Published:Updated:

`அவர்களை அனைவரும் விரும்புகிறார்கள்!’ - `உலகின் தலைசிறந்த வாட்டர் பாய்ஸ்’ உரையாடலைப் பகிர்ந்த கோலி

கோலி - வில்லியம்சன் - பன்ட்
கோலி - வில்லியம்சன் - பன்ட் ( Twitter )

`அவர்கள் சிறப்பாக பழகக் கூடியவர்கள். அவர்களுக்கு எதிராக பழிவாங்கும் உணர்வு வெளிப்படாது. எங்கள் திறமையைக் களத்தில் காட்டுவோம். சிறந்த அணி வெற்றிபெறும்” என்றார் கோலி.

இந்திய அணி தனது நியூசிலாந்து சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியுள்ளது. முதலாவதாக நடைபெற்ற 5 டி20 போட்டிகள் தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. டி20 உலகக் கோப்பை இந்த ஆண்டில் நடைபெற உள்ள நிலையில், அந்நிய மண்ணில் இந்திய அணியின் இந்த வெற்றியானது மிக முக்கிமானதாகப் பார்க்கப்படுகிறது.

இந்திய அணி
இந்திய அணி

நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சனுக்கும் இந்திய அணியின் கேப்டன் கோலிக்கும் இடையே நல்ல நட்பு இருக்கிறது. இதை இருவரும் பல்வேறு கட்டங்களில் வெளிப்படுத்தியுள்ளனர். நியூசிலாந்து தொடர் தொடங்குவதற்கு முன்னதாக செய்தியாளர்கள் கோலியிடம், `உலகக் கோப்பையில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் பெற்ற தோல்விக்குப் பழிதீர்க்கும் விதமாக இந்தத் தொடர் அமையுமா?’ என்ற கேள்வியை முன்வைத்தனர்.

சச்சின் சாதனையை கோலி முறியடிக்கலாம்; ஆனால், ரோகித் சாதனையை? - கிரிக்கெட்டின் முரட்டு சாதனைகள்!

இதற்குப் பதிலளித்த கோலி, ``நியூசிலாந்து அணியின் வீரர்கள் திறமையானவர்கள். அவர்கள் சிறப்பாக பழகக் கூடியவர்கள். அவர்களுக்கு எதிராக பழிவாங்கும் உணர்வு வெளிப்படாது. எங்கள் திறமையைக் களத்தில் காட்டுவோம். சிறந்த அணி வெற்றிபெறும்” என்றார். ஆக்ரோஷமாக செயல்படும் கோலியே, நியூசிலாந்து வீரர்களை சிறப்பானவர்கள் என பாராட்டும் அளவுக்கு வில்லியம்சன் தலைமையிலான அந்த அணி மீது மரியாதை வைத்திருந்தார்.

கோலி - வில்லியம்சன்
கோலி - வில்லியம்சன்

கோலி மற்றும் வில்லியம்சன் ஆகிய இருவரும் சிறப்பான வீரர்கள். அதில் சந்தேகமே இல்லை. நேற்று நடைபெற்ற 5-வது டி20 ஆட்டத்தில் இந்த இரு வீரர்களுமே இடம் பெறவில்லை. கோலி, சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக களமிறங்கவில்லை. வில்லியம்சன், தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக 4-வது மற்றும் 5-வது ஆட்டங்களில் விளையாடவில்லை.

`ஸ்டேன்ட் இன் கேப்டன் ராகுல்; கைகொடுத்த பௌலர்கள்!' - டி20 வரலாற்றில் இந்தியாவின் புதிய சரித்திரம்

இந்த நிலையில், இந்திய அணி நிர்ணயம் செய்த இலக்கை நியூசிலாந்து அணி துரத்திக்கொண்டு இருந்தபோது, கோலியும் வில்லியம்சனும் பவுண்டரிக்கு அருகில் அமர்ந்தபடி பேசிக்கொண்டிருந்தனர். இதை டிவி-யில் பார்த்த அத்தனை பேரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தனர். இவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருக்க, பன்ட் அதை அருகில் இருந்து கவனிக்கும் புகைப்படம் செம வைரல். `உலகின் திறமையான வாட்டர் பாய்ஸ்' என கமென்ட்டுகள் பறந்தன.

இந்த நிலையில், இவர்கள் இருவரும் அப்படி என்ன சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருப்பார்கள் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இது தொடர்பாகவும் பல கமென்ட்டுகள் சமூகவலைதளங்களை ஆக்கிரமித்தது. இந்த நிலையில், போட்டி முடிந்த பின்னர் இருவரும் அப்படி என்ன பேசிக்கொண்டு இருந்தீர்கள் என கோலியிடம் கேட்கப்பட்டது.

வில்லியம்சன் - கோலி
வில்லியம்சன் - கோலி
AP

அதற்குப் பதிலளித்த கோலி, ``கேன் வில்லியம்சனும் நானும் ஒரே மாதிரியான மனநிலை கொண்டவர்கள். ஒரே கொள்கைகளை உடையவர்கள். உலகின் வெவ்வேறு பகுதியில் இருக்கும் இருவரின் எண்ணமும் ஒரே மாதிரியாக இருப்பது சிறப்பான உணர்வாக இருக்கிறது. அணியின் ரன்கள், இலக்கு... இது எல்லாவற்றையும் தாண்டி, நியூசிலாந்து அணி, தகுதியான நபரிடம் உள்ளது என சொல்லுவேன். அந்த அணியை வழிநடத்த கேன் தகுதியான நபர். எதிர்காலத்திலும் அந்த அணியை திறம்பட நடத்த வாழ்த்துகள். நியூசிலாந்து அணி விளையாடுவதைக் காண அனைவரும் விரும்புவார்கள். அவர்களுக்கு எதிராக விளையாடவும் விரும்புவார்கள்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு