Published:Updated:

RR v RCB: `மழை வந்துரும் நாங்க வீட்டுக்குப் போறோம்!'; `ஈ சாலா கப் நமதே!' டைட்டிலைப் பெற்ற ராஜஸ்தான்!

RR v RCB

6 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தவித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இந்நிலையில், கேப்டனாக சஞ்சு சாம்சன் தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுததுவார் என்றால், அதே ஓவரில் அவரும் அவுட்டாகி நடையைக் கட்டினார்.

Published:Updated:

RR v RCB: `மழை வந்துரும் நாங்க வீட்டுக்குப் போறோம்!'; `ஈ சாலா கப் நமதே!' டைட்டிலைப் பெற்ற ராஜஸ்தான்!

6 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தவித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இந்நிலையில், கேப்டனாக சஞ்சு சாம்சன் தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுததுவார் என்றால், அதே ஓவரில் அவரும் அவுட்டாகி நடையைக் கட்டினார்.

RR v RCB
ப்ளே ஆப் நெருங்குகையில் எல்லா அணிகளும் தங்களின் சிறப்பான ஆட்டத்தை ஆட இந்த சீசனின் மோசமான ஆட்டத்தை ஆடியிருக்கிறது ராஜஸ்தான். விளையாடும் இரண்டு ஆட்டங்களிலும் வென்றால் புள்ளிப் பட்டியலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என்ற நிலையிலிருந்தது ராஜஸ்தான்.

சென்ற ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி ரன்ரேட்டை அதிகப்படுத்திய ராஜஸ்தான் இன்றைய ஆட்டத்தில் படுமோசமான ஆட்டத்தை விளையாடியிருக்கிறது. முக்கியமான ஆட்டத்தைப் பொறுப்புணர்வுடன் விளையாடி வெற்றி பெற்றிருக்கிறது ஆர்.சி.பி.

ராஜஸ்தான் அணி வீரர் ஹெட்மயர்
ராஜஸ்தான் அணி வீரர் ஹெட்மயர்

டாஸை வென்ற ஆர்.சி.பி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கோலி, பாப் டூ பிளசிஸ் களமிறங்கினர். பவர்பிளே முடிந்த பிறகு கோலி ஆசிப் பந்தில் அவுட்டாக, அதன் பிறகு இந்த சீசனில் நல்ல பார்மில் விளையாடி வரும் டூ ப்ளசிஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஜோடி தங்களது வழக்கமான ஆட்டத்தை ஆடினர். பெரிய அளவில் ரன்கள் சேராதபோதும் சீராக ரன்களைச் சேர்த்தது ஆர்.சி.பி. இருவருமே அரை சதம் கடந்து தங்களது விக்கெட்டை இழந்தனர். இந்த சீசனில் பெரிய அளவில் சோபிக்காத தினேஷ் கார்த்திக் இந்தமுறையும் டக் அவுட்டானார். இறுதியில் அனுஜ் ராவத் சில நல்ல ஷாட்கள் அடிக்க ஆர்.சி.பி 171 என்ற நல்ல ஸ்கோரை எட்டியது.

ஆர்.சி.பி
ஆர்.சி.பி

ஹோம் கிரவுண்ட், நல்ல பார்மில் இருக்கும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள், ராஜஸ்தானுக்கு 172 ரன்கள் பெரிய இலக்காக இருக்காது என்று பார்த்தால் ஆட்டம் வேறு மாதிரி சென்றது. இந்த சீசனில் பலரையும் ஆச்சரியப்பட வைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிராஜ் வீசிய முதல் ஓவரில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து அதிர்ச்சியுடன் வெளியேறினார். அதற்கடுத்த ஓவரில் அணியின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பட்லர் கவர் திசையில் சிராஜிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பவர் ப்ளேயில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இரண்டு ஆட்டக்காரர்களும் டக் அவுட்டாகினர். 6 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தவித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இந்நிலையில், கேப்டனாக சஞ்சு சாம்சன் தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்றால், அதே ஓவரில் அவரும் அவுட்டாகி நடையைக் கட்டினார்.

வெறும் 7 ரன்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து பரிதாபகரமாக நிலைக்குச் சென்றது ராஜஸ்தான். `இம்பேக்ட்' ப்ளேயராக களமிறங்கினார் தேவ்தத் படிக்கல். இந்த சீசனில் முதல் முறையாக பேட்டிங் செய்ய வந்திருந்தார் ஜோ ரூட்.

இவர்கள் இருவரும் ஏதாவது செய்து அணியை வெற்றி பெற வைத்திருக்கக் கூடிய வாய்ப்பிருந்தது. அதை செய்ய முடியாவிட்டாலும் அணியின் ஸ்கோரையாவது உயர்த்தியிருக்கலாம். ஆனால், ஜெய்ப்பூர் கிரவுண்டில் மழை பெய்வதற்கான வானிலை நிலவ, மழை பெய்வதற்குள் வீட்டுக்குப் போய்விடலாம் என நினைத்தது போலவே கான்பிடன்ட் இல்லாத சுமாரான ஷாட்கள் ஆடி அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டை இழந்தனர். ஹெட்மயர் மட்டும் சில சிக்சர்கள் விளாசிக் கொண்டிருந்தார். தன்னை நிரூபிக்க ஒரு வாய்ப்பாகக் களமிறங்கிய ஜுரல், ஆர்.சி.பி அணிக்கு எந்தவித கஷ்டமும் கொடுக்காமல் டீப் மிட் விக்கெட் திசையில் லாம்ரோர் கைகளிலேயே பந்தைக் கொடுத்துவிட்டு வெளியேறினார்.

சிராஜ்
சிராஜ்

ஹெட்மயர்- அஸ்வின் ஜோடி கடைசி நம்பிக்கையாகக் களத்தில் நிற்க `ஹல்லா போல் கொஞ்சம் நல்லா போல், கொஞ்சம் கம்மியா போல்' என அணிக்காக சோஷியல் மீடியாக்களில் விளம்பரப்படுத்திக் கொண்டிருந்த அஷ்வின், பேட்டிங்கில் எந்தவித பங்களிப்பையும் செலுத்தாமல் அலட்சியமான ரன் அவுட் முறையில் `டைமண்ட் டக்' ஆகி வெளியேறினார். அதன் பிறகு வந்த பௌலர்களாலும் பெரிதாக தாக்குப் பிடிக்க முடியவில்லை. மழை முதலில் வருமா அல்லது ராஜஸ்தான் முதலில் அனைத்து விக்கெட்டுகளையும் இழக்குமா என நடந்த போட்டியில் ராஜஸ்தான் வென்றது. மழைக்கு முன்பாகவே 10.3 ஓவரில் 59 ரன்களுக்குத் தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆர்.சி.பி அணிக்கு பெரியதொரு நம்பிக்கை வெற்றியை வழங்கியிருக்கிறது. கடந்த சில போட்டிகளில் பெரிதாக சோபிக்காத அதன் பௌலர்கள் இந்த முறை ராஜஸ்தானின் தடுமாற்றத்தை சரியாகப் பயன்படுத்தி தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

இந்த ஐ.பி.எல் போட்டியில் 200 ரன்களுக்கு மேல் 4 முறையும் இரண்டு முறை 190 ரன்களும் அடித்திருந்த ராஜஸ்தான் வெறும் 59 ரன்களுக்கு அவுட் ஆகியிருக்கின்றனர். தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய அணிகள் இருக்கின்றன. ஒரு சிறப்பான வெற்றி அடுத்த போட்டியே ஒரு மோசமான தோல்வி என எந்த டிசைன் என யூகிக்கவே முடியாத படியான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறது ராஜஸ்தான். எந்த பேட்ஸ்மேன்களுக்குமே ஆட்டத்தை கடைசி வரை எடுத்துச் செல்ல விருப்பமில்லையா, அல்லது வேறு ஏதேனும் கேம் ப்ளானா என நிச்சயம் புரியவில்லை. அணி தடுமாறுகிற நிலையில் அதை சரிசெய்ய ஒருவரிடம் கூடவா திட்டமில்லை

RR v RCB
RR v RCB

தொடக்கத்தில் 3 விக்கெட்டுகள் சரிந்ததும் அதற்கடுத்து என்ன செய்யவேண்டும் என்பதைக் கேப்டன் சஞ்சு சாம்சனோ, பயிற்சியாளர்களோ தெரிவிக்கவில்லையா? இப்படி ஒரு மோசமான தோல்வியை நல்ல பார்மில் உள்ள வீரர்களை வைத்துக் கொண்டு பெறுவது அணியாக சரியான திட்டமிடல் இல்லாததையே காட்டுகிறது. போட்டி முடிந்ததும் சஞ்சு சாம்சனிடம் அணியின் இந்த பேட்டிங் திட்டமிடல் குறித்து கேட்கப்பட்டதற்கு, `எனக்கு அது சரியாகத் தெரியவில்லை!' என பொத்தாம் பொதுவாக பதிலளித்தார். ஆனால், உண்மையில் இந்த போட்டி குறித்தும் ஏற்ற இறக்கங்கள் குறித்தும் அவர் பெரிய அளவில் யோசிக்க வேண்டும். திட்டமிட வேண்டும். அது இந்த சீசனுக்கு இனி பலனளிக்குமா எனத் தெரியாவிட்டாலும் அடுத்த சீசனிலாவது பயனளிக்கலாம்.

ப்ளே ஆப் செல்ல வாய்ப்புள்ள நான்கு அணிகள் எவை உங்கள் கணிப்புகளை கமென்ட்டில் சொல்லுங்கள்!