Published:Updated:

Virat Kohli: ‘நாயகன் மீண்டும் வருவாரா?'- கோலிக்கு ஆதரவாக, எதிராக குவியும் விமர்சனங்கள்!

Virat Kohli

உலகின் நம்பர் 2 டெஸ்ட் பவுலர் அஷ்வின் வெளியே உட்கார வைக்கப்படும் போது, நம்பர் 1 கோலியை ஏன் உட்கார வைக்கக் கூடாது?

Virat Kohli: ‘நாயகன் மீண்டும் வருவாரா?'- கோலிக்கு ஆதரவாக, எதிராக குவியும் விமர்சனங்கள்!

உலகின் நம்பர் 2 டெஸ்ட் பவுலர் அஷ்வின் வெளியே உட்கார வைக்கப்படும் போது, நம்பர் 1 கோலியை ஏன் உட்கார வைக்கக் கூடாது?

Published:Updated:
Virat Kohli
கோலியின் 71-வது சதம் எப்போது வரும் வரும் என்பதுதான் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் சுழன்றுகொண்டிருக்கும் மிகப்பெரிய கேள்வி. கடந்த தசாப்தத்தில் உலக கிரிக்கெட் அரங்கில் விளையாடிய ஆகச்சிறந்த பேட்டராக விராட் கோலியை எளிதில் கைகாட்டிவிடலாம்.

அந்தளவுக்கு மூன்று வகை கிரிக்கெட்டிலும் எதிரணியை ஆதிக்கம் செலுத்தி இருக்கிறார் அவர். இந்திய அணியின் 'ரன் மெஷின்' என பார்க்கப்பட்ட அவருக்கு, இந்திய அணியில் தொடர்ந்து இருக்க வேண்டுமா என விவாதங்கள் வரும் என்று யாரும் கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்கள். தன் 71-வது சதத்தை கோலி அடிக்க வேண்டும் என ரசிகர் ஒருவர் அன்னதானம் வழங்கியது சமீபத்தில் வைரலானது. இப்படி இருக்கையில் விராட் கோலியில் தற்போதைய ஃபார்ம் குறித்து தற்போதைய மற்றும் முன்னாள் வீரர்கள் பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Kohli - Rohit
Kohli - Rohit

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரோஹித் சர்மா

கோலியைப் பற்றி விவாதிக்க இப்போது என்ன உள்ளது. இந்திய அணிக்காக பல போட்டிகளில் ஆடி வருகிறார் அவர். வீரர்கள் தங்கள் கரியரில் ஏற்ற இறக்கங்களை சந்திக்க கூடியது இயல்புதான். கோலி தன் பழைய ஆட்டத்திற்கு திரும்ப ஒன்று அல்லது இரண்டு இன்னிங்ஸ் போதுமானது!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கபில்தேவ்

விராட் கோலி என்றவுடன் நம் நினைவுக்கு வருவது அவரின் திறமையான ஆட்டங்கள்தான். அப்படி தன் திறமையால் அறியப்பட்ட கோலி இன்று ஃபார்மில்லாமல் தடுமாறுகிறார் என்றால், ஃபார்மில் உள்ள இளம் வீரர்களை வெளியே உட்கார வைப்பது நியாயமில்லை. உலகின் நம்பர் 2 டெஸ்ட் பவுலர் அஷ்வின் வெளியே உட்கார வைக்கப்படும் போது, நம்பர் 1 கோலியை ஏன் உட்கார வைக்கக்கூடாது!

Kapil Dev - Kohli
Kapil Dev - Kohli

வெங்கடேஷ் பிரசாத்

ஒரு வீரர் தன் பழைய சாதனைகளையும் புகழையும் மட்டும் வைத்து இந்திய அணியில் இடத்தை தக்கவைத்துக் கொள்வது சரியானது அல்ல. இந்திய அணியின் சிறந்த வீரர்களான கங்குலி, சேவாக், யுவராஜ், ஹர்பஜன், ஜாகீர் போன்றோர் ஃபார்மில் இல்லாத போது டிராப் செய்யப்பட்டனர். அவர்கள் உள்ளூர் போட்டிகளுக்கு திரும்பி சென்று தங்களுடைய ஃபார்மை மீட்டு, மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டிற்கு வந்து தங்களை நிரூபித்து பல சாதனைகளை நிகழ்த்தினர்.

