Published:Updated:

`பார்த்த முதல் நொடி; 5 வருடக் காதல்!' - இஷாந்த் ஷர்மா பகிர்ந்த லவ் ஸ்டோரி

இஷாந்த் ஷர்மா - பிரதீமா
இஷாந்த் ஷர்மா - பிரதீமா

2016-ம் ஆண்டே இவர்களுக்குத் திருமணம் நடந்தாலும், காதல் கதை தொடர்பாக இஷாந்தும் வெளியில் எங்கும் வாய் திறந்ததில்லை.

விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா, ஹர்திக் பாண்டியா - நடாஷா ஸ்டான்கோவிக் காதல் கதை போலல்லாமல், இஷாந்த் சர்மா - பிரதீமா சிங் காதல் கதை பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பிரதிமாவின் கூடைப்பந்து பின்னணி பற்றி தெரிந்த ரசிகர்களுக்கு, அவர் எப்படி இஷாந்தைக் கரம்பிடித்தார், இஷாந்த் மற்றும் பிரதீமா இடையே காதல் எவ்வாறு தொடங்கியது என்பது பற்றி பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்காது. 2016-ம் ஆண்டே இவர்களுக்குத் திருமணம் நடந்தாலும், காதல் கதை தொடர்பாக இஷாந்தும் வெளியில் எங்கும் வாய் திறந்ததில்லை.

இஷாந்த் ஷர்மா - பிரதீமா
இஷாந்த் ஷர்மா - பிரதீமா

இந்நிலையில் சமீபத்தில் Cricbuzz-ன் புதிய ஷோ ஒன்றில் மனைவியுடன் கலந்துகொண்டார். அப்போது முதல் பார்வையில் காதலில் விழுந்தது குறித்து மனம் திறந்துள்ளார். ``என் நண்பர் ஏற்பாடு செய்த உள்ளூர் கூடைப்பந்து போட்டிக்குத் தலைமை விருந்தினராக சென்றேன். அந்தப் போட்டியில்தான் நான் பிரதீமாவைப் பார்த்தேன். பார்த்த முதல் நொடியிலேயே எனக்கு அவள் மீது காதல் வந்துவிட்டது. அவளைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அந்த நொடியிலேயே தீர்மானம் செய்துவிட்டேன். அடுத்த நாளிலிருந்து தவறாமல் போட்டிகளைப் பார்க்கச் சென்றுவிடுவேன்.

`தீபிகா படுகோனின் போட்டோ ஷூட்டும் ரன்வீரின் கமென்ட்டும்!' - இது தீப்வீர் காதல்

ஒருநாள் என் நண்பன், `ஒருநாள் விருந்தினராக வருவாய் என்று பார்த்தால் தினமும் வருகிறாயே?' என்று என்னிடம் கேட்டுவிட்டான். பிறகு, அவனிடம் இதைப் பற்றிச் சொல்லி இதை எப்படியாவது முன்னோக்கிக் கொண்டுச் செல்ல வேண்டும் எனக் கூறினேன். இருப்பினும் கூச்ச சுபாவம் இருந்ததால் பிரதீமாவிடம் பேசுவதற்குத் தயக்கமாக இருந்தது.

இஷாந்த் ஷர்மா - பிரதீமா
இஷாந்த் ஷர்மா - பிரதீமா

நான் அவளுடன் பேசமாட்டேன். கிட்டத்தட்ட ஒருவருடம் கழித்துதான் அவளிடம் பேசினேன்'' எனக் கூறும் இஷாந்த், பிரதீமாவிடம் பேசாவிட்டாலும் அவரின் சகோதரிகளுடன் எப்போதும் பேசிக்கொண்டே இருந்துள்ளார். இதைப் பார்த்த பிரதீமாவுக்கு அவர்கள் மீது பொறாமை ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.

‘ஓர்க் ஹார்ஸ்’ முத்திரை.. தோனி - கோலி கேப்டன்சி.. மனம் திறந்த இஷாந்த் சர்மா!

``ஒருவருடம் கழித்து நான் ஆஸ்திரேலியா செல்லும் சமயத்தில் என்னிடம் பேசினார் இஷாந்த். நான் திரும்பி வரும்போது என்னிடம் ஏதோ முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்றார். அந்தத் தருணத்தில் முக்கியமான விஷயம் என்றால் எல்லா பெண்களுக்குமே புரியும் எதைப் பற்றிப் பேசப்போகிறார் என்று. அந்தத் தருணம்தான் எனக்குத் தெரிந்தது அவர் என்னை விரும்புகிறார் என்று. அதன் பிறகே எனக்கு புரொபோஸ் செய்தார்" என நெகிழ்கிறார் பிரதீமா.

இஷாந்த் ஷர்மா - பிரதீமா
இஷாந்த் ஷர்மா - பிரதீமா

காதலை சொல்ல இஷாந்துக்கு ஒருவருடம் தேவைப்பட்டாலும், இருவரும் ஐந்து வருடம் காதலர்களாக வலம்வந்துள்ளனர். ஐந்து வருடம் கழித்தே இருவரும் திருமணம் செய்துள்ளனர். ``திருமணத்துக்குப் பின் என் வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது. திருமணத்துக்கு முன் என் வாழ்க்கை கிரிக்கெட் மட்டுமே என்று இருந்தேன். பயிற்சிக்குச் செல்வது, ஜிம்முக்கு செல்வது, வீடு திரும்புவது என்று இருந்த நான், திருமணத்துக்குப் பின்தான் பிரதீமா உடன் சேர்ந்து ஊர் சுற்றி வருகிறேன். அதேநேரம் திருமணத்துக்குப் பிறகுதான் எனக்கு பொறுப்புகளும் அதிகரித்துள்ளன" என்று மனம் திறந்துள்ளார் இஷாந்த்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு