Published:Updated:

ICC T20 WC: `கோலிதான் டாப்பு!' - டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்களை அடித்த வீரர்!

விராட் கோலி

டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அதிக ரன்களை அடித்த வீரராக கோலி சாதனை படைத்திருக்கிறார்.

ICC T20 WC: `கோலிதான் டாப்பு!' - டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்களை அடித்த வீரர்!

டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அதிக ரன்களை அடித்த வீரராக கோலி சாதனை படைத்திருக்கிறார்.

Published:Updated:
விராட் கோலி

குறுகிய காலத்திலேயே சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளைச் சொந்தமாக்கியவர் விராட் கோலி. கடந்த மூன்று ஆண்டுகளாக ஃபார்மில் இல்லாமலும் பெரிதாகச் சதங்கள் ஏதும் அடிக்காமலும் இருந்த விராட் கோலி தற்போது நடந்து வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டின் பேட்டிங் சாதனைகளை மீண்டும் முறியடிக்கத் தொடங்கியிருக்கிறார். 

 மஹேலா ஜெயவர்தனே, விராட் கோலி
மஹேலா ஜெயவர்தனே, விராட் கோலி

தற்போது நடந்து வரும் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 53 பந்தில் 82 ரன்களையும், நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 62 ரன்களையும் எடுத்த விராட் கோலி, பங்களாதேஷுக்கு எதிரான இன்றைய ஆட்டத்திலும் 64 ரன்கள் குவித்துள்ளார். இந்த ஆட்டத்தில் விராட் 16 ரன்களை எட்டியபோது டி20 உலகக் கோப்பையில் 1017 ரன்களைத் தொட்டார். இதன் மூலம் டி20 உலகக்கோப்பையில் அதிக ரன்களை எடுத்தவர்களின் பட்டியலில் இதுவரை 1016 ரன்களை எடுத்து முதலிடத்திலிருந்த இலங்கை கிரிக்கெட் வீரரான மஹேலா ஜெயவர்தனேயின் சாதனையை முறியடித்தார். இதன் மூலம் டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்களைக் குவித்த வீரர் என்ற சாதனையையும் தன் வசமாக்கியிருக்கிறார்.