Published:Updated:

`பெரும் கனவுகள் உடையவன்; போராளி!'- `U19 ஸ்டார்' ஜெய்ஸ்வால் குறித்து நெகிழும் கிரிக்கெட் உலகம்

ஜெய்ஸ்வால்
ஜெய்ஸ்வால் ( BCCI )

``ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.2.4 கோடிக்கு இவரை வாங்கியுள்ளது. இன்னும் பல உயரங்களுக்கு ஜெய்ஸ்வால் செல்வார் என்கிற வார்த்தைகளை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்" என ஜெய்ஸ்வால் குறித்து பாகிஸ்தான் வீரர் சோயிப் அக்தரும் பேசியுள்ளார்.

19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ந்து 3-வது முறையாக இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது இந்தியா. இந்தப் போட்டியில் அதிரடியாக பேட்டிங் செய்த ஜெய்ஸ்வால்தான் கிரிக்கெட் உலகின் புதிய சென்சேஷன்.

இந்திய அணி
இந்திய அணி

ஜெய்ஸ்வால் குறித்து டெலிகிராஃப் ஊடகத்திடம் பேசிய அவருடைய சிறுவயது பயிற்சியாளர் ஜ்வாலா சிங், ``ஜெய்ஸ்வால், சதமடிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. உலகக்கோப்பைக்கு முன்னர், அவர் மீது அதிக எதிர்பார்ப்புகள் இருந்தன. இந்த எதிர்பார்ப்புகள், அவருக்கு அதிக அழுத்தத்தைக் கொடுக்கும் என நினைத்தேன். ஊடகங்கள், சமூக வலைதளங்கள் ஆகியவற்றிலிருந்து ஒதுங்கி மைதானத்தில் அதிக நேரத்தை செலவிடும்படி கூறினேன். அவர், பயிற்சி செய்தார். அதற்கான பலனையும் பெற்றார்.

யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 11 வயதாக இருக்கும்போது என்னை வந்து சந்தித்தார். மிகப்பெரிய கனவுகளுடன் இருந்தார். வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை அனுபவித்து, தூக்கம் இல்லாதபோதும், கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டார். இன்னும் அவர் கடுமையாக உழைக்க வேண்டும். நிச்சயம் உழைப்பார். மிக முக்கியமான இறுதிப்போட்டி அடுத்து காத்திருக்கிறது. அதிலும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். வெற்றிகரமான ஆல்-ரவுண்டராக அவரைப் பார்க்க ஆசைப்படுகிறேன்" என்று நெகிழ்ந்திருக்கிறார்.

உலகக்கோப்பை எனக்கு கனவு; காத்திருப்பேன் ஏமாற்றம் இல்லை - ஸ்ரேயாஸ் ஐயர் பாசிட்டிவ் மூவ்!

ஜெய்ஸ்வாலின் ஆட்டத்தைப் பார்த்து வியந்த பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் பேசுகையில், ``இந்தியாவின் ஜெய்ஸ்வால், தன்னுடைய கிராமத்திலிருந்து வெளியேறி மும்பைக்கு வந்து சிறிய பால்பண்ணைகளில் தூங்குவார். காலையில் பானி பூரி விற்கச் செல்வார். இப்போது, 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பையில் சதமடித்துள்ளார். அணியில் தன்னுடைய இடத்தைப் பிடிக்க போராடியுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.2.4 கோடிக்கு இவரை வாங்கியுள்ளது. இன்னும் பல உயரங்களுக்கு ஜெய்ஸ்வால் செல்வார் என்கிற எனது வார்த்தைகளை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்" என்றார்.

`பானிபூரி விற்பனை; கட்டாய சமையல் வேலை!' - சாதித்த 17 வயது `இரட்டை சத' நாயகன்

மேலும், ``கிரிக்கெட் விளையாடுவதற்கான சக்தியும் அதன்மீது அவருக்கு கனவும் ஆர்வமும் இருக்கிறது. சீனியர் அணியையும் வழிநடத்துவார் என்பது உறுதி. ஜெய்ஸ்வாலிடமிருந்து பாகிஸ்தான் அணி வீரர்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். சிறப்பாக விளையாடுவதை நோக்கி ஜெய்ஸ்வால் ஓடுகிறார். பணம் அவரை நோக்கி ஓடுகிறது" என புகழ்ந்திருக்கிறார்.

சோயிப் அக்தர்
சோயிப் அக்தர்

பாகிஸ்தான் அணி குறித்து பேசிய அவர், ``அரையிறுதி வரை சென்றுள்ள பாகிஸ்தான் அணிக்கு என்னுடைய வாழ்த்துகள். இது நல்ல முயற்சி. ஆனால், இறுதிப் போட்டிக்குச் செல்ல இந்தப் பயிற்சி போதாது. மிகவும் மோசமான ஃபீல்டிங்கை மேற்கொண்டுள்ளீர்கள். எனவே, இறுதிப் போட்டிக்கு உங்களால் தகுதிபெற முடியவில்லை" என்றார். அதேநேரம் இந்திய அணியின் வெற்றி குறித்து பேசிய அவர், `` இந்திய அணியினர் முழுமையான வெற்றியைப் பெற்றுள்ளார்கள். இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலம் சரியான நபர்களின் கைகளில் உள்ளது" என்றார்.

``இந்திய அணி அனுபவம் வாய்ந்ததாக தெரிவதற்கு முக்கிய காரணம் இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள்தான். U19 அணிக்குப் பயிற்சியாளராக யாரைக் கொண்டுவரப் போகிறீர்கள்?" என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை நோக்கி கேள்வியும் அக்தர் எழுப்பியுள்ளார்.

ஜெயிஸ்வால் 99 ரன்களில் இருக்கும்போது அணியின் வெற்றிக்கு 3 ரன்கள் தேவையாக இருந்தது. பாகிஸ்தானின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் அமீர் அலி வீசிய பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டு இந்த உலகக்கோப்பையில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். இந்த உலகக்கோப்பை முழுவதுமே சிறப்பானதொரு ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வாலுக்கு முக்கிய கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

`இதுக்காகவே வீ லவ் யூ தோனி..!' - ஒரு வெறித்தன ரசிகனின் உலகக்கோப்பை  
 அனுபவம்
அடுத்த கட்டுரைக்கு