Published:Updated:

Virat Kohli: ``நீங்க டெல்லி கேப்பிட்டல்ஸூக்கு வந்துருங்க கோலி..."-வைரலாகும் பீட்டர்சன் பதிவு

கெவின் பீட்டர்சன், விராட் கோலி

விராட் கோலி தொடர்பாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான கெவின் பீட்டர்சன் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Published:Updated:

Virat Kohli: ``நீங்க டெல்லி கேப்பிட்டல்ஸூக்கு வந்துருங்க கோலி..."-வைரலாகும் பீட்டர்சன் பதிவு

விராட் கோலி தொடர்பாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான கெவின் பீட்டர்சன் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கெவின் பீட்டர்சன், விராட் கோலி
நேற்றைய ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி தோல்வியுற்று பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியிருந்தாலும் விராட் கோலி 61 பந்தகளில் சதம் அடித்து சிறப்பாக விளையாடி இருந்தார்.

தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய  விராட் கோலி, இந்த சீசனில் 14 ஆட்டங்களில் 639 ரன்களைக் குவித்திருக்கிறார். அதுமட்டுமன்றி இரண்டு சதமும், 6 அரை சதமும் அடித்திருக்கிறார். கோலி சிறப்பாக விளையாடி இருந்தாலும் வழக்கம்போல் பெங்களூர் அணி சொதப்பி பிளே ஆப்ஸ் சுற்று வாய்ப்பில் இருந்து வெளியேறியது அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கி இருக்கிறது.

விராட் கோலி
விராட் கோலி

இந்நிலையில் கெவின் பீட்டர்சன் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அப்பதிவில் ஆர்சிபி அணியை விட்டு விராட் கோலி விலகி  டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக விளையாட வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று குறிப்பிட்டிருக்கிறார். கெவின் பீட்டர்சனின் இந்தப் பதிவு இணயத்தில் வைரலானதைத் தொடர்ந்து பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.  

பீட்டர்சனின் இந்தப் பதிவு குறித்தும், கோலி ஆர்.சி.பியில் தொடரலாமா? இல்லை வேறு எந்த அணிக்கு அவர் சென்றால் நன்றாக இருக்கும்? உங்கள் கருத்தை கமென்ட்டில் பதிவிடுங்கள்!