
ஐபிஎல் 2023 மினி ஏலம் குறித்த நேரலை அப்டேட்ஸ் உடனுக்குடன் இங்கே ஸ்போர்ட்ஸ் விகடன் தளத்தில்...
கோடிகளை அள்ளிய ஹாரி ப்ரூக்!
சமீபமாக இங்கிலாந்து அணிக்காக சிறப்பாக ஆடி வரும் ஹாரி ப்ரூக்கை சன்ரைசர்ஸ் அணி 13.25 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
ஏலத்தில் சென்னை:
ஏலத்தில் சென்னை அணி வாங்கியிருக்கும் வீரர்களின் பட்டியல்:
பென் ஸ்டோக்ஸ் - 16.25 கோடி
கைல் ஜேமிசன் - 1 கோடி
நிஷாந்த் சிந்து - 60 லட்சம்
அஜிங்கியா ரஹானே - 50 லட்சம்
ஷேக் ரஷீத் - 20 லட்சம்
அஜய் மண்டல் - 20 லட்சம்
பகத் வர்மா - 20 லட்சம்
நிறைவடைந்தது மினி ஏலம்!
405 வீரர்கள் பங்கேற்ற ஏலத்தில் 80 வீரர்கள் அணிகளால் வாங்கப்பட்டிருக்கின்றனர்.
மகிழ்வும் சோகமும்
சகோதரர்களில் இளையவரான சாம் கரன் ஐ.பி.எல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு ஏலம் போன நிலையில், அண்ணன் டாம் கரனை எந்த அணியும் வாங்கவில்லை.மொத்தமாக 167 கோடி ரூபாய்க்கு வீரர்கள் ஏலம் போயிருக்கின்றனர்.
விலைபோகாத தமிழக வீரர்!
தமிழக வீரர் பாபா இந்திரஜித்தை எந்த அணியும் வாங்கவில்லை.
டெல்லியில் மனிஷ் பாண்டே!
மனிஷ் பாண்டேவை 2.40 கோடிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஏலத்தில் வாங்கியிருக்கிறது.
பலமடங்கு விலைபோன முகேஷ்!
அடிப்படை விலை 20 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்த உள்ளூர் போட்டிகளில் பெங்கால் அணிக்காக ஆடிவரும் முகேஷ் குமாரை 5.5 கோடிக்கு டெல்லி அணி வாங்கியிருக்கிறது. இவர் கடந்த சீசன்களில் டெல்லி அணிக்காக நெட் பவுலராக செயல்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கவனம் ஈர்த்த மவி!
வேகப்பந்து வீச்சாளர் சிவம் மவியை 6 கோடி ரூபாய்க்கு குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கியுள்ளது.
ஸ்பின்னருக்கு 2 கோடிதான்!
இங்கிலாந்து அணியின் லெக் ஸ்பின்னரான அடில் ரஷீத்தை 2 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் அணி வாங்கியுள்ளது.
உனத்கட்டுக்கு அடிப்படை விலை மட்டுமே!
இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனத்கட்டை அடிப்படை விலையான 50 லட்சத்திற்கே லக்னோ அணி வாங்கியுள்ளது.
விலைபோகாத ஜோர்டன்!
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் ஜோர்டனை எந்த அணியும் வாங்கவில்லை.
பூரனுக்கு 16 கோடி:
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரனை 16 கோடி ரூபாய்க்கு லக்னோ அணி வாங்கியிருக்கிறது.
சென்னையில் ஸ்டோக்ஸ்!
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான பென் ஸ்டோக்ஸை 16.25 கோடி ரூபாய்க்கு சென்னை அணி வாங்கியிருக்கிறது.
காஸ்டலியான அறிமுகம்!
டெல்லி மற்றும் மும்பை அணிகளுக்கிடையேயான கடும் போட்டியின் முடிவில் ஆஸ்திரேலிய அணிக்காக அதிரடியாக ஆடி வரும் கேமரூன் க்ரீனை 17.50 கோடி ரூபாய்க்கு மும்பை அணி வாங்கியுள்ளது.
ஜேசன் ஹோல்டரை 5.75 கோடிக்கு ராஜஸ்தான் அணி வாங்கியுள்ளது.
மாஸ் காட்டிய சாம் கரன்!

இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் சாம் கரனை அணி 18.50 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் வாங்கியுள்ளது. ஐ.பி.எல் வரலாற்றிலேயே அதிகபட்ச விலைக்கு ஏலம் போன வீரர் எனும் சாதனையை சாம் கரன் படைத்திருக்கிறார்.
விலைபோகாத ஜோ ரூட்!
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட்டை எந்த அணியும் வாங்கவில்லை.
களத்தில் குதித்த சிஎஸ்கே!

அஜிங்கியா ராஹானேவை அடிப்படை விலையான 50 லட்சத்திற்கே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது.
குஜராத்தில் வில்லியமன்சன்:

முதல் வீரராக கேன் வில்லியமன்சன் ஏலம் விடப்பட்டார். வில்லியம்சனை அடிப்படை விலையான 2 கோடிக்கே குஜராத் டைட்டன்ஸ் வாங்கியுள்ளது.
தொடங்கவிருக்கும் ஐபிஎல் 2023 மினி ஏலம்!

2023-ம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவிருக்கிறது. கடந்த மாதம் ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தன. இதனைத் தொடர்ந்து நடைபெறும் மினி ஏலத்தில் கோடிகளை கொட்டி வீரர்களை வாங்க 10 அணிகளும் காத்திருக்கிறார்கள்.