Published:Updated:

கீகன் பீட்டர்சன் - இந்தியாவை வீழ்த்திய புதிய தென்னாப்பிரிக்க நட்சத்திரம்!

Keegan Petersen ( AP )

இந்திய அணி தென்னாப்பிரிக்காவிடம் வீழ்ந்தது என்பதை விட கீகன் பீட்டர்சனிடம் வீழ்ந்தது என்றே சொல்ல வேண்டும். யார் இந்த கீகன் பீட்டர்சன்?

கீகன் பீட்டர்சன் - இந்தியாவை வீழ்த்திய புதிய தென்னாப்பிரிக்க நட்சத்திரம்!

இந்திய அணி தென்னாப்பிரிக்காவிடம் வீழ்ந்தது என்பதை விட கீகன் பீட்டர்சனிடம் வீழ்ந்தது என்றே சொல்ல வேண்டும். யார் இந்த கீகன் பீட்டர்சன்?

Published:Updated:
Keegan Petersen ( AP )

தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் தோற்றிருக்கிறது இந்தியா. இத்தொடரில், இந்தியாவின் வெற்றியை பறிக்க ஸ்மித் இல்லை; காலிஸ் இல்லை; ஸ்டெய்ன் இல்லை. ஆனால், பள்ளி சிறுவன் தோற்றத்தில் ஒல்லியான தேகத்தோடு கீகன் பீட்டர்சன் என்பவர் இருந்தார். அவர் முன்னெடுத்த அந்தப் போராட்டம், அதன் விளைவாக அவர் அடித்த அந்த மூன்று அரைசதங்கள்... அவைதான் வலிமையான இந்திய அணியை ஓட்டைகள் நிறைந்த தென்னாப்பிரிக்க அணி வீழ்த்த மிக முக்கிய காரணமாக அமைந்தது. கீகன் பீட்டர்சன் - தென்னாப்பிரிக்க அணியின் புதிய நாயகனாக... தொடரின் நாயகனாக உருவெடுத்திருக்கிறார்!

கீகன் பீட்டர்சனை யங்ஸ்டர்ஸ் லிஸ்டில் சேர்த்திட முடியாது. இப்போதுதான் அறிமுகம் ஆயிருக்கிறாரென்றாலும் அவருக்கு 28 வயதாகிறது. தொடர்ந்து முதல் தர கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியிருந்தார். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. 100 முதல் தர போட்டிகளில் ஆடியிருந்தும் அதிர்ஷ்டம் கைகூடவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தியாவிற்கு எதிரான இந்தத் தொடருக்கு முன்பாக கீகன் பீட்டர்சன் இரண்டே இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடியிருந்தார். வெஸ்ட் இண்டீஸிற்கு எதிரான அந்த இரண்டு போட்டியிலும் அவர் பெரிதாக பெர்ஃபார்ம் செய்திருக்கவில்லை. உள்ளூர் போட்டிகளில் அவரின் சிறப்பான ஆட்டம் காரணமாக இந்தியாவிற்கு எதிரான தொடரிலும் இடம் கிடைத்தது. முதல் போட்டியில் பெரிதாக ரன் எடுக்காவிட்டாலும், அடுத்த இரண்டு போட்டிகளிலும் தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு மிகமுக்கியக் காரணமாக விளங்கியிருக்கிறார் அவர். தொடர்ந்து மூன்று அரைசதங்கள். கேப்டவுன் டெஸ்ட்டின் இரண்டு இன்னிங்ஸிலுமே அரைசதம். இந்திய அணி தென்னாப்பிரிக்காவிடம் வீழ்ந்தது என்பதை விட கீகன் பீட்டர்சனிடம் வீழ்ந்தது என்றே சொல்ல வேண்டும்.

அவரைப் பற்றி முழுவதுமாகத் தெரிந்துகொள்ள மேலே இருக்கும் வீடியோவைப் பார்க்கவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism