Published:Updated:

`தள்ளிப்போகுமா ஐ.பி.எல்... புதிய கேலரிகள் திறக்கப்படுமா?' - ஐபிஎல் அப்டேட்ஸ் #Corona

சேப்பாக்கம் மைதானம்
சேப்பாக்கம் மைதானம்

ஒருவேளை தொடர் திட்டமிட்டபடி தொடங்கினாலும் புதிய கேலரிகள் முழுமையாகத் திறக்கப்படுமா என்பதனைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்தியாவில் ஐ.பி.எல் ஃபீவர் தொடங்கும் நேரத்தில் ஐ.பி.எல் தொடர் நடக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கொரோனா பாதித்த நாட்டைச் சேர்ந்தவர்கள், அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டவர்கள் ஆகியோர் இந்தியாவுக்கு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐ.பி.எல் தொடரில் விளையாட உள்ள வெளிநாட்டினருக்கும் ஏப்ரல் மாதம் 15 -ம் தேதி வரையில் தடை விதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இது வெளிநாட்டு அணியின் வீரர்களை கேப்டன்களாகக் கொண்ட ஐ.பி.எல் அணிகளுக்குச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஐ.பி.எல் போட்டிகளை ஏப்ரல் 15 -ம் தேதிக்குப் பிறகு வைத்துக்கொள்ளலாம் என அந்த அணிகள் பிசிசிஐ-க்குக் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் வரும் 14 -ம் தேதி ஐ.பி.எல் தொடர்பாகச் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. அன்று, ஏப்ரல் 15 -ம் தேதிக்குப் பின்னர் போட்டிகள் நடைபெறுவதற்கான அறிவிப்பு வெளியாகும் என்ற தகவலும் வலம் வருகிறது. சென்னை அணியைப் பொறுத்தவரை வீரர்கள் தொடர்ச்சியாகப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தோனி
தோனி

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 8 ஆண்டுக்காலமாகத் திறக்கப்படாமல் இருக்கும் ஐ.ஜே.கே ஆகிய கேலரிகள் இந்த ஐ.பி.எல் தொடரின்போது திறக்கப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளன. விரைவில் இதற்கான அனுமதி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

எனினும் கொரோனா அச்சம் காரணமாகத் தற்போது இருக்கும் டிக்கெட்டுகள் முழுமையாக விற்றுத் தீருமா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. கேலரிகள் திறக்கப்பட்டும் காலி கேலரியாக இருந்தால் நன்றாக இருக்காது என போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் கருதுகின்றனர். ஒருவேளை கேலரிகள் திறக்க அனுமதி கிடைத்து, தொடர் திட்டமிட்டபடி தொடங்கினாலும் புதிய கேலரிகள் முழுமையாகத் திறக்கப்படுமா என்பதனைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Vikatan
சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியம்
சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியம்

ஐ.பி.எல் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் வரும் 14 -ம் தேதி விடை கிடைக்கும் என்கின்றன ஐ.பி.எல் வட்டாரங்கள். உள்ளூர் வீரர்களைக்கொண்டு தொடரைத் தொடங்கிவிட்டு, அடுத்ததாக தடை நீங்கிய பின்னர் வெளிநாட்டு வீரர்களைத் தங்கள் அணியில் இணைந்துகொள்ளலாம் என்ற முடிவிலும் உள்ளனர்.

எனவே, திட்டமிட்ட தேதியில் தொடர் தொடங்குமா அல்லது தள்ளிவைக்கப்படுமா என்பது இன்னும் ஓரிரு தினங்களில் தெரிந்துவிடும்!

அடுத்த கட்டுரைக்கு