Published:Updated:

RRvCSK: `சாம்சன் அணிக்கான வீரர்!' - பயிற்சியாளர் சங்ககரா புகழாரம்!

சஞ்சு சாம்சன், குமார் சங்ககரா

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளரும், முன்னாள் இலங்கை கேப்டன் மற்றும் புகழ்பெற்ற விக்கெட் கீப்பரும் -பேட்டருமான குமார் சங்ககரா சஞ்சு சாம்சனைப் பாராட்டிப் பேசியிருக்கிறார்.

Published:Updated:

RRvCSK: `சாம்சன் அணிக்கான வீரர்!' - பயிற்சியாளர் சங்ககரா புகழாரம்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளரும், முன்னாள் இலங்கை கேப்டன் மற்றும் புகழ்பெற்ற விக்கெட் கீப்பரும் -பேட்டருமான குமார் சங்ககரா சஞ்சு சாம்சனைப் பாராட்டிப் பேசியிருக்கிறார்.

சஞ்சு சாம்சன், குமார் சங்ககரா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன் 17 பந்துகளில் 17 ரன்களை அடித்திருந்தார். குறைவான ரன்கள்தான் என்றாலும் பேட்டிங்கை விட அவரது ஆளுமைத்திறனும் அணிக்காக முனைப்பு காட்டும் திறனும் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளரும், இலங்கை அணியின் முன்னாள் கேப்டனுமான குமார் சங்ககராவும் இப்போது சஞ்சு சாம்சனைப் பாராட்டி பேசியிருக்கிறார்.

சாம்சன் பற்றி சங்ககரா பேசியது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சஞ்சு சாம்சன் பற்றி பேசிய பேசிய அவர், “சஞ்சு சாம்சனைப் பொறுத்தவரை எப்போதும் தன்னுடைய அணியை முன்னிலைப்படுத்திதான் ஆடுகிறார்.

குமார் சங்ககரா
குமார் சங்ககரா

ரன்கள் என்பது முக்கியம் அல்ல. அந்த ரன்களை அவர் எப்படி எடுக்கிறார் என்பதுதான் முக்கியம். அந்தவிதத்தில் அணியில் உள்ள எல்லோருக்கும் ஒரு உதாரணமாக இருக்கிறார். அணியின் வெற்றிக்காக அவர் காட்டும் முனைப்பு பாராட்டுக்குரியது. அவர் விளையாட்டில் வகுத்து வைத்திருக்கும் சில திட்டங்கள் மற்ற வீரர்கள் பின்பற்ற ஒரு சிறந்த முன் உதாரணமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்” எனப் பாராட்டி பேசியிருக்கிறார்.