சவுரவ் கங்குலி

விராட் கோலியின் தற்போதைய நிலையில் நான், சச்சின், டிராவிட் என அனைவரும் இருந்துள்ளோம். இனிவரும் வீரர்களும் இருப்பார்கள். விளையாட்டின் ஒரு பகுதி இது. விராட் கோலியின் சர்வதேச ரன்களைப் பாருங்கள். திறமையும், தரமும் இல்லாமல் ஒரு வீரரால் இத்தனை ரன்களைக் குவிக்க முடியாது. அவர் கடினமான நேரத்தில் உள்ளார். அது அவருக்கும் நன்றாக தெரியும். 12 வருடங்களாக ரன்கள் குவித்து வரும் கோலிக்கு தான் திரும்பி அதே கோலியாக மாறுவதற்கு வழி தெரியும். அதை நிச்சயம் அவர் செய்வார். அவரின் கம்பேக்காக நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

Ganguly - Kohli
Ganguly - Kohli

முஸ்டாக் அஹ்மத் (இங்கிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர்)

நான் இங்கிலாந்தின் பயிற்சியாளராக இருந்த போது, ஜோனதன் டிராட் அதிக ரன்களை அடித்துக்கொண்டு இருந்தார். ஒரு கட்டத்தில் ரன்கள் அடிக்காமல் திணறினார். அதற்கு குடும்பம், சோர்வு என எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். ஆனால், நாங்கள் அவரை அப்போது டிராப் செய்யவில்லை. அவர் 2013 அணியிலிருந்து விலகினார். பின்னர் அவரால் அணிக்குள் வரவே முடியவில்லை. இந்த நிலையில் தான் கோலியும் உள்ளார். அவருக்கு இப்போது 3-4 மாதங்கள் ஓய்வு தேவை. நீங்கள் பசியோடு இருக்கும் போதுதான், சாப்பாடு இன்னும் ருசியாக தோன்றும். அதே போலத்தான் தான் கிரிக்கெட்டும்.

அஷ்வின்

கடந்த இரண்டு வருடங்களாக அவர் சதங்கள் அடிக்கவில்லை தான். ஆனால், அவர் நன்றாக தான் பேட்டிங் செய்கிறார். நான் இந்தியாவில் கடந்த வருடம் ஆடிய டெஸ்ட் போட்டியில் (நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்) கோலி இல்லை. அவரின் எனர்ஜியை நான் மிஸ் செய்தேன். அவர் களத்தில் இருக்கும் போது அவரின் எனர்ஜி மற்றவர்களிடமும் பரவக்கூடியது. அந்த எனர்ஜி தான் கோலி.

Kohli - Buttler
Kohli - Buttler

ஜாஸ் பட்லர்

விராட் கோலியும் ஒரு மனிதர் தான் என்பதை அவர் குறைந்த ரன்கள் அடிக்கும் போதுதான் புரிகிறது. உலகின் சிறந்த வீரர் அவர். அவர் அடித்த ரன்கள் அவர் யார், எப்படிப்பட்ட வீரர் என்பதை சொல்லும். இந்தியாவிற்காக எத்தனையோ ஆட்டங்களை வென்று கொடுத்தவர். நிச்சயமாக வெகுவிரைவில் ஃபார்மிற்கு வருவார். ஆனால் ஒரு எதிரணியின் கேப்டனாக அது எங்களுக்கு எதிராக இருக்கக் கூடாது என்று நினைக்கிறேன்.

பாகிஸ்தான் முன்னாள் வீரர் கனேரியா

சீனியர் வீரர்கள் இல்லாதபோதும் இளம் வீரர்கள் நன்றாக தான் விளையாடியுள்ளனர். அணிக்கு சுமையாக உள்ளதை என்பதை கோலி புரிந்து கொள்ள வேண்டும். அவர் இடத்தை விட்டு தர வேண்டும் அல்லது டி20 உலகக்கோப்பைக்கு முன் கம்பேக் தர வேண்டும்.சீனியர் வீரர்கள் இல்லாமல் எந்த அணியும் நன்றாக விளையாட முடியாது என்பது ஒன்று இல்லை.

சோயிப் அக்தர்

கோலியைப் பற்றி நிறைய விமர்சனங்களை நான் சமீபகாலமாக கேட்கிறேன். கோலியின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று என்னிடம் சொல்கிறார்கள். கோலி கடந்த பத்தாண்டுகளாக உலகின் தலைசிறந்த வீரர். இந்த இரண்டுகளில் அவர் சதம் தான் அடிக்கவில்லையே தவிர, ரன்கள் அடிக்காமல் இல்லை.

Pietersen - Kohli
Pietersen - Kohli

கெவின் பீட்டர்சன்

நீ கிரிக்கெட்டில் செய்ததை இங்கு விமர்சிப்பவர்களால் கனவு மட்டுமே காண முடியும். உன் அளவுக்கு சிலர் இதற்கு முன்னர் விளையாடி உள்ளனர். நீ விரைவில் திரும்பி வந்து பெரிய ரன்களைக் குவிப்பாய் என நம்புகிறேன்.

உண்மையிலேயே ஃபார்மில் இல்லையா கோலி?

இதுவரை 70 சதங்கள் அடித்துள்ள கோலி, சச்சினின் 100 சதங்களை சாதனையை முறியடிப்பார் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். அதற்காக 2 வருட காலத்திற்கும் மேலாக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். சதம் அடிக்காததால் கோலி ஃபார்மில் இல்லை என நினைக்கும் அளவுக்கு முன்னர் ரன்களை குவித்திருக்கிறார் அவர். அதுதான் கோலியின் ஆட்டத்திற்கு சாட்சி. டெஸ்ட் போட்டிகளில் கோலி 2019-க்கு பிறகு சரியாக ஆடவில்லை என்பதுதான் உண்மை. 18 போட்டிகளில் 872 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் லைனில் அதிகளவில் ஆட்டமிழந்து வருகிறார் கோலி.

2019-க்கு பிறகு ஆஸ்திரேலியாவில் நடந்த ஒருநாள் போட்டிகளில் நன்றாக விளையாடினார். இங்கிலாந்து, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிராக தலா 2 அரை சதங்கள் அடித்தார். மொத்தம் 9 அரை சதங்கள் அடித்துள்ளார். 2019-க்கு பிறகு டி20-யில் 6 அரை சதங்கள் அடித்துள்ளார். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, உலகக்கோப்பை போன்ற தொடர்களில் கோலி சிறப்பாக தான் ஆடியுள்ளார். ஆனால், தற்போது டி20 உலகக்கோப்பை அணியில் அவரின் இடத்தை கேள்விக்குள்ளாகிவருகிறது

Virat Kohli
Virat Kohli

அதற்காக கோலி சிறந்த ஃபார்மில்தான் உள்ளார் என்றும் சொல்லிவிட முடியாது. சில சறுக்கல்களை அவர் சந்தித்துள்ளார் என்பது மறுக்க முடியாத உண்மை. களத்திற்கு வெளியே ஒரு வீரனைப் பற்றி ஆயிரம் பேர் ஆயிரம் பேசலாம், அதற்கான பதிலை களத்திற்கு வந்து அவன் ஆடும் ஆட்டம் தான்.

‘நாயகன் மீண்டும் வரான்’ என தன் 71-வது சதத்தையும், தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலையும் கோலி மிக விரைவில் தருவார் என நம்புவோம்!