Published:Updated:

IPL 2023 Auction: `யாருக்கு எவ்வளவு பணம்; எந்த அணி யாரை ஏலம் எடுக்கும்'; மினி ஏலம் ஒரு ப்ரீவியூ!

மினி ஏலத்தில் கோடிகளைக் கொட்டி வீரர்களை வாங்க 10 அணிகளும் காத்திருக்கிறார்கள். இந்த ஐபிஎல் மினி ஏலத்தை பற்றி ஒரு விரிவான அலசல் இங்கே...

IPL 2023 Auction: `யாருக்கு எவ்வளவு பணம்; எந்த அணி யாரை ஏலம் எடுக்கும்'; மினி ஏலம் ஒரு ப்ரீவியூ!

மினி ஏலத்தில் கோடிகளைக் கொட்டி வீரர்களை வாங்க 10 அணிகளும் காத்திருக்கிறார்கள். இந்த ஐபிஎல் மினி ஏலத்தை பற்றி ஒரு விரிவான அலசல் இங்கே...

Published:Updated:
ஐபிஎல் மினி ஏலம் இன்று கேரளாவில் நடைபெற இருக்கிறது. கடந்த மாதம் ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து நடைபெறும் மினி ஏலத்தில் கோடிகளை கொட்டி வீரர்களை வாங்க 10 அணிகளும் காத்திருக்கிறார்கள். இந்த ஐபிஎல் மினி ஏலத்தை பற்றி ஒரு விரிவான அலசல் இங்கே..

சென்னை சூப்பர் கிங்ஸ்:

சிஎஸ்கே அணியில் டுவைன் பிராவோ, ஆடம் மில்னே, கே.எம்.ஆசிஃப், ஹரி நிஷாந்த், பகத் வர்மா, ராபின் உத்தப்பா, ஜெகதீசன், கிறிஸ் ஜோர்டான் போன்ற வீரர்கள் விடுவிக்கப்பட்டிருந்தனர். 20.25 கோடி ரூபாய் கையில் வைத்திருக்கிறார்கள். சிஎஸ்கேயால் ஏழு இடங்களில் 5 இந்திய வீரர்கள், 2 வெளிநாட்டு வீரர்கள் எடுக்க முடியும். அணியில் பிரச்சினையாக இருப்பது நம்பர் 3 பேட்டர் மற்றும் ஆல்ரவுண்டர் இடம்தான். கடந்த சீசனில் சின்ன தல சுரேஷ் ரெய்னா இல்லாத இடத்தை ராபின் உத்தப்பாவால் நிரப்ப இயலவில்லை. கேன் வில்லியம்சன், ரூட், ஹாரி ப்ரூக் யாரேனும் ஒருவரை இந்த இடத்திற்கு எடுக்க வாய்ப்பிருக்கிறது. டெத் ஓவரில் சிஎஸ்கேவுக்கு பலமாக ஆடிக்கொடுத்த ஆல் ரவுண்டர் டுவைன் பிராவோ இடத்திற்கு இன்பார்ம் ஆல் ரவுண்டர் சாம் கரண், வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரொமாரியோ ஷெப்பர்ட் இருவரையும் எடுக்க முயற்சிப்பார்கள்.

IPL 2018
IPL 2018
iplt20.com

மும்பை இந்தியன்ஸ்:

கீரன் பொல்லார்ட், அன்மோல்பிரீத் சிங், ஆர்யன் ஜூயல், பசில் தம்பி, டேனியல் சாம்ஸ், ஃபேபியன் ஆலன், ஜெய்தேவ் உனத்கட்,மயங்க் மார்கண்டே, முருகன் அஸ்வின்டைமல் மில்ஸ் போன்ற வீரர்களை விடுவித்திருந்தனர். 20.55 கோடி ரூபாய் கையில் வைத்திருக்கிறார்கள்.

Mumbai Indians
Mumbai Indians

மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை கீரன் பொல்லார்ட் க்கு மாற்றாக ஆல் ரவுண்டரை தேர்ந்தெடுக்க தான் அதிக போட்டி இருக்கும். டிம் டேவிட் இருந்தாலும் வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த அனுபவ வீரர் ஹோல்டரை எடுக்க வாய்ப்பு இருக்கிறது. அணியின் பேக்கப்புக்கு இந்தியன் லெக் ஸ்பின்னர், வேகப்பந்து விச்சாளர்கள் தேவையாக இருக்கிறது. ஷாகிப் அல் ஹசன், முகமது நபி அல்லது இளம் இந்திய ஸ்பின்னர்கள் பக்கம் மும்பை அணி போகக்கூடும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

KKR அணியை பொறுத்தவரை 11 ஸ்லாட் நிரப்ப வேண்டும். வெறும் 7.05 கோடி ரூபாய் மட்டுமே கையில் இருப்பதால் குறைந்த விலையில் பேக்கப் வீரர்களை எடுக்கலாம். அனுபவமுள்ள விக்கெட் கீப்பரும் தேவைப்படுகிறார் . ரசல்க்கு பேக்கப்பாக அதிரடியான ஆல்ரவுண்டர் எடுக்க முயற்சி செய்யக்கூடும்.நிக்கோலஸ் பூரான், கருண் நாயர் , கேமரூன் கிரீன் போன்ற வீரர்களையம் டார்கெட் செய்யக்கூடும்.

KKR
KKR

பஞ்சாப் கிங்ஸ்:

32.40 கோடி ரூபாயோடு இரண்டாவது பெரிய தொகை வைத்திருக்கும் பஞ்சாப், தொடக்க ஆட்டக்காரர்கள், பேட்ஸ்மேன், இந்தியா ஆல் ரவுண்டர், இந்திய விக்கெட் கீப்பர் என அவர்களுக்கு அத்தனை ஸ்லாட்டிலும் வீரர்கள் தேவையாக இருக்கிறது. அதிக தொகை வைத்திருப்பதால் வழக்கம்போல ப்ரீத்தி & கோ ஏலத்தில் அதிரடி காட்ட காத்திருக்கிறது.

Punjab Kings
Punjab Kings
IPL

குஜராத் டைட்டன்ஸ்:

கடந்த சீசனின் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் 19.25 கோடி ரூபாயை கையில் வைத்திருக்கிறது. கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளர் குஜராத்துக்கு தேவையாக இருக்கிறது. மிடில் ஆர்டர் பேட்டர்கள் மீதும் ஒரு கண் வைக்கக்கூடும்.

Gujarat Titans
Gujarat Titans
IPL

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் :

8.75 கோடி கையில் வைத்திருக்கும் RCB அணி வலுவான ஸ்டார்டிங் 11 ஐ கொண்டிருக்கிறது. ஏலத்தில் குறைந்த விலையில் பேக்கப் வீரர்களை எடுக்க முயற்சிக்கலாம். இரண்டு வெளிநாட்டு ஸ்லாட்கள் இருப்பதால் ஜோஷ் ஹேசில்வுட்டுக்கு பேக்கப்பாக வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்களை எடுக்க வாய்ப்பு இருக்கிறது.

டெல்லி கேப்பிடல்ஸ்:

19.45 கோடி ரூபாய் வைத்திருக்கும் டெல்லி கேப்பிடல் அணிக்கு ஒரு வலுவான ஆல் ரவுண்டர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் தேவையாக இருக்கிறது. ஷர்துல் தாக்கூருக்குப் பதிலாக நல்ல இறங்கி விலை கொடுத்து ஒரு வேகப்பந்து வீச்சாளரை அணியில் எடுக்க வாய்ப்பிருக்கிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ்:

வான் டெர் டஸ்ஸன், குல்டர்-நைல், ஜேம்ஸ் நீஷம் மற்றும் டேரில் மிட்செல் போன்ற வீரர்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். 13.2 கோடி ரூபாய் வைத்திருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ், வெளிநாட்டு வீரர்களை விடுவித்துள்ளதால் வெளிநாட்டு ஆல் ரவுண்டர்கள் தேவையாக இருக்கிறார்கள். பென் ஸ்டோக்ஸ், ஜேசன் ஹோல்டர், ஷாகிப் அல் ஹசன் ஆகிய வீரர்களில் ஒருவரை எடுக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

Rajasthan Royals
Rajasthan Royals
IPL

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

கேன் வில்லியம்சன் , நிக்கோலஸ் பூரான், அமித் மிஸ்ரா உள்ளிட்ட 12 வீரர்களை விடுவித்து 42.25 கோடி ரூபாயை கையில் வைத்திருக்கிறார்கள். அதிக தொகை வைத்திருப்பதால், தரமான வீரர்களுக்கான மிகப்பெரிய தேவையையும் கொண்டுள்ளனர். SRH நான்கு வெளிநாட்டு இடங்களை நிரப்ப வேண்டும், வில்லியம்சனை விடுவித்த பிறகு நிச்சயமாக ஒரு புதிய கேப்டனை எதிர்பார்க்கிறார்கள். டர்னிங் டிராக்குகளைப் பயன்படுத்திக் கொள்ள ஒரு லெக் ஸ்பின்ன்னரும் தேவை .

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:

23.35 கோடி ரூபாயோடு மூன்றாவது பெரிய தொகை வைத்திருக்கும் லக்னோவில் நான்கு வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்களை நிரப்ப வேண்டும். மிடில் ஆர்டர் வரிசையில் வீரர்களை குறைந்த விலையில் எடுக்கலாம். ஜேசன் ஹோல்டருக்குப் பதிலாக ஒரு ஆல்-ரவுண்டரைக் நிச்சயம் எடுக்க போட்டி போடுவார்கள். சாம் கரண் போன்ற வீரர்களை டார்கெட் செய்வார்கள்.