மே 1-ஆம் தேதி நடைபெற்ற பெங்களூரு அணிக்கு எதிரானப் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனான கே. எல் ராகுலுக்கு தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டிருந்தது. இதனால் மே 3-ஆம் தேதி நடைபெற்ற சென்னைக்கு எதிரான போட்டியில் கே. எல் ராகுல் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக க்ருணால் பாண்டியா லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட்டிருந்தார்.

காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் கே.எல் ராகுல் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்திருந்த நிலையில் அவர் ஐபிஎல் சீசனில் இருந்து அதிகாரபூர்வமாகவே விலகினார். அவருக்கு பதில் கருண் நாயரை லக்னோ அணி மாற்று வீரராக அறிவித்திருந்தது.
இந்நிலையில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட கே.எல் ராகுல் தனது உடல்நிலை குறித்த அப்டேட்டை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிடடிருந்த பதிவில், “ எனக்கு மேற்கொண்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துவிட்டது. எனக்கு பக்கபலமாக இருந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களுக்கு நன்றி. நான் விரைவில் குணமடைந்து களத்திற்கு வந்து தனது சிறப்பான ஆட்டத்தைக் கொடுப்பேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.