Published:Updated:

`அந்த 30 நிமிடங்கள் தவிர்த்து, இது மிகச் சிறப்பான ஆண்டு!’ - `ஆட்டநாயகன்’ கோலியின் 2019 ஷேரிங்ஸ்

கோலி ( AP )

அணியில் அதிக வேகப்பந்துவீச்சாளர்கள் இருப்பது நல்லவிஷயம். வெளிநாடுகளில் தொடர்களைக் கைப்பற்ற வேகப்பந்துவீச்சு பலமாக இருப்பது அவசியம்.

Published:Updated:

`அந்த 30 நிமிடங்கள் தவிர்த்து, இது மிகச் சிறப்பான ஆண்டு!’ - `ஆட்டநாயகன்’ கோலியின் 2019 ஷேரிங்ஸ்

அணியில் அதிக வேகப்பந்துவீச்சாளர்கள் இருப்பது நல்லவிஷயம். வெளிநாடுகளில் தொடர்களைக் கைப்பற்ற வேகப்பந்துவீச்சு பலமாக இருப்பது அவசியம்.

கோலி ( AP )

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் அந்த அணி நிர்ணயம் செய்த 316 என்னும் சவாலான இலக்கை சேஸ் செய்து தொடரையும் 2 - 1 என்ற கணக்கில் கைப்பற்றி 2019-ம் ஆண்டை வெற்றிகரமாக முடித்துள்ளது இந்திய அணி.

இந்திய அணி
இந்திய அணி

ஒருகட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் கோலி ஆட்டமிழந்தபோது இந்திய ரசிகர்கள் சோர்ந்து போயினர். ஆனால், ஷ்ரதுல் தாக்கூர் அதிரடியாக விளையாடி இந்திய அணியை வெற்றியின் பக்கம் அழைத்துச் சென்றார். போட்டி முடிந்து பேசிய இந்திய அணியின் கேப்டனும் நேற்றைய போட்டியின் ஆட்டநாயகனுமான விராட் கோலி, இதுபோன்ற இக்கட்டான கட்டங்களை பலமுறை வெற்றிகரமாகக் கடந்துள்ளதாகத் தெரிவித்தார்,

கோலி, ``இதுபோன்ற நெருக்கடியான பல கட்டங்களின் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளோம். அதனால் கொஞ்சம் நிதானம் இருந்தது. போட்டியில் தேவைப்பட்டதெல்லாம் ஒரு மினி பார்ட்னர்ஷிப். அது கிடைத்துவிட்டால் எதிரணியினர் ஆட்டம்காண ஆரம்பித்துவிடுவார்கள். ஷ்ரதுல் தாக்கூர் மற்றும் ஜடேஜா இணைந்து ஆட்டத்தை முடித்து வைத்த விதம் அருமை. இவர்கள் இது போன்று ஆட்டத்தை முடித்து வைப்பது அணிக்கு நல்ல விஷயம்.

ஜடேஜா, ஷ்ரதுல் தாக்கூர்
ஜடேஜா, ஷ்ரதுல் தாக்கூர்

நான் ஆட்டமிழந்து போகும்போது பதற்றமான மனநிலையில்தான் சென்றேன். ஆனால், ஜடேஜா நம்பிக்கையுடனும் உறுதியுடனும் களத்தில் இருந்தார். உலகக் கோப்பையில் பதற்றமான அந்த 30 நிமிடங்கள் தவிர்த்து, இந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முக்கியமான சிறந்த ஆண்டாகக் கூறுவேன். உலகக் கோப்பையைத் தொடர்ந்து துரத்துவோம்.

அணியில் அதிக வேகப்பந்துவீச்சாளர்கள் இருப்பது நல்ல விஷயம். வெளிநாடுகளில் தொடர்களைக் கைப்பற்ற வேகப்பந்துவீச்சு பலமாக இருப்பது அவசியம். இப்போது அணியில் உள்ள வீரர்கள் நெருக்கடியான கட்டத்தில் எப்படி விளையாடுகிறார்கள் என்பது தொடர்பாகக் கண்டறியும் சோதனையில் இருக்கிறோம். நெருக்கடி கட்டங்களில் சிறபாக விளையாடும் வீரர்களைக் கண்டுபிடிப்பது அவசியம்” என்றார்.

ரோஹித்
ரோஹித்

இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய ரோஹித் ஷர்மா தொடர்நாயகனாக அறிவிக்கப்பட்டார். விருதை வென்ற பின்னர் பேசிய ரோஹித், ``உலகக் கோப்பையையும் நாம் வென்றிருந்தால் இது மிகச் சிறந்த ஆண்டாக இருந்திருக்கும்” என்றார்.