1. நம்பூரி தாகூர் திலக் வர்மா, தற்போது நடைபெறும் ஐபிஎல் தொடரில் மும்மை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் இளம் வீரர்.
2. ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியைச் சேர்ந்த திலக், 2018-19-ல் ஹைதராபாத் அணிக்காக தனது முதல் ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடியிருந்தார்.

3. 21 வயதேயான இளம் வீரரான திலக் வர்மா கடந்த ஐபிஎல் தொடருக்கு முன்பான ஏலத்தில் மும்மை அணிக்காக 1.7 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
4. ஆல் ரவுண்டரான இவர் இதுவரை 15 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

5. பெங்களூர் அணிக்கு எதிராக விளையாடிய நேற்றைய போட்டி உட்பட இதுவரை ஆடியுள்ள போட்டிகளில் 481 ரன்களை குவித்துள்ளார், இதில் அதிகபட்சமாக நேற்று அடித்த 84 ரன்கள்தான் அவரின் அதிகபட்ச ஸ்கோராக. இதுபோக மேலும் மூன்று அரை சதங்களையும் அடித்துள்ளார்.
6. 2019 டிசம்பரில், 2020 ஆண்டில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பைத் தொடருக்கான இந்திய அணியிலும் இடம் பிடித்திருந்தார்.
7. சையத் முஷ்தாக் அலி தொடரிலும் சிறப்பாக ஆடிய இவரை ஐபிஎல் ஏலத்தில் எடுக்கச் சென்னை, ஹைதராபாத், ராஜஸ்தான் அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது. குறிப்பாக, சென்னையும் மும்பையும் திலக் வர்மாவிற்காக முட்டி மோதின. திலக் வர்மாவின் அடிப்படை விலையே ரூ.20 லட்சம்தான். ரூ.60 லட்சம் வரை ஏலம் எகிறிய நிலையில் சிஎஸ்கேவும் மும்பையும் மட்டும் விடாப்பிடியாக திலக்கிற்காக போட்டி போட்டிருந்தனர். ரூ.1.60 கோடி சிஎஸ்கே போராடிப் பார்த்தது. கடைசியில் ரூ.1.70 கோடிக்கு மும்பை அணி திலக்கை அள்ளிச் சென்றது.

8. இடதுகை பேட்ஸ்மேனான திலக், இதுவரை விளையாடிய ஐபிஎல் போட்டியில் 38 பவுண்டரிகள், 20 சிக்சர்களை விளாசியுள்ளார்.
9. பெங்களூர் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில், ஹர்ஷல் பட்டேல் ஓவரில், ஐந்து பந்துகளில் இரண்டு சிக்சர்கள், ஒரு பவுண்டரி அடித்து அசத்தினார் திலக் வர்மா.
10. 'திலக் வர்மா நேர்மறையான எண்ணம் கொண்டவர். கடுமையாக முயற்சி செய்து அணியை குறிப்பிடத்தக்க ஸ்கோரை நோக்கி நகர்த்தினார். அவர் தேர்ந்தெடுத்த சில ஷாட்களையெல்லாம் ஆட பயங்கர துணிச்சல் வேண்டும். அதற்காக திலக் வர்மாவிற்கு தலை வணங்குகிறேன்' பெங்களூருவுடனான போட்டிக்குப் பிறகு திலக் வர்மா குறித்து ரோஹித் இவ்வாறு பேசியிருந்தார்.