Published:Updated:

ஐபிஎல் ஏலம் 2021: இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு டிமாண்ட் குறைகிறதா?!

பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர், ஜோஃப்ரா ஆர்ச்சர்

தென்னாப்பிரிக்காவைப்போலவே இங்கிலாந்து கிரிக்கெட் மற்றும் நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை ஜூனில் அறிவித்திருக்கிறது.

Published:Updated:

ஐபிஎல் ஏலம் 2021: இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு டிமாண்ட் குறைகிறதா?!

தென்னாப்பிரிக்காவைப்போலவே இங்கிலாந்து கிரிக்கெட் மற்றும் நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை ஜூனில் அறிவித்திருக்கிறது.

பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர், ஜோஃப்ரா ஆர்ச்சர்
2021 ஐபிஎல் சீசனுக்கான ஏலம் நாளை நடைபெற இருக்கும் நிலையில் இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்க அணிகளின் முக்கிய வீரர்களுக்கான டிமாண்ட் குறைந்துவருகிறது.

பிசிசிஐ நேற்று மாலை 8 ஐபிஎல் அணிகளுக்கும் அதிகாரப்பூர்வ மெயில் ஒன்றை அனுப்பியிருக்கிறது. இதில் தங்கள் அணிகளில் இருக்கும் இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்க வீரர்களை அவர்களின் சொந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் கேட்கும்போது விடுவித்துவிடவேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறது.

தென்னாப்பிரிக்க அணி பாகிஸ்தானுடன் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஏப்ரல் மாதம் விளையாட இருக்கிறது. இந்தப் போட்டிகள் ஏப்ரல் 2-ம் தேதி தொடங்கி 16-ம் தேதிவரை நடைபெற இருக்கிறது. ஆனால், ஐபிஎல் ஏப்ரல் 9-ம் தேதிவாக்கில் தொடங்க திட்டமிடப்பட்டிருப்பதால் தென்னாப்பிரிக்க தேசிய அணியில் இடம்பிடித்திருக்கும் வீரர்கள் முதலிரண்டு வாரங்களுக்கு ஐபிஎல் போட்டிகளில் விளையாடமாட்டார்கள். இதனால் சென்னை அணியில் டுப்ளெஸ்ஸி, லுங்கி எங்கிடி, மும்பை இந்தியன்ஸ் அணியில் குவன்ட்டன் டிகாக், டெல்லி அணியில் நார்க்கியா, ரபடா, ராஜஸ்தான் அணியில் டேவிட் மில்லர் ஆகிய வீரர்கள் தேசிய அணிக்காக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அவர்கள் முதல் இரண்டு வாரங்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது சந்தேகமே.

டுப்ளெஸ்ஸி, எங்கிடி
டுப்ளெஸ்ஸி, எங்கிடி

இவர்கள் தவிர இந்தாண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் வான் டர் டஸன், வெய்ன் பார்னெல், கிறிஸ் மோரிஸ் உள்பட 14 முக்கிய தென்னாப்பிரிக்க வீரர்கள் இருக்கிறார்கள். பாகிஸ்தான் தொடரால் தென்னாப்பிரிக்க வீரர்கள் முதல் இரண்டு வாரங்களுக்கு கிடைப்பதில் சிக்கல் இருப்பதால் அவர்களுக்கான டிமாண்ட் இந்த ஆண்டு ஏலத்தில் குறைந்திருக்கிறது. இந்த ஆண்டு மினி ஏலம்தான் என்பதால் சில போட்டிகளைத் தவறவிடுவார்கள் எனத்தெரிந்தே அதிக தொகைக்கு வெளிநாட்டு வீரர்களை ஏலத்தில் எடுக்க அணிகள் தயக்கம் காட்ட ஆரம்பித்திருக்கின்றன.

தென்னாப்பிரிக்காவைப்போலவே இங்கிலாந்து கிரிக்கெட் மற்றும் நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை ஜூனில் அறிவித்திருக்கிறது. ஜூன் 2-ம் தேதி முதல் டெஸ்ட் லார்ட்ஸிலும், இரண்டாவது டெஸ்ட் ஜூன் 10-ம் தேதி முதல் எட்ஜ்பாஸ்டனிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து டெஸ்ட் அணியில் இடம்பிடிக்கக்கூடிய கேன் வில்லியம்சன், ட்ரென்ட் போல்ட், பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர், ஜோஃப்ரா ஆர்ச்சர், சாம் கரண் ஆகியோர் ஐபிஎல் ப்ளேஆஃப் கட்டத்தை நெருங்கும் நேரத்தில் தங்களின் தேசிய அணிக்குத்திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ராஜஸ்தான் அணி பெரிதும் பாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

Kane Williamson | கேன் வில்லியம்சன்
Kane Williamson | கேன் வில்லியம்சன்

இது மட்டுமல்லாமல் மொயின் அலி, மார்க் வுட், ஆதில் ரஷீத் உள்ளிட்ட இங்கிலாந்து வீரர்களும், கைல் ஜேமிசன், மேட் ஹென்றி, டிம் சவுத்தி, ஜேம்ஸ் நீஷம், நீல் வாக்னர், ஜேக்கப் டஃபி, பிளேர் டிக்னேர் உள்ளிட்ட நியூஸிலாந்து வீரர்களும் இந்தமுறை ஏலப்பட்டியலில் இருக்கிறார்கள். இவர்கள் இங்கிலாந்து, நியூஸிலாந்து டெஸ்ட் தொடரில் தேர்ந்தெடுக்கப்படக்கூடும் என்பதால் இவர்களை இந்த ஆண்டுக்கான ஏலத்தில் வாங்குவதற்கான டிமாண்டும் குறைந்திருக்கிறது.

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் வெளிநாட்டு வீரர்களைக் காட்டிலும் உள்நாட்டு வீரர்களை வாங்கவே ஐபிஎல் அணிகள் அதிக ஆர்வம் காட்டும் என எதிர்பார்க்கலாம்.