Published:Updated:

சுப்மன் கில்: "ஆகாஷ் மத்வால் ஓவரில் 3 சிக்ஸர்கள் அடித்தபோதே இது என்னுடைய நாள் என்று உணர்ந்தேன்!"

சுப்மன் கில்

ஆட்டநாயகன் விருதைப் பெற்ற பின், அணியின் வெற்றி குறித்து சுப்மன் கில் பேசியிருக்கிறார்.

Published:Updated:

சுப்மன் கில்: "ஆகாஷ் மத்வால் ஓவரில் 3 சிக்ஸர்கள் அடித்தபோதே இது என்னுடைய நாள் என்று உணர்ந்தேன்!"

ஆட்டநாயகன் விருதைப் பெற்ற பின், அணியின் வெற்றி குறித்து சுப்மன் கில் பேசியிருக்கிறார்.

சுப்மன் கில்

நேற்று நடைபெற்ற ப்ளேஆஃப் சுற்றின் குவாலிபையர் 2 ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பைனலுக்கு முன்னேறி இருக்கிறது  குஜராத் டைட்டன்ஸ் அணி.

குஜராத் டைட்டன்ஸ் அணி
குஜராத் டைட்டன்ஸ் அணி

குஜராத் அணியின் இந்த வெற்றிக்கு சுப்மன் கில் மிக முக்கிய பங்காற்றியிருக்கிறார். நேற்றைய ஆட்டத்தில் மட்டும் 60 பந்துகளில் ஏழு பவுண்டரி, பத்து சிக்ஸர் உடன் 129 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதைப் பெற்றிருக்கிறார். ஆட்டநாயகன் விருதை பெற்றப் பின் பேசிய சுப்மன் கில், “நான் ஆகாஷ் மத்வால் ஓவரில் மூன்று சிக்ஸர்கள் அடித்தபோதுதான் இது என்னுடைய நாள் என்று உணர்ந்தேன். அதிக சிக்ஸர்களை அடிப்பது என்பது நாம் நினைக்கக் கூடிய அளவிற்கு எளிதான ஒரு விஷயம் அல்ல. நீங்கள் தொடர்ந்து அதற்காக முயற்சி செய்ய வேண்டும்.  

இது உங்களுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு நல்ல சீசனுக்கு உதவுகிறது. கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இந்த மாற்றம் தொடங்கியது. 2021-ம் ஆண்டு எனக்குக் காயம் ஏற்பட்டது. ஆனால் நான் தொடர்ந்து விளையாட்டில் கவனத்தைச்  செலுத்தி வந்தேன்.

சுப்மன் கில்
சுப்மன் கில்

உங்கள் மீது வைக்கப்படும் எதிர்ப்பார்ப்புகள் எல்லாம் பவுண்டரி எல்லைக்கு வெளியே உங்களைத் தொடர்பவை. எப்போது களத்திற்குள் நீங்கள் நுழைகிறீர்களோ, அப்போதிருந்து அணிக்கு உங்களால் எப்படிச் சிறப்பாகப் பங்களிக்க முடியும் என்பதில்தான் உங்கள் கவனம் இருக்க வேண்டும்! நீங்கள் எப்பொழுதும் நீங்களாகவே மைதானத்திற்குள் செல்ல வேண்டும். இது என்னுடைய சிறந்த ஐபிஎல் இன்னிங்ஸ் என்றே நினைக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.