Published:Updated:

''முதல்ல நானே ஸ்பின்னர்தான்டா''... ஆறே ஓவர்களில் இந்தியாவின் கதையை முடித்த 'ரூட்'டு தல! #JoeRoot

பெஸ் இல்லாமல் வெறும் லீச்சோடு களமிறங்கி தவறிழைத்துவிட்டது இங்கிலாந்து என எல்லோரும் ரூட்டை விமர்சித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், ரூட்டோ ''நானே முதல்ல ஸ்பின்னர்தான்டா... அப்புறம்தான் இந்த FAB4 பேட்ஸ்மேன் எல்லாம்'' என வெறியோடு களமிறங்கி கொத்துகொத்தாக விக்கெட்டுகளைத் தூக்கினார்.

''இரண்டாவது ஸ்பின்னர் இல்லைன்னா சிரிச்சீங்க... நானே வரேன்டா'' என வெறியோடு களமிறங்கி ஆறே ஓவர்களில் 5 சம்பவங்கள் செய்து இந்தியாவின் கதையை 145 ரன்களுக்குள் முடித்திருக்கிறார் ஜோ ரூட்.

கேப்டனாக பேட்டிங்கில் காப்பாற்றமுடியாவிட்டாலும், பெளலிங்கில் தன் அணியை காப்பாற்றி கரைசேர்த்திருக்கிறார் ஜோ ரூட். இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது.

99 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்திருந்த இந்தியாவின் பேட்டிங்கை இன்று ரோஹித் ஷர்மாவும், அஜிங்கியா ரஹானேவும் விட்ட இடத்தில் இருந்து தொடங்கினார்கள். ஆட்டம் தொடங்கிய ஆறாவது ஓவரில் இன்றைய நாளின் விக்கெட் கணக்கைத் தொடங்கினார் ஜேக் லீச். 7 ரன்களில் ரஹானே ஆட்டம் இழந்தார். அடுத்தாக ஜேக் லீச்சே ரோஹித் ஷர்மாவின் விக்கெட்டையும் தூக்கினார். ரோஹித் 66 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

பெஸ்ஸை நீக்கிவிட்டு வெறும் லீச்சோடு களமிறங்கி தவறிழைத்துவிட்டது இங்கிலாந்து என எல்லோரும் கேப்டன் ரூட்டை விமர்சித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், ரூட்டோ ''நானே முதல்ல ஸ்பின்னர்தான்டா... அப்புறம்தான் இந்த FAB4 பேட்ஸ்மேன் எல்லாம்'' என வெறியோடு களமிறங்கி கொத்துகொத்தாக விக்கெட்டுகளைத் தூக்கினார். ஓவருக்கு ஒன்றாக இந்திய பேட்ஸ்மேன்களை மோடி ஸ்டேடியத்தின் பெவிலியனுக்கு அனுப்பிக்கொண்டேயிருந்தார் ரூட்.

#JoeRoot
#JoeRoot

பன்ட், வாஷிங்டன், அக்ஸர், அஷ்வின் பும்ரா என 6.2 ஓவர்களில் வெறும் 8 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட் ஹால் எடுத்து அசத்தியிருக்கிறார் ஜோ ரூட். இந்தியா 145 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்தியாவின் லீட் வெறும் 33 ரன்களே எனும் நிலையில் இங்கிலாந்து தனது இரண்டாவது இன்னிங்ஸைத் திணறலோடு தொடங்கியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு