Published:Updated:

ஆப்கனை சமாளித்த தனி ஒருவன்... யார் இந்த குசால் பெரேரா! #WorldCup2019

Kusal perera

இவர் ஆடும் ஆட்டத்தைப் பார்க்கும்போது ‘தேஜாவு’ ஃபீல் வரும். இவரது பயமில்லா ஆட்டம், புல் ஷாட், முதல் ஒவரில் இருந்தே அதிரடி, பவர் ஹிட்டிங் திறன் இவை அனைத்தும் ஜெயசூர்யாவை நினைவுபடுத்துகிறது

Published:Updated:

ஆப்கனை சமாளித்த தனி ஒருவன்... யார் இந்த குசால் பெரேரா! #WorldCup2019

இவர் ஆடும் ஆட்டத்தைப் பார்க்கும்போது ‘தேஜாவு’ ஃபீல் வரும். இவரது பயமில்லா ஆட்டம், புல் ஷாட், முதல் ஒவரில் இருந்தே அதிரடி, பவர் ஹிட்டிங் திறன் இவை அனைத்தும் ஜெயசூர்யாவை நினைவுபடுத்துகிறது

Kusal perera
பெயர் : குசால் பெரேரா
பிறந்த தேதி : 17.8.1990
ஊர் : கொழும்பு, இலங்கை
ரோல் : விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்
பேட்டிங் ஸ்டைல் : இடது கை பேட்ஸ்மேன்
சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகம் : 13-1-2013
செல்லப் பெயர் : பொடி சானா (சின்ன பையன்)
#WorldCup2019
#WorldCup2019

பிளேயிங் ஸ்டைல்

இவர் ஆடும் ஆட்டத்தைப் பார்க்கும்போதெல்லாம் ரசிகர்களுக்கு ‘தேஜாவு’ ஃபீல் வரும். கிட்டத்தட்ட ஜெயசூர்யாவின் நகல் என்றே இவரைச் சொல்லலாம். பயமில்லா ஆட்டம், புல் ஷாட், ஓப்பநிங் ஒவர் முதலே அதிரடி காட்டுவது, பவர் ஹிட்டிங் திறன் இவை அனைத்தும் ஜெயசூர்யாவை நினைவுபடுத்துகிறது.பிட்ச் செட்டாகட்டும், பெளலர் மோசமான பந்தை வீசட்டும் என்கிற காத்திரப்பு எல்லாம் இவரிடம் இல்லை. பவர்ப்ளே ஓவர்களிளேயே பந்தை பெளண்டரிகளுக்கும் சிக்ஸர்களுக்கும் பறக்க விட்டு அதிரடி காட்டி ஃபீல்டிங் அணியை ஆரம்பத்திலேயே ஃபிரஷருக்குள்ளாக்குவது தான் பெரேரா ஸ்டைல்.

கிரிக்கெட் பயணம்

13 வயது வரை வலது கை பேட்ஸ்மேனாக இருந்த குசால் பெரேரா ஜெயசூர்யாவின் தாக்கத்தினால் இடதுகை பேட்ஸ்மேனாக மாறினார். பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தாமல், விக்கெட்கீப்பிங்கிலும் தன் பயிற்சியை மேற்கொண்டார். ராயல் கல்லூரியில் படித்த போது தன் கல்லூரிக்காகப் பல போட்டிகளில் விளையாடி அதில் சிறப்பாக செயல்பட்டதால் இலங்கை 19 வயதுக்குட்பட்டோர் அணியில் இடம்பெற்றார் பிறகு இலங்கை முதல்தர போட்டிகளில் கோல்ட்ஸ் கிரிக்கெட் க்ளப்பிற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டது அவர் கிரிக்கெட் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. களமிறங்கிய முதலே தன் இயல்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி,இலங்கை கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையோடு சேர்த்து இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் பார்வையையும் தன் பக்கம் திருப்பினார்.

குசால் பெரேரா.
குசால் பெரேரா.

