய விதம் அத்தனை நேர்த்தியாக இருந்தது. மறுபக்கம் பௌலிங்கில் மட்டும் சொதப்பியதில்லாமல் தேவை இல்லாத ரிவியூக்களை மீண்டும் மீண்டும் எடுத்து வீணடித்தனர் இலங்கை அணியினர். கடைசி கட்டத்தில் ஷமி தன் பங்கிற்கு ஒரு சிக்ஸரையும் இரு பவுண்டரிகளையும் விளாச இந்திய அணியின் லீட் 446 ரன்கள் ஆனது.
இன்று இந்தியா வெற்றி வாகை சூடுமா? அல்லது இலங்கை போராடுமா?