Published:Updated:

கோலியின் 90*, சுந்தரின் சுழல்... சென்னை ப்ளேஆஃப்பை மறந்துட வேண்டியதுதானா? #CSKvRCB

2010-ல் கூட இப்படித்தான் முதல் ஏழு போட்டிகளில் ஐந்தில் தோற்றது சென்னை. ஆனால், இடையில் பத்தாண்டு இளமை மாறியிருக்கிறது என்பதை தோனி அறிவார்.

Published:Updated:

கோலியின் 90*, சுந்தரின் சுழல்... சென்னை ப்ளேஆஃப்பை மறந்துட வேண்டியதுதானா? #CSKvRCB

2010-ல் கூட இப்படித்தான் முதல் ஏழு போட்டிகளில் ஐந்தில் தோற்றது சென்னை. ஆனால், இடையில் பத்தாண்டு இளமை மாறியிருக்கிறது என்பதை தோனி அறிவார்.

இந்த சீசனில் சென்னையின் நிலைமை அதளபாதாளத்தில் இருக்கிறது. சென்னை அணி யாருக்கேன்னும் நன்றிக்கடன் பட்டிருக்க வேண்டுமெனில் அது பஞ்சாப் தான். சென்னையாவது ரொம்ப ரொம்ப கேவலமாகத் தோற்பதில்லை. ஜெயித்துக்கொண்டே இருந்தே அணி என்பதால், மனசெல்லாம் ரணமாகிக்கிடக்கிறது அவ்வளவே. ஆனால், பஞ்சாபோ சூப்பர் ஓவரில் தோற்பது, வெல்ல வேண்டிய போட்டியில் தோற்பது, பத்து விக்கெட் வித்தியாசத்தில் தோற்பது என இப்படியெல்லாம் தோற்க முடியுமா என தோற்றுவருகிறது . சென்னை பத்து விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணியை வென்ற போதே பஞ்சாப் என்ன நிலையில் இருந்தது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்

கோலியின் 90*, சுந்தரின் சுழல்... சென்னை ப்ளேஆஃப்பை மறந்துட வேண்டியதுதானா? #CSKvRCB

வெந்த புண்ணில் கூர் வேலைப் பாய்ச்சிருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. எல்லா சீசனிலும் பிளே ஆஃபுக்கு சென்ற ஒரே அணி என்னும் பெருமை கொண்டது சென்னை அணி. இரண்டு முறை கடைசி இடத்தில் இருந்த அணி பெங்களூரு. ஆனால் இந்த சீசனில் சென்னைக்கு அதுவே சந்தேகம் போல. போட்டிக்கு முன்னர் நான்கு கேள்விகள் இருந்தன.

தோனியின் பேட்டிங் பொசிசன்
கேதார் ஜாதவ் அணியில் இருப்பாரா?
சிஎஸ்கே வீரர்களின் வெற்றி பெற வேண்டும் என்கிற வேட்கை
தாஹிர், சாண்ட்னர் என்ன செய்கிறார்கள்?

இதில் கேதார் ஜாதவுக்கு மட்டும் டாஸிலேயே விடை சொன்னார் தோனி. மற்ற கேள்விகளுக்கான பதிலை தோனி தான் சொல்ல வேண்டும். ஆனால், அதற்குள் சீசனில் இருந்து சென்னை வெளியேறிவிடும் போல.

டாஸ் வென்ற கோலி பேட்டிங் தேர்வு செய்தார். பவுண்டரி லைன் பெரிது, அதே போல் டியூ ஃபேக்டரும் பெரிதாக இல்லை என்பதால், இரண்டாம் இன்னிங்ஸ் ஆட கடினமாக இருக்கும் என்பது கோலியின் அனுமானம். மொயின் அலிக்கு பதிலாக சீசனில் முதல் முறையாக கிறிஸ் மோரிஸும், சிராஜுக்குப் பதிலாக குர்க்ரீத் சிங் மன்னு களமிறங்கினார்கள்.

