Published:Updated:

Do or Die: புயல் மழையில் கோலி படை; காலிறுதி காய்ச்சலில் சாம்சன் & கோ; வெல்லப்போவது யார்?

இன்று ராஜஸ்தானும் பெங்களூரு அணியும் மோதும் போட்டி ஏறக்குறைய ஒரு நாக் அவுட் போட்டியைப் போன்றுதான் பார்க்கப்படுகிறது.

Published:Updated:

Do or Die: புயல் மழையில் கோலி படை; காலிறுதி காய்ச்சலில் சாம்சன் & கோ; வெல்லப்போவது யார்?

இன்று ராஜஸ்தானும் பெங்களூரு அணியும் மோதும் போட்டி ஏறக்குறைய ஒரு நாக் அவுட் போட்டியைப் போன்றுதான் பார்க்கப்படுகிறது.

ஐ.பி.எல் இந்த லீக் சுற்று இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இதுவரை 59 போட்டிகள் நடந்து முடிந்திருக்கிறது. இன்னும் 11 லீக் போட்டிகள் மட்டுமே மீதமிருக்கின்றன.

இந்த 11 போட்டிகள்தான் பிளே ஆஃப்ஸுக்கு செல்லப்போகும் அணிகள் எவை என்பதை முடிவு செய்யப்போகின்றன. இந்நிலையில், இன்று ராஜஸ்தானும் பெங்களூரு அணியும் மோதும் போட்டி ஏறக்குறைய ஒரு நாக் அவுட் போட்டியை போன்றுதான் பார்க்கப்படுகிறது.
சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன்
'ஒரு காலிறுதிப்போட்டியை நாங்கள் வெற்றிகரமாக தாண்டிவிட்டோம். இன்னும் எங்களுக்கு 2 காலிறுதிப்போட்டிகள் மிச்சமிருக்கின்றன'
சஞ்சு சாம்சன்

கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியை யாஷஸ்வியின் அதிரடியால் மிரட்டலாக வென்றுவிட்டு ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் இப்படி பேசியிருந்தார். ராஜஸ்தானுக்கும் சரி பெங்களூருவுக்கும் சரி இது ஒரு காலிறுதிப்போட்டிதான்.

ராஜஸ்தான் அணி இதுவரை 12 போட்டிகளில் ஆடி 6 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது. அதேநேரத்தில் பெங்களூர் அணி 11 போட்டிகளில் ஆடி 5 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது.

RR
RR

10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7 வது இடத்தில் உள்ளது. குறைந்தபட்சமாக 8 போட்டிகளிலாவது வென்றால்தான் கொஞ்சம் சௌகரியமாக ப்ளே ஆப்ஸூக்கு முன்னேற முடியும். அதனடிப்படையில் பார்த்தால் ராஜஸ்தான் எஞ்சியிருக்கும் இரண்டு போட்டிகளையும் வெல்ல வேண்டும். பெங்களூர் எஞ்சியிருக்கும் 3 போட்டிகளையும் வெல்ல வேண்டும். இப்படி ஒரு சூழலில்தான் இன்று ஜெய்ப்பூரில் மோதவிருக்கின்றன.

ராஜஸ்தானுக்கு வரவிருக்கும் இரண்டு போட்டிகளுமே சவாலான போட்டிகள்தான். இன்று பெங்களூருவை எதிர்கொள்ளும் ராஜஸ்தான் 19 ஆம் தேதி பஞ்சாபை எதிர்கொள்கிறது. பெங்களூர், பஞ்சாப் இரண்டு அணிகளுமே ராஜஸ்தானை போலவே ப்ளே ஆப்ஸ் ரேஸில் இருப்பவை. ஆக, ராஜஸ்தான் அணி இவர்கள் இருவரையும் வீழ்த்த வேண்டும் என்பது பெரிய சவாலாக இருக்கும். ஆனால், அவர்களின் ரன்ரேட் பாசிட்டிவ்வாக இருப்பது ஒரு நேர்மறையான விஷயம். ஒருவேளை இந்த இரண்டு போட்டிகளில் ஒன்றை தோற்று 7-ல் வென்று நான்காவது இடத்தை பிடிப்பதற்காக மற்ற அணிகளுடன் கால்குலேட்டர் சண்டையில் ஈடுபட வேண்டிய சூழல் ஏற்பட்டாலும் ராஜஸ்தானுக்கு அவர்களின் ரன்ரேட் பெரியளவில் கைகொடுக்கும்.

Virat Kohli
Virat Kohli

பெங்களூர் அணி எஞ்சியிருக்கும் போட்டிகளில் ராஜஸ்தான், சன்ரைசர்ஸ், குஜராத் ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது. ராஜஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில் பெங்களூர் தோற்றால் வேறு வழியே இல்லாமல் அடுத்த இரண்டு போட்டிகளையும் வென்றே ஆக வேண்டும். வெல்வது மட்டுமல்லாமல் ரன்ரேட்டையும் கணக்கில் கொள்ள வேண்டி வரும். ஏனெனில், பெங்களூர் அணியின் ரன்ரேட் பெரிய அளவில் அடி வாங்கியிருக்கிறது. நெகட்டிவ்வில் இருக்கிறது. இது அவர்களுக்கு பெரிய பின்னடைவை கொடுக்கிறது. மேலும், குஜராத்தை பெங்களூர் வெல்ல வேண்டும். குஜராத் ப்ளே ஆப்ஸூக்கு தகுதிப்பெற்று விடும் என்ற சூழல் இருந்தாலும் லீக் சுற்றின் கடைசி ஆட்டம் என்பதால் அதில் வென்று பாசிட்டிவ்வாக ப்ளே ஆப்ஸூக்குள் நுழைய நினைப்பார்கள். ஆகையால் குஜராத்துமே அந்த ஆட்டத்தை முக்கியமானதாகத்தான் நினைப்பார்கள்.

ராஜஸ்தான் ஆகட்டும் பெங்களுர் ஆகட்டும் இருவருமே மோதப்போகும் இந்தப் போட்டியில் வெல்லும் அணி கொஞ்சம் சௌகரியமாக ப்ளே ஆப்ஸூக்கு செல்லும் வாய்ப்பு உருவாகும். புயல், மழை எல்லாம் வெளுத்து வாங்க ஒரு படகில் டூப்ளெஸ்சிஸ் தலைமையில் ஆர்சிபி அணி தீர்க்கத்தோடு போருக்கு செல்வதை போல ஒரு போஸ்டரை அந்த அணி வெளியிட்டிருந்தது.

RCB
RCB
மொத்தத்தில் இது ஒரு Do or Die ஆட்டம்தான்! வெல்லப்போவது யார்?