Election bannerElection banner
Published:Updated:

நூறாவது டெஸ்ட்டில் 100... சென்னையில் தொடரும் 'ரூட்'டு தலயின் தரமான இன்னிங்ஸ்! #JoeRoot

ஜோ ரூட்
ஜோ ரூட்

இங்கிலாந்தின் ஸ்கோர் 63 ரன்களில் இருக்கும்போது களமிறங்கிய கேப்டன் ஜோ ரூட், சிப்லியுடன் இணைந்து மிகச்சிறந்த இன்னிங்ஸ் ஆடிவருகிறார். 164 பந்துகளில் 100 ரன்கள் அடித்து தனது 19வது சதத்தை நிறைவுசெய்தார் ரூட்.

சென்னை சேப்பாக்கத்தில் தனது கிரிக்கெட் கரியரின் நூறாவது டெஸ்ட்டில் நூறு ரன்கள் அடித்து மிகச்சிறந்த இன்னிங்ஸை ஆடிக்கொண்டிருக்கிறார் ஜோ ரூட். ஃபேபுலஸ் 4 வீரர்களில் ஒருவராகக்கொண்டாடப்படும் ஜோ ரூட்டின் 19வது சதம் இது!

இந்தியா - இங்கிலாந்துக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று சென்னையில் தொடங்கி நடந்துவருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கைத் தேர்ந்தெடுக்க காலையில் இரண்டு விக்கெட்கள் விழுந்ததோடு சரி. அதன்பிறகு விக்கெட் விழாமல் ஜோ ரூட்டும், டாம் சிப்லியும் விளையாடிவருகிறார்கள்.

இங்கிலாந்தின் ஸ்கோர் 63 ரன்களில் இருக்கும்போது களமிறங்கிய கேப்டன் ஜோ ரூட், சிப்லியுடன் இணைந்து மிகச்சிறந்த இன்னிங்ஸ் ஆடிவருகிறார். அஷ்வின், சுந்தர், பும்ரா, இஷாந்த், நதீம் என எல்லா பெளலர்களையும் சமாளித்து 164 பந்துகளில் 100 ரன்கள் அடித்து தனது 19வது சதத்தை நிறைவுசெய்தார் ஜோ ரூட்.

நூறாவது டெஸ்ட்டில் 100... சென்னையில் தொடரும் 'ரூட்'டு தலயின் தரமான இன்னிங்ஸ்! #JoeRoot

சமீபத்தில் இலங்கைக்கு எதிராக நடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளின் முதல் இன்னிங்ஸிலும் 228, 186 என ரன் வேட்டை நடத்தியவர் ஜோ ரூட் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூட் - சிப்லி கூட்டணியை உடைக்கமுடியாமல் திணறிவருகிறது இந்திய அணி.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு