Published:Updated:

CSK v RR: ஹெட்போன், கேமரா நோ; சேப்பாக்கம் மைதானத்துக்குள் எந்தெந்த பொருளுக்கெல்லாம் அனுமதி கிடையாது?

சேப்பாக்கம் மைதானம்

ரசிகர்கள் எந்தெந்த பொருள்களை எல்லாம் மைதானத்துக்குள் கொண்டு வரக்கூடாதென தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஒரு பெரிய பட்டியலையே வெளியிட்டுள்ளது.

Published:Updated:

CSK v RR: ஹெட்போன், கேமரா நோ; சேப்பாக்கம் மைதானத்துக்குள் எந்தெந்த பொருளுக்கெல்லாம் அனுமதி கிடையாது?

ரசிகர்கள் எந்தெந்த பொருள்களை எல்லாம் மைதானத்துக்குள் கொண்டு வரக்கூடாதென தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஒரு பெரிய பட்டியலையே வெளியிட்டுள்ளது.

சேப்பாக்கம் மைதானம்

ஐ.பி.எல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டிகள் நடைபெறுவதால் உள்ளூர் ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர். கடந்த ஏப்ரல் 3-ம் தேதி சென்னை - லக்னோ இடையேயான போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றிருந்தது. அடுத்ததாக இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையிலான போட்டி இரவு 7.30 மணிக்கு சேப்பாக்கத்தில் நடைபெற இருக்கிறது.

CSK vs RR
CSK vs RR
இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஏற்கெனவே தொடங்கி உடனே விற்றும் தீர்ந்துவிட்டது. இந்நிலையில் போட்டியை நேரில் பார்க்கச் செல்லும் ரசிகர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருக்கின்றன. ரசிகர்கள் எந்தெந்த பொருள்களை எல்லாம் மைதானத்துக்குள் கொண்டு வரக்கூடாதென தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஒரு பெரிய பட்டியலையே வெளியிட்டுள்ளது.

அதன்படி, கண்ணாடி பாட்டில்கள் மற்றும் கன்டெய்னர்கள், குளிர்பானம் மற்றும் மதுபானம் அடங்கிய பாட்டில்கள், கத்திகள் வாணவேடிக்கைகள், வெடிபொருள்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள், சிகரெட் லைட்டர்கள் மற்றும் தீப்பெட்டிகள், வாயு அடைக்கப்பட்ட கன்டெயினர்கள், உருட்டுக் கட்டைகள், தீப்பந்தங்கள், காற்று ஒலிப்பான்கள், புகைக் குண்டு மற்றும் கொடிக்கம்பிகள், மதுபானங்கள் மற்றும் போதைப்பொருள்கள் (மருத்துவர்கள் பரிந்துரையுடன் கூடிய மாத்திரைகள் தவிர) போன்றவற்றுக்குக் கண்டிப்பாக அனுமதி இல்லை.

சென்னை சேப்பாக்கம் மைதானம்
சென்னை சேப்பாக்கம் மைதானம்

இதனுடன் அரங்கத்தின் வெளியே தயாரித்த உணவுப் பொருள்கள், செல்லப் பிராணிகள், பேனர்கள், விளம்பரத்தட்டிகள், துண்டுப் பிரசுரங்கள், அரசியல், மதம் மற்றும் சாதி தொடர்பான கடுமையான வார்த்தைகள் எழுதப்பட்ட விளம்பரங்கள், கோஷங்கள் அல்லது உருவங்கள் அல்லது வியாபாரம் தொடர்பான விளம்பரங்கள் மற்றும் எல்லா வகையான புகைப்பட தாங்கிகள் அல்லது ஒளிப்பதிவு கருவிகள் (தனிப்பட்ட உபயோகத்திற்காகவோ அல்லது வேறு எவ்விதமான உபயோகத்திற்காகவோ) மற்றும் அனைத்து வகையான கேமராக்கள் அல்லது பிறவிதமான புகைப்படம் எடுக்கக்கூடிய அல்லது ஒலிப்பதிவு செய்யக்கூடிய கருவிகள் (எப்படிப்பட்ட வகைகளாக இருந்தாலும் நிழற்படம் அல்லது நகரக்கூடியதைப் பதிவு செய்யும் கருவியாக இருந்தாலும்), தலைக்கவசம் (Helmet), பைகள், தண்ணீர், பொட்டலங்கள், போன்ற பொருள்களை மைதானத்திற்குள் எடுத்துச் செல்லக்கூடாது என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

நடந்து முடிந்த போட்டிகளின் போது சில கேட்களில் ப்ளூடூத் ஹெட்போன்களுக்கு கூட அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால், மொபைல்போன்களுக்கு எந்தவித தடையும் சொல்லவில்லை. மேலும், வெளியில் விற்கப்படும் தேசியக் கொடிகளோ அல்லது ஆடும் அணிகளின் கொடிகளோ கூட மைதானத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. இவற்றுடன், டிக்கெட் இல்லாமல் எந்த வயதுக் குழந்தையும் அரங்கத்தினுள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.