Published:Updated:

"என் கிரிக்கெட் வாழ்வு முடிந்துவிடக்கூடாது எனப் பிராத்திக்கிறேன்!"- ஆதங்கத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன்

ஜேம்ஸ் ஆண்டர்சன்

ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் படுதோல்வி அடைந்ததையடுத்து அணியில் சில அதிரடி மாற்றங்களை மேற்கொண்டிருக்கிறது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.

"என் கிரிக்கெட் வாழ்வு முடிந்துவிடக்கூடாது எனப் பிராத்திக்கிறேன்!"- ஆதங்கத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன்

ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் படுதோல்வி அடைந்ததையடுத்து அணியில் சில அதிரடி மாற்றங்களை மேற்கொண்டிருக்கிறது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.

Published:Updated:
ஜேம்ஸ் ஆண்டர்சன்
இந்திய அணியில் தான் தேர்வு செய்யப்படாதது குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு தன் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார் ரித்திமான் சாஹா. 37 வயது நிரம்பிய சாஹா சில ஆண்டுகளாவே அணியின் பேக்-அப் கீப்பராக மட்டுமே செயல்பட்டுவருகிறார். ஆனால் அவர் தெரிவித்த கருத்தே இங்கு அத்தனை பெரிய பேசு பொருளாக உருவெடுத்தது.
ஜேம்ஸ் ஆண்டர்சன்
ஜேம்ஸ் ஆண்டர்சன்

அதேபோல தற்போது தொடர் ஃபார்ம் அவுட்டில் மீள முடியாமல் தவிக்கும் அணியின் மூத்த பேட்டார்களான ரஹானே மற்றும் புஜாரா இந்திய அணியில் இடம்பெறாமல் ரஞ்சி தொடருக்கு திரும்பியுள்ளார்கள். அவர்கள் இடத்தில் எதிர்கால இந்திய அணிக்கான அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. சீனியர் வீரர்கள் குறித்து இந்திய கிரிக்கெட்டில் இப்படியான நடைமுறை இருக்க உலகின் தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர்களுள் ஒருவராகக் கருதப்படும் ஜேம்ஸ் ஆண்டர்சனையும் அவரது பௌலிங் பார்ட்னரான ஸ்டூவர்ட் ப்ராடையும் ஒரே சேர நீக்கி மேற்திந்திய தீவுகளுக்கு எதிரான அணியை அறிவித்திருந்தது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் படுதோல்வி அடைந்ததையடுத்து அணியில் சில அதிரடி மாற்றங்களை மேற்கொண்டிருக்கிறது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். இவர்கள் இருவரை தவிர ஜோஸ் பட்லர், டேவிட் மலன், ரோரி பர்ன்ஸ், ஹஸீப் ஹமீத், சாம் பில்லிங்ஸ், டாம் பெஸ் ஆகியோரும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் இடம் பெறவில்லை.

ஸ்டூவர்ட் ப்ராட் - ஜேம்ஸ் ஆண்டர்சன்
ஸ்டூவர்ட் ப்ராட் - ஜேம்ஸ் ஆண்டர்சன்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள வீரர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் ஆண்டர்சன். வேகப்பந்துவீச்சாளர்களே உரிய வயது இலக்கணங்கள் அனைத்தையும் உடைத்து தன் முப்பதுகளின் பிற்பகுதிகளிலும் மிகச் சிறப்பாக பந்துவீசி வரும் வீரர். அவரை போலவே டெஸ்ட் அரங்கில் 537 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள வீரர் ஸ்டுவர்ட் ப்ராட். இந்நிலையில் தான் அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து முதல் முறையை மனம் திறந்து பேசியுள்ளார் ஆண்டர்சன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"அணியில் தேர்வு செய்யப்படாதது மிகவும் அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக இருந்தாலும் இதையும் நான் கடந்துதான் ஆக வேண்டும். ஆனால் இதோடு என் கிரிக்கெட் வாழ்வு முடிந்துவிடக்கூடாது என பிராத்தனை செய்துகொள்கிறேன். ஏனென்றால் என்னுள் இன்னும் கிரிக்கெட் மீதமிருப்பதாக நான் நினைக்கிறன். மேலும் வெற்றிக்கான வேட்கையும், அணிக்காக விளையாடும் ஆர்வமும் என்னிடம் எந்தக் குறையும் இல்லாமல் இருக்கிறது.

இனி என் ஆட்டத்தில் கவனம் செலுத்தி அணிக்கு என்னால் என்ன செய்யமுடியம் என்பதை மக்களுக்கு மீண்டும் நிரூபிப்பேன்” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஆண்டர்சன்.

ஆண்டர்சன் - ப்ராட்டின் நீக்கம் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான ஷேன் வாட்சன் கருத்து தெரிவித்துள்ளார். "நடந்து முடிந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து பௌலர்களால் ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு அத்தனை நெருக்கடி ஒன்றும் ஏற்படுத்த முடியவில்லை. இதனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு சிறிது அதிருப்தி இருப்பதையும் என்னால் உணர முடிகிறது.

ஆனால், ஆண்டர்சன், ப்ராட் ஆகிய இருவரை விட அந்த அணியின் அடுத்த தலைமுறை வேகப்பந்து வீச்சாளர்கள் அத்தனை சிறப்பாக இல்லாத போது, இவர்களின் நீக்கத்தை நான் தவறாக முடிவாகவே கூறுவேன்" என்கிறார் வாட்சன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism