Published:Updated:

Cricket: சமநிலையற்ற LBW விதிமுறைகள்; ரவிச்சந்திரன் அஷ்வின் எழுப்பும் கேள்விகள் சரியா?

Cricket

பந்து வீசுவதற்கு முன்பு ஒரு பந்துவீச்சாளர், தான் வீசப்போகும் எண்டை நடுவரிடம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். அதேபோல் எத்தனை பவுன்சர்கள் வீச வேண்டும் என்பதிலும் கட்டுப்பாடு உண்டு. ஆனால் பேட்ஸ்மேன்களுக்கு இதுபோன்ற எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை.

Cricket: சமநிலையற்ற LBW விதிமுறைகள்; ரவிச்சந்திரன் அஷ்வின் எழுப்பும் கேள்விகள் சரியா?

பந்து வீசுவதற்கு முன்பு ஒரு பந்துவீச்சாளர், தான் வீசப்போகும் எண்டை நடுவரிடம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். அதேபோல் எத்தனை பவுன்சர்கள் வீச வேண்டும் என்பதிலும் கட்டுப்பாடு உண்டு. ஆனால் பேட்ஸ்மேன்களுக்கு இதுபோன்ற எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை.

Published:Updated:
Cricket

வேறு எந்த விளையாட்டை விடவும் கிரிக்கெட் விளையாட்டின் விதிமுறைகள் பல்வேறு விதிகள் பல்வேறு விதமான விவாதங்களுக்கு உட்படுத்தப்படுவது எப்போதைக்குமான வழக்கம்தான். அதிலும் LBW முறையை பற்றிச் சொல்லவே தேவையில்லை. இந்நிலையில் பேட்டர் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடும் போது உள்ள LBW-ன் முறை, பேட்டர்களின் பிளைண்ட் ஸ்பாட் ஆகியவற்றைக் குறித்து பேசியுள்ளார் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின்.

"சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவின் பந்துவீச்சில் சுமார் பத்து முறைக்கு மேல் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடியிருப்பார் ஜோ ரூட். ஆனால் அவற்றில் ஒரே ஒரு முறை மட்டும்தான் பந்து பேட்டில் பட்டு ரன் கிடைத்தது.

ஜோ ரூட் - Reverse Sweep
ஜோ ரூட் - Reverse Sweep

பந்து வீசுவதற்கு முன்பு ஒரு பந்துவீச்சாளர், தான் வீசப்போகும் எண்டை நடுவரிடம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். அதேபோல் எத்தனை பவுன்சர்கள் வீச வேண்டும் என்பதிலும் கட்டுப்பாடு உண்டு. ஆனால் பேட்ஸ்மேன்களுக்கு இதுபோன்ற எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. அவர்கள் எப்படி வேண்டுமானாலும் பேட்டிங் செய்யலாம். இதனால் ஏற்படும் பாதிப்பு பௌலர்களுக்குதான்" என்று கூறிய அஷ்வின் ‘பிளைண்ட ஸ்பாட்’ பற்றி விவரித்தார்.

"பேட்ஸ்மேனின் கண்பார்வைக்குத் தெரியாமல் பிட்சில் உள்ள இடம்தான் பிளைண்ட் ஸ்பாட். பேட்ஸ்மேனுக்கு லெக்சைடில் உள்ள இடமே பெரும்பாலும் பிளைண்ட் ஸ்பாட் எனக் கருதப்படும். அந்த இடத்தில் பந்து பிட்சாகி ஸ்விங் அல்லது ஸ்பின் ஆகி பேடில் பட்டால் அது பேட்ஸ்மேனால் கணிக்க முடியாது என்பதால் அது நாட் அவுட்டாகவே கருதப்படுகிறது. DRS முடிவுகளில் Pitching Outside Leg என்று வந்தால், உடனே அது நாட்-அவுட்டாக வழங்கப்படுவதற்குக் காரணம் இதுதான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதேபோல ஒரு பௌலர் Over the wicket-லிருந்து பந்து வீசும்போது வலது கை பேட்டர் ரிவர்ஸ் ஸ்வீப் அல்லது ஸ்விட்ச் ஹிட் ஆடி, அது பேட்டில் படாமல் பேடில் பட்டாலும் LBW முறை மறுக்கப்படுகிறது. பேட்ஸ்மேனுக்கு மிகப்பெரிய ப்ளஸ் பாயின்ட் இது. ஆனால், லெக்சைடில் ஃபீல்டிங் அமைத்து பந்து வீசும் பந்து வீச்சாளருக்கு இது மிகப்பெரிய மைனஸ். அனைத்து வகையான ஆட்டங்களிலும் இது நடந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில்தான் இதன் தாக்கம் அதிகம். ரிவர்ஸ் ஸ்வீப் அல்லது ஸ்விட்ச் ஹிட் ஆடும்போது பந்து பிட்சாகும் இடம் பேட்டருக்கு பிளைண்ட் ஸ்பாட்டாக இருக்காது. மாறாக அது அவரின் front-on இடமாக மாறும். அப்போது அவருக்கு LBW தரவேண்டும். அப்படி தரும்போதுதான் பேட்ஸ்மேன், பந்து வீச்சாளர் என இருவருமே சமமாக ஆட்டத்தில் இருப்பர்."

இவ்வாறு LBW குறித்தான தன் கருத்தைத் தெரிவித்துள்ளார் அஷ்வின்.

Ravi Ashwin
Ravi Ashwin

ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்விட்ச் ஹிட் ஆகியவை பேட்ஸ்மேனின் தனித்திறமையால் ஆடப்படும் ஷாட்கள். ஆனால், இத்தகைய ஷாட்கள் ஆடும்போது பௌலர் LBW என்ற ஆயுதத்தை இழந்து விடுகிறார் என்பதை பேட்டர்கள் அறிந்து அத்தகைய ஷாட்கள் ஆடும்போது அதற்கு ஒரு எச்சரிக்கையாக இத்தகைய விதிமுறைகள் இருந்தால் அவை ஆட்டத்தை இன்னும் சமநிலையில் வைத்திருக்க உதவும்.

கிரிக்கெட்டில் இப்போது இருக்கும் விதிமுறைகளுள் பலதும் பேட்டர்களுக்கு சாதகமானவையே. சில வருடங்களுக்கு முன்னர், சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இரண்டு புதிய பந்துகள் உபயோகிப்பது குறித்து தன் கருத்தைத் தெரிவித்திருந்தார். இதனால் வெள்ளை பந்துகள் ரிவர்ஸ் ஸ்விங் ஆவதே இல்லை, பேட்ஸ்மேன்கள் இன்னும் அதிக ரன்கள் அடிப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்று தெரிவித்திருந்தார்.

விதிகள் என்பது ஆட்டத்தை சீராக நடத்தவே. அவை மாறுதலுக்கு உட்பட்டவைதான். பட்லரை அஷ்வின் மன்கட் செய்தது பெரும் விவாதத்தைக் கிளப்பியது. ஆனால் வரும் அக்டோபர் 1 முதல் அம்முறை ரன்-அவுட்டாகவே இனி கருதப்பட இருக்கிறது. இப்படி இருக்கையில் LBW குறித்த இந்த விதியும் மாற்றப்பட்டால் அது ஆட்டத்தின் சமநிலைக்கு உதவிடும்.

இது குறித்து உங்களின் கருத்து என்ன? கமென்ட்டில் சொல்லுங்கள்.