மே 1-ஆம் தேதி நடைபெற்ற பெங்களூரு அணிக்கு எதிரானப் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனான கே. எல் ராகுலுக்கு தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டிருந்தது.
இதனால் மே 3-ஆம் தேதி நடைபெற்ற சென்னைக்கு எதிரான போட்டியில் கே. எல் ராகுல் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக க்ருணால் பாண்டியா லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட்டிருந்தார்.

இந்நிலையில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் கே.எல் ராகுல் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை கே.எல்.ராகுல் விலகினால் லக்னோ அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த போட்டியை வழிநடத்திய க்ருணால் பாண்டியா லக்னோ அணியின் கேப்டனாக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி இந்த காயத்தால் இங்கிலாந்தில் ஓவல் மைதானத்தில் அடுத்த மாதம் 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் கே.எல் ராகுல் பங்கேற்பாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கே.எல்.ராகுல் விலகினால் லக்னோ அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற உங்கள் கருத்தை கமென்ட்டில் பதிவிடுங்கள்!