Published:Updated:

"கோலியின் வளர்ச்சியை சிலரால் ஜீரணிக்க முடியவில்லை" - ரவி சாஸ்திரி ஆதங்கம்!

Kohli and Ravi Shastri

கடந்த 2014-ம் ஆண்டு டெஸ்ட் தரவரிசையின் 7-வது இடத்தில் பலவீனமாக தத்தளித்த அணியை 2016-ம் ஆண்டு முதல் 2021 வரை தொடர்ச்சியாக 5 வருடங்கள் உலகின் 'நம்பர் ஒன்' அணியாக வெற்றிநடைபோடச் செய்தவர் கோலி.

"கோலியின் வளர்ச்சியை சிலரால் ஜீரணிக்க முடியவில்லை" - ரவி சாஸ்திரி ஆதங்கம்!

கடந்த 2014-ம் ஆண்டு டெஸ்ட் தரவரிசையின் 7-வது இடத்தில் பலவீனமாக தத்தளித்த அணியை 2016-ம் ஆண்டு முதல் 2021 வரை தொடர்ச்சியாக 5 வருடங்கள் உலகின் 'நம்பர் ஒன்' அணியாக வெற்றிநடைபோடச் செய்தவர் கோலி.

Published:Updated:
Kohli and Ravi Shastri

நடந்து முடிந்த தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடருடன் இந்திய அணியின் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகி இருந்தது அனைவரும் அறிந்ததே. 2017-ம் ஆண்டிலிருந்து இந்திய அணியின் முழுநேர கேப்டனாக செயல்படத்தொடங்கிய கோலி பல்வேறு வெற்றிகளை பெற்றுத்தந்ததுடன் சர்வதேச டெஸ்ட் அரங்கில் இந்திய அணியை முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு ஓர் அசைக்கமுடியாத அணியாக மாற்றினார். ஆனால் கேப்டனாக ஒரு உலக கோப்பையைக்கூட பெற்றுத் தர முடியவில்லை என பலரும் கோலியை விமர்சிப்பது வழக்கம். இந்த நிலையில் தொடர் பணிச்சுமை காரணமாக கடந்த டி20 உலககோப்பையோடு டி20 மற்றும் ஐ.பி.எல் போட்டிகளில் தன் கேப்டன் பதவியை ராஜினாமா செய்திருந்தார் கோலி. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து செயல்படுவேன் என்று அவர் அறிவித்திருந்த நிலையில் ஒரு நாளில் போட்டிகளில் கோலியின் கேப்டன் பதவியை வலுக்கட்டாயமாக பறித்தது பிசிசிஐ. அதைத்தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் தானாகவே முன்வந்து தன் கேப்டன் பதவியிலிருந்து விலகினார் கோலி.

Virat Kohli
Virat Kohli

கோலியின் தலைமையில் மொத்தம் 68 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள இந்திய அணி 40 போட்டிகளில் வெற்றியைக் கண்டுள்ளது. சொந்த மண்ணில் மட்டுமல்லாது ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மண்ணிலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது கோலியின் தலைமையில்தான். இதனால் இந்தியா மட்டுமல்லாது ஆசியாவின் தலை சிறந்த கேப்டனகளுள் ஒருவராக உயர்ந்தார் கோலி. இப்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமான கேப்டனாக விளங்கியபோதிலும் கேப்டன் பதவியில் கோலி விலகியது அவரின் ரசிகர்களை ரொம்பவும் மனமுடையச் செய்தது. இப்போது ஒரு சாதாரண பேட்டராக மட்டும் அணியில் விளையாடிக் கொண்டிருக்கிறார் கோலி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி “கோலி கேப்டனாக இன்னும் 2 வருடங்கள் வரை நிச்சயம் நீடித்திருப்பர். அவரின் வளர்ச்சியை சிலரால் ஜீரணிக்க முடியவில்லை” என்று கூறியுள்ளார்.

Ravi Shastri
Ravi Shastri

அவர் அளித்துள்ள பேட்டியில் " இந்திய அணி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தரவரிசையில் கீழே உள்ள அணிகளுடன் அதிக போட்டிகளில் விளையாடவுள்ளது. அவற்றில் இந்தியா நிச்சயம் வெற்றி பெற்றுவிடும். அதனால் ஒரு கேப்டனாக இன்னும் 50 முதல் 60 போட்டிகளில் வெற்றியைப் பதிவு செய்து உலக சாதனை படைத்திருப்பார் கோலி. இதற்கு பிசிசிஐ முட்டுக்கட்டை போட்டுள்ளது " என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் ரவிசாஸ்திரியின் இக்குற்றச்சாட்டினை மெய்யாக்கும் விதமாக கோலி இன்னும் 2 வருடங்கள் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக செயல்பட்டிருந்தால் குறைந்தபட்சம் 15 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்க முடியும். அப்படி நடந்தால் பெற்றுவிட்டால் 53 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ள கிரேம் ஸ்மித்தின் சாதனையை பின்னுக்கு தள்ளி டெஸ்ட் வரலாற்றின் வெற்றிகரமான கேப்டனாக உயர்ந்திருப்பார் கோலி. அதற்கான அனைத்து வாய்ப்புகளும் பிரகாசமாகவே இருந்தன. கடந்த 2014-ம் ஆண்டு டெஸ்ட் தரவரிசையின் 7-வது இடத்தில் பலவீனமாக தத்தளித்த அணியை 2016-ம் ஆண்டு முதல் 2021 வரை தொடர்ச்சியாக 5 வருடங்கள் உலகின் 'நம்பர் ஒன்' அணியாக வெற்றிநடை போடச் செய்தவர் கோலி. அவரால் ஸ்மித்தின் சாதனையை மிக எளிதாக முறியடித்து ரவி சாஸ்திரி கூறியது போல உலக சாதனையை புரிந்திருக்கமுடியும்.

"சுனில் கவாஸ்கர் , சச்சின் டெண்டுல்கர் போன்றவர்கள் தங்களின் தனிப்பட்ட பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதே போல் விராட் கோலியும் அவருடைய பேட்டிங்கில் கவனம் செலுத்தி அந்த 71-வது சதத்தை விரைவில் நிறைவு செய்யவேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism