Published:Updated:

`நான் பார்த்துக்கொள்கிறேன்' - வருத்தப்பட்ட சாருலதா பாட்டிக்கு உறுதிகூறிய கோலி!

கோலியுடன் சாருலதா பாட்டி ( ட்விட்டர் )

இந்தியா விளையாடும் அடுத்தடுத்த ஆட்டங்களில் சாருலதா பாட்டியை மைதானத்தில் காண முடியும்....

Published:Updated:

`நான் பார்த்துக்கொள்கிறேன்' - வருத்தப்பட்ட சாருலதா பாட்டிக்கு உறுதிகூறிய கோலி!

இந்தியா விளையாடும் அடுத்தடுத்த ஆட்டங்களில் சாருலதா பாட்டியை மைதானத்தில் காண முடியும்....

கோலியுடன் சாருலதா பாட்டி ( ட்விட்டர் )

வங்கதேச அணிக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது, பிர்மிங்ஹாம் மைதானத்தில் 87 வயது பாட்டி சாருலதா படேல் அனைவரையும் கவர்ந்தார்.

சாருலதா பாட்டியுடன் கோலி
சாருலதா பாட்டியுடன் கோலி
twitter

2010- ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து ஸ்பெஷல் உவுசலா கருவியுடன் கிரிக்கெட் மைதானத்தில் தென்பட்ட சாருலதா பாட்டி, இந்திய வீரர்கள் அடிக்கும் சிக்ஸருக்கும் பவுண்டரிக்கும் பந்தை விரட்டும்போதெல்லாம் உவுசலாவை உற்சாகமாக ஊதியபடி இருந்தார்.

போட்டி முடிந்ததும் சாருலதா பாட்டியிடம் கேப்டன் விராட் கோலியும் துணைக் கேப்டன் ரோஹித் சர்மாவும் ஆசி பெற்றனர். கேப்டன் கோலி, பாட்டியிடம் அடுத்து வரும் போட்டிகளையும் காண வர வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

கோலி
கோலி
ட்விட்டர்

மறுபடி அதற்கு சாருலதா, `என்னிடம் டிக்கெட் இல்லையேப்பா!' என்று பதில் அளித்துள்ளார். உடனே விராட் கோலி, `டிக்கெட்டுகளைப் பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான், பார்த்துக்கொள்கிறேன். உங்களைத் தேடி டிக்கெட் வரும்' என்று வாக்குறுதி அளித்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

இதனால், இந்தியா விளையாடும் அடுத்தடுத்த ஆட்டங்களில் சாருலதா பாட்டியை மைதானத்தில் காண முடியும். லண்டனில் வசித்து வரும் சாருலதா, இந்தப் போட்டியைக் காண கிட்டத்தட்ட 200 கிலோமீட்டர் பயணித்து பிர்மிங்ஹாம் வந்திருந்தார்.

சாருலதா பாட்டியுடன் கோலி
சாருலதா பாட்டியுடன் கோலி
ட்விட்டர்

அவருக்கு எஞ்சியுள்ள போட்டிகளைக் காண தானே டிக்கெட்டுகளை வழங்க விரும்புவதாக மகிந்த்ரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்த்ராவும் ட்வீட் செய்திருந்தார்.