Published:Updated:

IPL Daily Round Up: ரோஹித்தின் மோசமான சாதனை முதல் கொல்கத்தாவில் இணையும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் வரை!

ரோஹித் சர்மா

ஐ.பி.எல் தொடரில் நேற்றைய தினத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களின் தொகுப்பு.

Published:Updated:

IPL Daily Round Up: ரோஹித்தின் மோசமான சாதனை முதல் கொல்கத்தாவில் இணையும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் வரை!

ஐ.பி.எல் தொடரில் நேற்றைய தினத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களின் தொகுப்பு.

ரோஹித் சர்மா

ரெண்டுமே நான் தான்!

மொஹாலி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடின. இரண்டாவது இன்னிங்ஸில் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. இதில் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மாவும் இஷான் கிஷனும் களமிறங்கினர். இது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோஹித் சர்மா விளையாடும் 200வது போட்டி ஆகும்.

ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா

ரிஷி தவான் வீசிய முதல் ஓவரின் மூன்றாவது பந்தில், ரோஹித் சர்மா ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக முறை (15) டக்-அவுட் ஆன வீரர்களின் பட்டியலில் இணைந்துள்ளார், ரோஹித். இவருக்கு முன் சுனில் நரைன், மந்தீப் சிங் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் 15 முறை டக்-அவுட் ஆகியுள்ளனர். மேலும், ஐபிஎல் தொடரில் அதிக முறை (19) ஆட்ட நாயகன் விருதுகளை வென்ற முதல் இந்திய வீரரும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.

ஜான்டி ரோட்ஸின் நெகிழ வைத்த செயல்:

ஜான்டி ரோட்ஸ்
ஜான்டி ரோட்ஸ்

லக்னோ மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாடியது. இதில் முதலில் லக்னோ அணி பேட்டிங் செய்தது.  இன்னிங்ஸின் 19.2 வது ஒவரில் கிருஷ்ணப்பா கௌதம் ஆட்டமிழந்த போது மழை குறுக்கிட்டது. அப்போது மைதான பராமரிப்பாளர்கள், பிட்சை மூடுவதற்காக தார்பாயை இழுத்துக் கொண்டு வந்தனர். அவர்களோடு இணைந்து, லக்னோ அணியின் பயிற்சியாளரான ஜான்டி ரோட்ஸ் தார்பாயை இழுத்து மைதானத்தை மூடுவதற்கு உதவி செய்தார். இந்த புகைப்படத்தை பதிவிட்டு இணையத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

லிட்டன் தாஸ்க்கு பதிலாக மாற்று வீரர்:

லிட்டன் தாஸ்
லிட்டன் தாஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர வீரரான லிட்டன் தாஸ், கடந்த வாரத்தில் தனது சொந்த நாடான வங்கதேசத்திற்கு திரும்பினார். இதன் காரணமாக, இந்த 2023 ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் இவரால் விளையாட முடியவில்லை. இவருக்கு பதிலாக, வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட் கீப்பிங்-பேட்ஸ்மேனான ஜான்சன் சார்லஸ் விளையாடவுள்ளார். இவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 50 லட்சத்திற்கு வாங்கியுள்ளது. இவர் கடந்த 2012 மற்றும் 2016 ஆம் ஆண்டின் டி20 உலகக் கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியில் விளையாடினார். இதுவரை 224 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 5600 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். 

பஞ்சாப் கிங்ஸின் சாதனை:

பஞ்சாப் கிங்ஸ்
பஞ்சாப் கிங்ஸ்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில், முதல் இன்னிங்ஸில் பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் செய்தது. இதில் 20 ஓவர்கள் முடிவில் 214 ரன்கள் எடுத்தது. ஏற்கனவே, இதே தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் 214 ரன்களும், லக்னோ மற்றும் சி.எஸ்.கே அணிக்கு எதிராக தலா 201 ரன்களும் எடுத்து அசத்தியது. இதன் மூலம், ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 4 போட்டிகளில் 200+ ரன்களை எடுத்த முதல் அணி என்ற பெருமையை பெற்றது, பஞ்சாப் கிங்ஸ் அணி. 

அர்ஷ்தீப் சிங்கின் மோசமான ஸ்பெல்:

அர்ஷ்தீப் சிங்
அர்ஷ்தீப் சிங்

பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங், நேற்றைய ஆட்டத்தில் 3.5 ஓவர்கள் வீசியதில் 66 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார். கடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு மிடில் ஸ்டம்ப்களை உடைத்த இவரால், இந்த போட்டியில் ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்த முடிந்தது. இவரின் பந்துகளை மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்கள் நான்கு புறமும் சிதறவிட்டனர். இப்போட்டியின் மூலம், ஐபிஎல் தொடரில் தனது மோசமான ஸ்பெல்லை பதிவு செய்துள்ளார், அர்ஷ்தீப் சிங்.