சில தவறுகள் செய்துவிட்டோம். அதைத் திருத்திக்கொள்ள வேண்டும். கேதார் ஜாதவுக்குப் பதிலாக ஜெகதீசன் என்று சொன்ன போது, ஒவ்வொரு சென்னை ரசிகரின் வீட்டிலும் போட்ட விசில் சத்தம் துபாயை எட்டியிருக்கும்.

ஆரோன் பிஞ்சும், படிக்கல்லும் இறங்க வழக்கம் போல தீபக் சஹார் முதல் ஓவரை வீசினார். சஹாரின் முதல் ஓவரில், பிஞ்சால் ஒருபந்தைக்கூட சரியாக கணிக்க முடியவில்லை. என்னடா தொண்ட கவ்வுது என்பதுபோல் முழித்தார். அடுத்த சாம் கர்ரன் ஓவரில் படிக்கல் ஒரு பவுண்டரி அடித்தார். அதுவும் இல்லையென்றால், பெங்களூரு முதலிரண்டு ஓவரில் பேட்டிங்கின் மூலம் ஐந்து ரன்கள் தான் அடித்திருக்கும்.

எட்டு பந்துகளில் 2 ரன்கள் எடுத்துத் திணறிய பிஞ்சை மிடில் ஸ்டம்ப் தெறிக்க போல்டாக்கினார் சஹார். ஒன் டவுனில் விராட் கோலி. மீண்டும் ஒரு கேப்டன் இன்னிங்ஸ் ஆட வேண்டிய பொறுப்புணர்வுடன் உள்ளே வந்தார் கோலி. பவர் பிளே இறுதியில் ஒரு விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்திருந்தது பெங்களூரு.

பிராவோ இதுவரை ஐபிஎல்லில் கோலியின் விக்கெட்டை எடுத்ததே இல்லை என்னும் போதே ஏழாவது ஓவரை வீச வந்தார் பிராவோ. அந்த ஓவரில் பத்து ரன்கள். பத்து ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்திருந்தது . அடுத்த கியர் போக ஆசைப்பட்ட படிக்கல், தாகூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். டூ டவுன் வில்லிலியர்ஸ். தாகூர் வீசிய பந்து அவுட்சைடு எட்ஜாகி தோனியின் கைகளில் சிக்கியது.வில்லியும் அவுட். பதினாறு ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்திருந்தது பெங்களூரு.

கோலியின் 90*, சுந்தரின் சுழல்... சென்னை ப்ளேஆஃப்பை மறந்துட வேண்டியதுதானா? #CSKvRCB

இதெல்லாம் பத்தாதேடா. குறைஞ்சது 160 ரன் அடிச்சா தான , நம்ம பவுலர்ஸ வச்சு டிபெண்டு பண்ண முடியும் என அறியாமல் இல்லை கோலி. ஆனால், அதற்கு ஓவருக்கு 15 ரன்கள் அடிக்க வேண்டும். ஆனால், கோலியைத்தவிர அதிரடியாக களத்தில் யாருமில்லை. 35 பந்துகளில் 44 ரன்கள் அடித்த கோலி இன்னிங்ஸை மொத்தமாக தன் கட்டுக்குள் எடுத்திருந்தார். தாக்கூரின் ஓவரில் அரைசதம் கடந்ததோடு, அந்த ஓவரில் 14 ரன்கள்.

பதினெட்டாவது ஓவரை வீச வந்தார் சுட்டி சாம் கர்ரன். முதல் பந்திலேயே லாங் ஆஃப் திசையில் ஷிவன் டூபே ஒரு சிக்ஸ். ஜெகதீசன் எவ்வளவோ முயன்றும் அதை ஒன்றும் செய்யமுடியவில்லை. கோலி இரண்டு சிக்ஸ் என பதினெட்டாவது ஓவர் 24 ரன்கள். யார் வீசினாலும் அடிப்பேன் என ரகிட ரகிட மோடில் இருந்தார் கோலி. தாகூரின் ஓவரில் மீண்டும் ஒரு சிக்ஸுடன் 14 ரன்கள். பிரேவோ வீசிய கடைசி ஓவரிலும் சொல்லி வைத்தது போல் பதினாலு ரன்கள். 35 பந்துகளில் 44 ரன்கள் எடுத்திருந்த கோலி, ஜியோவில் முதலீடு செய்தது போல் சட்டென 52 பந்துகளில் 90 ரன்கள் வந்துவிட்டார். கிட்டத்தட்ட 22 பந்துகளில் 56 ரன்கள். இரு அணிகள் ஆடிய ஆட்டத்தில் வேறுபட்டு நின்றது கோலியின் இன்னிங்ஸ். எல்லோருமே திணறிய ஒரு மைதானத்தில், கோலியால் அட்டகாசமாக அடிக்க முடிந்தது. அனுஷ்கா ஈஸ் தி சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி என்பதுபோல், கேலரியில் நின்றுகொண்டு கையசைத்தார் அனுஷ்கா ஷர்மா.

20 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது பெங்களூரு. கடைசி நான்கு ஒவர்களில் மட்டும் 66 ரன்கள்.

கிறிஸ் மோரிஸ் விசிய முதல் ஓவரில், ஒரு பவுண்டரி தவிர வாட்டோ அடித்த எல்லாமே டாட் பால்கள். அடுத்த ஓவரிலும் ஐந்து டாட் பால். தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரின் முதல் ஓவரிலேயே , அதிரடி ஆட்டக்காரர் டூ பிளெஸ்ஸி சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்டு கிறிஸ் மோரிஸிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். பவர்பிளே முடிவதற்குள்ளாக வாட்சனையும் காலி செய்தார் சுந்தர். ஸ்லாக் அடிக்க முயல, மிடில் ஸ்டிக்கில் பட்டு அவுட்டானார் வாட்டோ. பவர் பிளே இறுதியில் 2 விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் எடுத்திருந்தது சென்னை. பவர்பிளேயில் 23 பந்துகள் டாட் பால். ரன் அடித்த பந்துகள் வெறும் 13 தான். பவர்பிளேயிலேயே சென்னைக்கான தோல்வி எழுதப்பட்டது.

ஜாதவுக்குப் பதிலாக சென்னை அணியில் விளையாட முதல் வாய்ப்புக் கிடைத்த ஜெகதீசன் உள்ளே நுழைந்தார். ஏகப்பட்ட பிரஷர். ராயுடுவும், ஜெகதீசனும் ஸ்டிரைக் ரொட்டேட் செய்தாலும், தேவைப்படும் ரன் ரேட் ஏறிக்கொண்டே சென்றது . முதல் பத்து ஓவரில் சென்னை அடித்த பவுண்டரிகள் மொத்தமே நான்கு தான். கிட்டத்தட்ட டெஸ்ட் மேட்ச் ஆடியது சென்னை. சீனியர் வீரர்கள் செட்டிலாக பந்துகளை அடிக்காமல் விட, ரன்ரேட் எக்கச்சக்கமாக ஏறுகிறது. ஒரு சீனியர் அவுட்டானால், அடுத்த சீனியர் வந்து அவரும் செட்டிலாக, பந்துகளை ஓம் லாபம் என ஏப்பம் விடத் தொடங்குகிறார்கள்.

ராயல் சர்க்கஸில் இளம் சிங்கங்களை பார்த்த ரசிகர்கள், காலப்போக்கில் வயதான சிங்கங்களில் கொட்டாவியைப் பார்த்து உச் கொட்டுவது போல் இருந்தது சென்னையின் ஆட்டம்.

சைனி விசிய பந்தை மிட் ஆஃப் பக்கம் திருப்பி ரன் எடுக்க கிளம்பினார் ஜெகதீசன். கிறிஸ் மோரிஸ் வீசிய த்ரோவில், ரன் அவுட்டாக வெளியேறினார். மூன்று ஆண்டுகளில் ஒருமுறை மட்டுமே 30+ ரன்கள் அடித்த கேதார் ஜாதவுக்கு பதிலா களமிறங்கிய ஜெகதீசன் முதல் போட்டியிலேயே 33 ரன்களில் ரன் அவுட் முறையில் அவுட்டானார்.

கோலியின் 90*, சுந்தரின் சுழல்... சென்னை ப்ளேஆஃப்பை மறந்துட வேண்டியதுதானா? #CSKvRCB

அடுத்து வந்த தோனி, வந்த வேகத்தில் ஒரு சிக்ஸ். ஹேர் ஸ்டைலை எல்லாம் மாற்றியிருந்த தோனியிடம் ஒரு Do or Die கோபம் தெரிந்தது. தோனி அடித்த அடுத்த சிக்ஸை லாங் ஆஃபில் கேட்ச் பிடித்தார் குர்ப்ரீத் சிங். அடுத்த 24 பந்துகளில் 64 ரன்கள் அடிக்க வேண்டும். ராயுடு , பிராவோ, சாம் கர்ரன் மட்டும் தான் இருக்கிறார்கள். ஆனால், வெற்றிகான முனைப்பு சுத்தமாகவே இல்லை. சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆனார் சாம். 19வது ஓவருக்குள்ளாகவே பிராவோ, ஜடேஜா, ராயுடு என எல்லோரும் அவுட். 37 ரன்கள் வித்தியசாத்தில் பரிதாபமாக தோற்றது சென்னை.

ஆல் அவுட் ஆகவில்லை என ஆறுதல் பட்டுக்கொள்ள வேண்டிய நிலைமை எல்லாம் வரும் என சென்னை ரசிகர்கள் என்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

கோலியின் 90*, சுந்தரின் சுழல்... சென்னை ப்ளேஆஃப்பை மறந்துட வேண்டியதுதானா? #CSKvRCB

2010-ல் கூட இப்படித்தான் முதல் ஏழு போட்டிகளில் ஐந்தில் தோற்றது சென்னை. பின்பு விஸ்வரூபம் எடுத்து ஐபிஎல் சாம்பியன்ஸ் லீக் இரண்டையும் கைபற்றியது.ஆனால், இடையில் பத்தாண்டு இளமை மாறியிருக்கிறது என்பதை தோனி அறிவார்.

பழைய போட்டிகளைப் பற்றி யோசித்தால், தேவையில்லாத மனச்சுமை தான் அதிகரிக்கும். அதனால, இந்த போட்டியை மட்டும் நினைத்து விளையாட வீரர்களிடம் சொன்னேன். அதிரடியாக ஆடி அவுட் ஆனாலும் பரவாயில்லை. நாங்கள் உல்ட்டாவாக விக்கெட்டை காப்பாற்றி வருகிறோம். அதைவைத்து என்ன செய்வது என தெரியவில்லை. கப்பலில் ஏகப்பட்ட ஓட்டைகள் சரி செய்ய வேண்டும் என போட்டி முடிந்ததும் பேட்டியளித்தார் தோனி.

மேன் ஆப் தி மேட்ச், அதிக சிக்ஸ், கேம் சேஞ்சர், சூப்பர் ஸ்டிரைக்கர் என நான்கு விருதுகளை வென்றார் கோலி. சென்னையில் ஓப்பனர்கள் இருவரையும் வீழ்த்திய சுந்தர் பவர் பிளேயர் விருது பெற்றார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் கப்பலில் சரி செய்ய வேண்டிய ஓட்டைகள் என்ன என்ன , கமெண்டில் சொல்லுங்களேன்