Published:Updated:

ஐபிஎல்: நார்த் இந்தியன் லெவன் vs சௌத் இந்தியன் லெவன்... எப்படி இருக்கும்?!

என்.பி.ஏ ஆல்ஸ்டார் கேம் போல் ஐபிஎல் தொடரிலும் ஒரு போட்டி நடந்தால் எப்படி இருக்கும்... ஐபிஎல் அணிகளை நார்த், சௌத் என இரண்டு அணிகளாகப் பிரித்து ஒரு போட்டி நடத்தினால் எப்படி இருக்கும்?

ஐபிஎல்: நார்த் இந்தியன் லெவன் vs சௌத் இந்தியன் லெவன்... எப்படி இருக்கும்?!

என்.பி.ஏ ஆல்ஸ்டார் கேம் போல் ஐபிஎல் தொடரிலும் ஒரு போட்டி நடந்தால் எப்படி இருக்கும்... ஐபிஎல் அணிகளை நார்த், சௌத் என இரண்டு அணிகளாகப் பிரித்து ஒரு போட்டி நடத்தினால் எப்படி இருக்கும்?

Published:Updated:
எந்த விளையாட்டுத் தொடரும் இல்லாத நேரத்தில் என்னதான் செய்வது. கற்பனைக்குக் கொஞ்சம் வேலைகொடுத்தில் சில புதிய யோசனைகள் வந்தன. என்.பி.ஏ ஆல்ஸ்டார் கேம் போல் ஐபிஎல் தொடரிலும் ஒரு போட்டி நடந்தால் எப்படி இருக்கும்... ஐபிஎல் அணிகளை நார்த், சௌத் என இரண்டு அணிகளாகப் பிரித்து ஒரு போட்டி நடத்தினால் எப்படி இருக்கும்!

கேப்பிட்டல்ஸ், கிங்ஸ் லெவன், நைட்ரைடர்ஸ், ராயல்ஸ் நான்கு அணிகளையும் சேர்த்து நார்த் இந்தியன் லெவன். நார்த் இந்தியன் டீமில் 4 அணிகள் இருப்பதால், நடுவில் இருக்கும் மும்பையை தென்னிந்திய அணிகளோடு இணைத்துவிடுவோம். அதனால் மும்பை இந்தியன்ஸ், சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் சேர்த்து சௌத் இந்தியன் லெவன். இந்த அணிகளைத் தேர்வுசெய்வதற்கு சில விஷயங்களை மட்டும் முக்கியமாகக் கருதினோம். நிச்சயம் ஒவ்வொரு அணியிலிருந்தும் ஒரு வீரராவது இடம்பிடிக்க வேண்டும். ஐபிஎல் விதிகளைப்போல் 4 வெளிநாட்டு வீரர்கள்தான். அதேபோல், வீரர்களின் வரலாறு, நட்சத்திர அந்தஸ்து போன்றவற்றைக் கருத்தில்கொண்டு இந்த அணி தேர்வுசெய்யப்படவில்லை. ஐபிஎல் பர்ஃபாமன்ஸ் கொஞ்சம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டாலும், தற்போதைய ஃபார்முக்கும் வீரர்கள் மீதான எதிர்பார்ப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்துதான் இந்த அணியைத் தேர்வு செய்திருக்கிறோம். அதேபோல், இரண்டு அணிகளுக்கும் குறைந்தபட்சம் 6 பௌலிங் ஆப்ஷன் இருக்க வேண்டும் என்பதும் கவனத்தில் கொள்ளப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நார்த் இந்தியன் லெவன்

முதலில், இந்திய வீரர்களை முடிவு செய்துவிடலாம். கே.எல்.ராகுல், தவான், ரிசப் பன்ட், தினேஷ் கார்த்திக், ஷ்ரேயாஸ் ஐயர், ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, ஷ்ரேயாஸ் கோபால்… இந்த 8 பேரும்தான் இந்த 4 அணிகளிலிருந்து பெஸ்ட் லெவனுக்குள் நுழையக்கூடியவர்கள். இவர்களில் எந்த ஒருவரை நீக்குவது? நீக்க முடியாதவர்களை முதலில் முடிவுசெய்வோம். கே.எல்.ராகுல்... விரைவில் ஐபிஎல் ஆரஞ்ச் கேப் வென்றுவிடுவார். கெய்லே மிரண்டுபோகும் அளவுக்கு ஒரு சில போட்டிகளில் அதிரடி காட்டுகிறார். அடுத்து, ரிசப் பன்ட். என்னதான் இந்திய அணிக்கு சிறப்பாக ஆடவில்லையென்றாலும், ஐபிஎல் என்று வந்துவிட்டால் சிறப்பாகச் செயல்பட்டுவிடுகிறார் பன்ட். அதனால் அவர் இன்.

Shreyas Gopal
Shreyas Gopal

அடுத்து, இந்த அணியில் நிச்சயமாக இடம்பெறுவது ஷ்ரேயாஸ் கோபால். கொஞ்சம் ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கலாம். ஆனால், அவர் இந்த இடத்துக்கு முழுமையாகத் தகுதியானவர். அந்த 4 அணிகளில் அவரை விட ஃபார்மில் இருக்கும் ரிஸ்ட் ஸ்பின்னர் யாரும் இல்லை. குல்தீப்பின் ஐபிஎல் செயல்பாடு மிகவும் சுமாராகத்தான் இருக்கிறது. ரிஸ்ட் ஸ்பின்னர் இல்லாமல் ஒரு டி-20 அணியை உருவாக்க முடியாது என்பதால், ஷ்ரேயாஸ் அந்த இடத்தை தனதாக்குகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தவான், எப்படியும் ஒவ்வொரு சீசனிலும் சீராக ரன் எடுத்துவிடுகிறார். கடைசி 4 சீசன்களில் 450+ ரன்கள் எடுத்திருக்கிறார். அதனால் கபார் இன். தரமான இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் இந்த அணிகளில் அதிகம் இல்லையென்பதால், முகமது ஷமியைத் தவிர்க்க முடியாது. மற்ற மூவரில் எந்த இரண்டு பேர் அணியில் இடம்பிடிக்கிறார்கள் என்பதை மற்ற இடங்களை முடிவுசெய்துவிட்டு பார்ப்போம்.

Maxwell & Cummins
Maxwell & Cummins

வெளிநாட்டு வீரர்களைப் பொருத்தவரை பல ஆப்ஷன்கள் இருக்கின்றன. கெய்ல், பட்லர், ஆர்ச்சர், மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித் என பல நட்சத்திர பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். இந்த அணியில் தவிர்க்கவே முடியாத ஒரு வீரர் என்றால் அது ஆண்ட்ரே ரஸல். கெய்ல் கொண்டிருந்த ‘டேஞ்சர் மேன்’ பட்டம் இப்போது இவர் வசம்தான். இவரை எடுக்கக் காரணங்கள் தேவையில்லை. அடுத்து, கடந்த ஏலத்தின் கோடீஸ்வரர்கள். கம்மின்ஸ் & மேக்ஸ்வெல். இவர்களுக்கு செலவுசெய்யப்பட்ட தொகையினால், எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், இருவரும் நல்ல ஃபார்மில்தான் இருக்கிறார்கள். மேக்ஸ்வெல் பிக்பேஷில் சிறப்பாகவே விளையாடினார். கம்மின்ஸ் பற்றிச் சொல்லவே தேவையில்லை.

நான்காவது, வெளிநாட்டு வீரர்? பட்லர்... தனி ஆளாக ராயல்ஸுக்கு உயிர்கொடுக்கிறார். ஆனால், ஏற்கெனவே இந்த அணியில் இரண்டு ஓப்பனர்கள் இருக்கிறார்கள். மிடில் ஓவர்களில் பட்லரின் ஸ்டிரைக் ரேட் வெகுவாகக் குறைந்துவிடுகிறது. அதேபோல் கெய்ல்... நிச்சயம் தவிர்க்க முடியாத பெயர்தான். ஆனால், இப்போதைய ஃபார்ம்? வங்கதேச பிரீமியர் லீகில் நன்றாக ஆடியிருந்தாலும், மான்சி சூப்பர் லீகில் சொதப்பித் தள்ளினார். வயதாகிக்கொண்டிருக்கிறது. அதனால், கெய்லுக்கு நோ! அதுமட்டுமல்லாமல், பந்துவீச்சாளர்களின் தேவை இருப்பதால், இருக்கும் ஒரு வெளிநாட்டு ஸ்லாட்டை பௌலருக்குக் கொடுத்துவிடலாம். அப்படிப் பார்க்கும்போது, ரபாடா அந்த இடத்துக்குச் சரியாக இருப்பார்.

North Indian XI
North Indian XI

ரபாடா, கம்மின்ஸ், ஷமி, ஷ்ரேயாஸ் கோபால், ரஸல், மேக்ஸ்வெல் என ஆறு பௌலிங் ஆப்ஷன்கள் இருப்பதால், மீதமிருக்கும் இரண்டு ஸ்லாட்டுகளை பேட்ஸ்மேன்களுக்குக் கொடுத்துவிடலாம். ஷ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக் இருவரும் இன். இந்த அணியைத் தலைமைதாங்கக்கூடிய இருவருக்கும் கடைசியில்தான் இடம் கிடைக்கிறது! கேப்டனாக யார்? கடந்த சீசனில் நைட்ரைடர்ஸ் அணியில் மனக்கசப்பு உண்டானது. அதேபோல், ஷ்ரேயாஸ் இளம் அணியை சிறப்பாக வழிநடத்தியிருக்கிறார். அதனால் அவரையே இந்த அணியின் கேப்டனாக்கிவிடுவோம்.

சௌத் இந்தியன் லெவன்

அந்த அணியைப் போலவே நிச்சயம் அணியில் இடம்பிடிக்கக்கூடியவர்களை முதலில் முடிவுசெய்துவிடலாம். தோனி, கோலி, ரோஹித், பும்ரா, ஹர்திக் ஐந்து பேரும் நிச்சயம் இந்த அணியில் இடம்பிடிக்கக்கூடியவர்கள். அதேபோல் வார்னர்… வேறு லெவல் ஃபார்மில் இருக்கிறார். மூன்று முறை ஆரஞ்ச் கேப் வின்னர் என்பதை நினைத்துப்பார்க்க முடிகிறதா! அதேபோல் ரஷீத் கான்… மொத்த உலகையும் வியக்கவைத்துக்கொண்டிருக்கிறார் இந்த இளம் வீரர். எந்த பேட்ஸ்மேனையும் தன் சுழலால் மிரட்டும் இந்த ஆப்கன் வீரர், தென்னிந்திய அணியில் தவிர்க்க முடியாதவராகிறார்.

Kohli, Rohit & Dhoni
Kohli, Rohit & Dhoni

அடுத்த 4 இடங்களுக்குத்தான் போட்டி. வார்னரோடு ஓப்பனராக இறங்க பல வீரர்கள் இருக்கிறார்கள். வாட்சன், டி காக், கிறிஸ் லின், பேர்ஸ்டோ என ஒரு பெரிய அணிவகுப்பே இருக்கிறது. ஃபார்மைக் கணக்கில் எடுத்தால் டி காக், பேர்ஸ்டோ இருவரும் நல்ல சாய்ஸாக இருப்பார்கள். வார்னரோடு சேர்ந்து கடந்த சீசனில் ருத்ரதாண்டவம் ஆடியதால், பேர்ஸ்டோவையே இந்த அணியிலும் அவருக்கு ஜோடியாக்குவோம்.

அணியின் இரண்டாவது ஸ்பின்னராக சஹால். இரண்டு லெக் ஸ்பின்னர்கள் தேவையா என்ற கேள்வி எழலாம். ஆனால், ஒவ்வொரு சீசனிலும் தாறுமாறாக விக்கெட் வீழ்த்துபவரை விட முடியாதே! இரண்டாவது வேகப்பந்துவீச்சாளர் இடத்துக்கு புவி, சஹார், எங்கிடி என நல்ல ஆப்ஷன்கள் நிறையவே இருக்கின்றன. ஆல்ரவுண்டர் ஸ்லாட்டை வெளிநாட்டு வீரருக்குக் கொடுக்கலாம் என்பதால், எங்கிடியைத் தவிர்த்துவிடலாம். கடந்த 2 ஆண்டுகளில் புவியின் செயல்பாடுகள் கொஞ்சம் சுமார்தான். பழையபடி விக்கெட் வேட்டை நடத்தவில்லை. அதனால், ஃபார்மில் இருக்கும் தீபக் சஹாருக்கு அந்த ஸ்லாட்டைக் கொடுப்போம்.

South Indian XI
South Indian XI

ஆல்ரவுண்டருக்கான இடம், பெங்களூரின் சமீபத்திய கோடீஸ்வரர் மோரிஸுக்கு! பிக்பேஷ் லீகில் மிரட்டல் ஃபார்மில் இருந்தவரை, பெரும் போட்டிக்குப் பிறகு வாங்கியிருக்கிறது ஆர்.சி.பி. அந்த எதிர்பார்ப்புடனேயே அவரை இந்த அணியில் சேர்போம். அணியின் கேப்டனாக…. இங்குதான் பல கேள்விகள் எழும். நார்த் இந்தியன் லெவனுக்குப் பெரிய கேப்டன் மெட்டீரியலே இல்லை. ஆனால், இங்கோ தோனி, கோலி, ரோஹித், வார்னர் என கேப்டன்களும் அணிவகுக்கிறார்கள். அதிக கோப்பைகள் வென்ற கேப்டன் என்ற அடிப்படையில் இந்த அணிக்கு ஹிட்மேனைக் கேப்டன் ஆக்குவோம்.

சமீபத்திய ஃபார்ம் காரணமாக ஐபிஎல் தொடரின் பெரும் தலைகள் ரெய்னா, ஜடேஜா, மலிங்கா, ஹர்பஜன், டி வில்லியர்ஸ், பொல்லார்ட் போன்றவர்களுக்கு இந்த அணியில் இடம் இல்லை. அதனால் அவர்களின் ரசிகர்கள் பீ கூல்..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism