Published:Updated:

`2025... பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் கோலி?’ - இணையத்தில் வைரலாகும் வீடியோ

கோலி தான் பாகிஸ்தான் அணியை வெற்றிபெறவைக்க வேண்டுமா? இணையத்தில் வைரலாகும் வீடியோவுக்கு இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

Kohli
Kohli

பாகிஸ்தானில், செப்டம்பர் 6-ம் தேதி பாதுகாப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஜம்மு - காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் வீரர்களைக் குவித்ததால், நேற்று பதற்றமான சூழல் நிலவியது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், முன்னாள் கிரிக்கெட் வீரர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு கிரிக்கெட்டையும் இந்தியா- பாகிஸ்தான் போரையும் தொடர்புபடுத்தி, ஒரு வீடியோவை பாகிஸ்தான் நெட்டிசன்கள் ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர். இது யார் கொடுத்த யோசனையோ?

`கோலி மட்டுமல்ல... இவருகிட்டயும் க்ரீன் சிக்னல்தான்!'- ரவி சாஸ்திரி மீண்டும் பயிற்சியாளரான பின்னணி
Screen Shot of a Video
Screen Shot of a Video

இந்நிலையில், சமூக வலைதளமான ட்விட்டரில், விராட் கோலி பாகிஸ்தான் அணியில் விளையாடுவதுபோன்ற ஒரு வீடியோ வலம்வருகிறது. இதன் மையக் கருத்து, போரில் இந்தியாவை பாகிஸ்தான் வென்றதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த வீடியோ, 2025-ல் எடுப்பதுபோல் சித்திரிக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் கமென்டரி பாக்ஸில் இருந்து வர்ணனையாளர் பேசுவதுபோல் தொடங்குகிறது. “ 2025 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் மோதுவது ஸ்ரீநகரில் நடக்கிறது. இரண்டு புகழ்பெற்ற பேட்ஸ்மேன்கள் பாபர் அசாம், விராட் கோலி பாகிஸ்தானின் இன்னிங்ஸைத் தொடங்குகின்றனர். வீடியோவில், பாகிஸ்தான் அணி வீரர்களின் பட்டியல் திரையில் வருகிறது. அதில், மற்ற இந்திய வீரர்களான தவான், அஷ்வின், ஜடேஜா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

தோனி சாதனையை முறியடித்த கோலி! - வெஸ்ட் இண்டீஸ் தொடரை முழுமையாக வென்ற இந்தியா #WIvIND

இந்த வீடியோவை டி.வி-யில் பார்த்துக்கொண்டிருக்கும் பெண் ஒருவர், தனது தந்தையிடம் பாகிஸ்தானுக்காக விராட் கோலி இந்தப் போட்டியை வெற்றிபெறச் செய்வார் எனக் கூறுகிறார். அதற்கு அவரது தந்தை, விராட் கோலி இந்திய அணிக்கா விளையாடியிருக்கார் எனப் பதிலளிக்கிறார். அப்போது ஒரு சிறுவன், யார் இந்தியா? எனக் கேள்வி எழுப்புகிறார். இந்தக் கேள்விக்கு அவரது தந்தை புன்னகையித்தவாறே கடந்து செல்கிறார். அந்த வீடியோ முடியும் போது, இந்தியா , பாகிஸ்தான் கொடிகள் காட்டப்படுகின்றன. இந்தியப் பகுதிகள் முழுவதும் பச்சை நிறமாக ( அதாவது பாகிஸ்தான் இந்தியாவை ஆக்கிரமித்துவிட்டதாம்) மாறுகிறது. அத்துடன் வீடியோ முடிவடைகிறது.

இந்த வீடியோவில், 'இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் ஏற்பட்டு, அதில் பாகிஸ்தான் வெற்றிபெற்றுவிட்டது. இந்தியப் பகுதிகளை பாகிஸ்தான் கைப்பற்றிவிட்டது. அதன்காரணமாக, கோலி பாகிஸ்தான் அணியில் விளையாடுவதாக'க் கூறுகிறது. இந்த வீடியோவுக்கு இந்திய ரசிகர்கள் கடும் கண்டனத்தைப் பதிவுசெய்தனர். சிலர், இப்போது 6 வயதாக இருக்கும் குழந்தை வளர்ந்து 12 வயதாகிவிட்டது. விராட் கோலி, தவானுக்கு வயதாகவில்லையா? எனக் கேள்வியெழுப்பியுள்ளனர். சிலர், விராட் கோலி வந்துதான் பாகிஸ்தான் அணியை வெற்றிபெறச் செய்ய வேண்டுமா? எனக் கமென்ட் அடித்துள்ளனர்.இந்த வீடியோ, சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.

`பாடங்களை மனப்பாடம் செய்யத் தெரியாதா?’ - பாகிஸ்தானில் ஆசிரியர் அடித்ததில் மாணவன் உயிரிழப்பு