Published:Updated:

`India Please Help' - கெவின் பீட்டர்சனின் கோரிக்கை; வருமான வரித்துறை வழங்கிய தீர்வு!

கெவின் பீட்டர்சன் ( twitter )

"என்னுடைய பான் கார்டைத் தொலைத்துவிட்டேன், நான் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளேன். பிஸிகல் பான் கார்ட் தேவைப்படுகிறது." -கெவின் பீட்டர்சன்

`India Please Help' - கெவின் பீட்டர்சனின் கோரிக்கை; வருமான வரித்துறை வழங்கிய தீர்வு!

"என்னுடைய பான் கார்டைத் தொலைத்துவிட்டேன், நான் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளேன். பிஸிகல் பான் கார்ட் தேவைப்படுகிறது." -கெவின் பீட்டர்சன்

Published:Updated:
கெவின் பீட்டர்சன் ( twitter )

இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட்டர் கெவின் பீட்டர்சன் ஒவ்வொரு IPL போட்டிகளின் போதும் இந்தியாவிற்கு வருகை தருவது வழக்கம். அவர் சமீபத்தில் பதிந்துள்ள ட்விட்டில் "என்னுடைய பான் கார்டைத் தொலைத்துவிட்டேன், நான் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளேன். பிஸிகல் கார்ட் தேவைப்படுகிறது. யாரேனும் தயவுசெய்து யாரை அணுகுவது என்பதைத் தெரிவிக்க முடியுமா" எனக் கேட்டிருந்தார். இதனை ஹிந்தியிலும் பதிவிட்டு பிரதமர் நரேந்திரமோடியை டேக் செய்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள வருமான வரித்துறை "நாங்கள் உங்களுக்கு உதவ உள்ளோம். நீங்கள் பான் கார்டு குறித்த விபரங்களை வைத்திருந்தால் இந்த இணைய இணைப்பில் சென்று பிஸிகல் பான் கார்ட் பெற விண்ணப்பிக்கலாம். பான் விபரங்கள் இல்லையெனில் இந்த மெயில் ஐடிக்கு உங்கள் கோரிக்கையை அனுப்புங்கள்" என பதில் ட்வீட் செய்துள்ளார்கள்.

இதற்கு நன்றி தெரிவித்த கெவின் பீட்டர்சன் தங்களுக்கு மெயில் அனுப்பியுள்ளேன். "தங்களோடு பேசுவதற்கு யாரேனும் எனக்கு தனிப்பட்ட முறையில் செய்தி அனுப்ப முடியுமா? " எனக் கேட்டுள்ளார். கெவின் ட்விட்டரில் 3.8 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டிருப்பவர். முன்னாள் கிரிக்கெட்டரான கெவின், பல IPL டீம்களில் விளையாடிய அனுபவம் உளளவர், தற்போது IPL வர்ணனையில் பணியாற்றுகிறார்.