2012 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் காயம் காரணமாக சங்கக்காரா விலக, விக்கெட்கீப்பர், நல்ல பேட்ஸ்மேன் என இரண்டு பாக்ஸ்களையும் டிக் செய்த பெரேராவை மாற்று வீரராக சற்றும் யோசனையின்றி தேர்வு செய்தது இலங்கை தேர்வுக்குழு. களமிறங்கிய முதல் இரண்டு போட்டிகளிலும் 14*, 22* என ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் தன் அணியைக் கரைசேர்த்தார். மிடில் ஆர்டரில் களமிறக்கப்பட்ட பெரேரா அதன் பிறகு நடந்த டி20 தொடரில் முன்வரிசையில் ப்ரோமோட் செய்யப்பட்டார். சிறப்பாகச் செயல்பட்ட போதும் அணியில் நிரந்தர இடத்திற்கான ஆட்டமாக அது இல்லை. இலங்கை திரும்பிய பெரேரா முதல் தர போட்டிகளில் முதல் இரட்டைச் சதம் பின் முச்சதம்(336) என அதிரடி காட்ட இலங்கை அணியில் தன் இருப்பைத் தக்கவைத்துக்கொண்டார். லிமிட்டெட் ஓவர் போட்டிகளில் மட்டுமல்லாமல் தென்ஆப்ரிக்கா அணியுடன் டெஸ்ட் போட்டியில் 153* ரன்கள் எடுத்து,டெஸ்டிலும் தன்னை நிரூபித்தார் பெரேரா. அதன் மூலம் தற்போது டெஸ்ட் ஒருநாள்,டி20 என எல்லா தரப்பு போட்டிகளிலும் அந்த அணியின் தவிர்க்க முடியாத வீரராக திகழ்கிறார்.

“ஐபிஎல் போன்ற நட்சத்திர லீக்கில் விளையாடுவதை விட உள்ளூர் போட்டிகளில் விளையாடி இலங்கை டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடிப்பதே என் முதல் குறிக்கோள் “
குசால் பெரேரா.

சிறந்த பர்ஃபாமன்ஸ்

நடந்து முடிந்த தென்ஆப்ரிக்கா டெஸ்ட் தொடரில் இவரின் 153 ரன்கள் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த இன்னிங்ஸில் ஒன்று. டெய்லென்டரிடம் பார்ட்னர்ஷிப் அமைத்து, பரபரப்பான சூழ்நிலையிலும் நிதானம் காட்டி கடைசி விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்து தன் வாழ்நாளின் சிறந்த இன்னிங்ஸை ஆடினார் பெரேரா. அவர் எதிர்கொண்ட பெளலிங் அட்டாக்கும் சாதாரண அட்டாக் இல்லை.டேல் ஸ்டெயின், ரபாடா என உலகின் மிகச்சிறந்த பெளலிங் அட்டாக்கை சமாளித்து ஆடி வெற்றித்தேனை ருசித்து எல்லாம் வேறலெவல் தான். இரண்டாவது இன்னிங்ஸ் மட்டுமல்லாமல் அந்த போட்டியில் முதல் இன்னிங்ஸிலும் அரைசதம் கடந்து அசத்தினார்.

குசால் பெரேரா.
குசால் பெரேரா.

2018 நிதாஸ் டிராபி அரையிறுதியில் வங்கதேசத்திற்கு எதிராக இவர் கட்டமைத்த ஆட்டம் இவரின் முதிர்ச்சியின் எடுத்துக்காட்டாகக் கூறலாம். 41-5 எனப் படுமோசமான நிலையில் இருந்து இலங்கையை,இவர் அதிரடியாகச் சேர்த்த 61 ரன்களால் 20 ஓவர் முடிவில் 159 ரன்கள் என நல்ல ஸ்கோரை இலங்கை அடைந்தது.அந்த போட்டியில் இலங்கை தோல்வியுற்ற போதும் பெரேராவின் இந்த கவுண்டர் அட்டாக் இன்னிங்ஸ் பலராலும் பாராட்டப்பட்டது

பெரேரா ஸ்பெஷல்

கோல்டன் வில்லோவில் இடம்பெற்ற மிகச்சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸில் இவருடைய இன்னிங்ஸ் முதல் இடத்தில் உள்ளது. குறைந்த இன்னிங்ஸில் டி20 போட்டிகளில் 1000 ரன்களை கடந்த இலங்கை வீரர். ஒரே அணியுடன் 5 டி20 50 ரன்கள் அடித்த முதல் வீரர்

ரோல் மாடல்

சனத் ஜெயசூர்யா