Published:Updated:

`இந்த விஷயத்தில் நான் பொறுப்பற்றவனாக இருக்க விரும்பவில்லை; ஆனால்..!’- CAA கேள்விக்கு கோலியின் பதில்

கோலி
கோலி ( Twitter )

2016-ம் ஆண்டில் பணமதிப்பிழப்பு நீக்க நடவடிக்கையின்போது கோலி, ``இந்திய அரசியல் வரலாற்றிலேயே மிகப்பெரிய நடவடிக்கை” என்று கூறியிருந்தார். இதனால், கடுமையான விமர்சனத்துக்கும் உள்ளானார்.

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான சர்வதேச டி20 போட்டியானது நாளை நடைபெற உள்ளது. இதுதொடர்பாக, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கவுஹாத்தியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். கோலியிடம், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான கேள்விகளை செய்தியாளர்கள் கேட்டனர்.

கோலி
கோலி
Twitter

செய்தியாளர்களின் கேள்விக்கு கோலி, ``இந்தப் பிரச்னையில், நான் பொறுப்பற்றவனாக இருக்க விரும்பவில்லை. இரு தரப்பினரும் தீவிரமான கருத்துகளைக் கொண்டிருப்பது உங்களுக்கே தெரியும். சட்டத் திருத்தத்தின் அர்த்தம் என்ன, என்ன நடக்கிறது? என்பதைப் பற்றிய முழுமையான தகவல்களும் அறிவும் என்னிடம் இருக்க வேண்டும். அப்போதுதான், எனது கருத்தை பொறுப்புடன் தெரிவிக்க முடியும்” என்று பதிலளித்துள்ளார்.

2016-ம் ஆண்டில் பணமதிப்பிழப்பு நீக்க நடவடிக்கையின்போது கோலி, ``இந்திய அரசியல் வரலாற்றிலேயே மிகப்பெரிய நடவடிக்கை” என்று கூறியிருந்தார். இதனால், கடுமையான விமர்சனத்துக்கும் உள்ளானார்.

இந்நிலையில் இன்று, ``தனக்கு தெரியாத ஒரு விஷயத்தில் கருத்து தெரிவிப்பதன் மூலம் சர்ச்சையில் சிக்கிக்கொள்ள மாட்டேன். ஏனெனில், நீங்கள் ஒரு கருத்தை தெரிவிக்கலாம். வேறொருவர், மற்றொரு கருத்தைத் தெரிவிக்கலாம். எனவே, எனக்கு முழுமையாகத் தெரியாத ஒரு விஷயம் குறித்து கருத்துச் சொல்ல நான் விரும்பவில்லை ” என்று கூறியுள்ளார்.

கோலி
கோலி
Twitter

மேலும், ``இந்நகரம் மிகவும் பாதுகாப்பாக உள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மகிழ்ச்சியடைகிறேன். சாலைகளில் எந்தவிதமான பிரச்னைகளையும் நாங்கள் பார்க்கவில்லை” என்றும் தெரிவித்துள்ளார். ``அதிரடி பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். பார்வையாளர்கள் கைக்குட்டைகள் மற்றும் துண்டுகள் ஆகியவற்றை அரங்கத்துக்குள் எடுத்து வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது” என்று அஸ்ஸாம் கிரிக்கெட் அசோசியேஷன் செயலாளர் தேவஜித் சைகியா கூறியுள்ளார்.

பின் செல்ல