Published:Updated:

IPL Auction 2023: ரூ.16.25 கோடிக்கு ஏலம்போன பென் ஸ்டோக்ஸ் - சி.எஸ்.கே தட்டித் தூக்கிய ஜாக்பாட்!

பென் ஸ்டோக்

சி.எஸ்.கே அணியில் டுவைன் பிராவோ விட்டுச்சென்ற ஆல்ரவுண்டர் இடத்தை பென் ஸ்டோக்ஸ் நிரப்புவார் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

IPL Auction 2023: ரூ.16.25 கோடிக்கு ஏலம்போன பென் ஸ்டோக்ஸ் - சி.எஸ்.கே தட்டித் தூக்கிய ஜாக்பாட்!

சி.எஸ்.கே அணியில் டுவைன் பிராவோ விட்டுச்சென்ற ஆல்ரவுண்டர் இடத்தை பென் ஸ்டோக்ஸ் நிரப்புவார் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Published:Updated:
பென் ஸ்டோக்
2023-ம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலம் கேரளாவில் இன்று நடைபெற்று முடிந்திருக்கிறது. சாம் கரண், ஹாரி ப்ரூக், நிகோலஸ் பூரண், கேமரூன் க்ரீன் உள்ளிட்ட வீரர்கள் அதிக விலை கொடுத்து எடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

டி20 போட்டிகளில் அதிரடி காட்டிய பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கு சென்னை சூப்பர்கிங்ஸ் அணி வாங்கியிருக்கிறது. ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகத் தொகையான ரூ.18.50 கோடிக்கு சாம் கரணை பஞ்சாப் கிங்ஸ் வாங்கியிருக்கிறது. சென்னையைப் பொறுத்தவரை ரூ.20.45 கோடியோடு ஏலத்தில் களமிறங்கியது. முதல் வீரராக அஜிங்கியா ரஹானேவை 50 லட்ச ரூபாய்க்கு வாங்கியது. பென் ஸ்டோக்ஸ் ஏலத்துக்கு முன்பான கணிப்பிலேயே அதிக விலைக்குப் போவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஐபிஎல் மினி ஏலம் 2023
ஐபிஎல் மினி ஏலம் 2023

இரண்டு கோடி ஆரம்ப விலையில் களமிறங்கிய அவரை வாங்கிவிட, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது. ஏலம் 15.25 கோடி ரூபாயை நெருங்கும்போது சி.எஸ்.கே களத்தில் குதித்தது. அதன்பின் சி.எஸ்.கே மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் இடையே போட்டி இருந்தது. இறுதியில் 16.25 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் பென் ஸ்டோக்ஸை வாங்கியிருக்கிறது. சி.எஸ்.கே அணியில் டுவைன் பிராவோ விட்டுச்சென்ற ஆல்ரவுண்டர் இடத்தை பென் ஸ்டோக்ஸ் நிரப்புவார் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

கடந்த சீசன் ஐபிஎல்லில் பென் ஸ்டோக்ஸ் ஆடவில்லை. முதன் முறையாக 2017-ம் ஆண்டு தோனி தலைமையிலான புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில்தான் அவர் களமிறங்கினார். அந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி 316 ரன்கள், 12 விக்கெட்டுகள் எடுத்து மிகுந்த விலைமதிப்புள்ள வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். புனே அணியில் தோனியுடன் விளையாடிய அனுபவம் சி.எஸ்.கே அணியில் பென் ஸ்டோக்ஸ்க்கு நிச்சயம் கை கொடுக்கும். அது மட்டுமின்றி, தோனி இந்த சீசனோடு ஓய்வு பெறவிருப்பதால் பென் ஸ்டோக்ஸ் சி.எஸ்.கே-வின் எதிர்கால கேப்டனாக உருவெடுக்கவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே அவரை சென்னை வாங்கியது சிறந்த முடிவு என்பதே கிரிக்கெட் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

ஐபிஎல் தொடரில் பென் ஸ்டோக்ஸ் இதுவரை 43 ஆட்டங்களில் 920 ரன்களும், 28 விக்கெட்டுகளும் எடுத்திருக்கிறார். கடந்த உலகக் கோப்பை டி20 இறுதிப் போட்டியில் அரைசதம் அடித்து இங்கிலாந்து அணியை வெற்றி பெற வைத்தவர் பென் ஸ்டோக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.