Published:Updated:

Dhoni: `இதனாலதான் இந்தியன் டீம்ல எனக்கு நிரந்தம் இடம் கிடைச்சுது' - தோனி பகிர்ந்த ஃப்ளாஷ்பேக்!

Dhoni

ஓடிஐ போட்டிகளில் தோனியின் அதிகபட்ச ஸ்கோர் 183* தான். இலங்கைக்கு எதிராக 2005 இல் அந்த இன்னிங்ஸை தோனி ஆடியிருந்தார். அந்த நினைவுகளைத்தான் இப்போது தோனி மீண்டும் அசைபோட்டிருக்கிறார்.

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருந்தது. இந்தத் தோல்விக்குப் பிறகு சென்னை அணியின் கேப்டனான தோனி சில முக்கியமான விஷயங்களை பற்றி பேசியிருந்தார்.

குறிப்பாக, நாங்கள் இதனால்தான் தோற்றோம் என தோல்விக்கான காரணத்தையும் அறுதியிட்டு கூறியிருக்கிறார்.

Dhoni
Dhoni

தோல்விக்கான காரணம் குறித்து பேசத்தொடங்கிய தோனி, 'ராஜஸ்தான் அணி சராசரியை விட கொஞ்சம் அதிகமாக ஸ்கோர் செய்துவிட்டார்கள். பவர்ப்ளேயில் நாங்கள் கொஞ்சம் அதிகமாகவே ரன்களை வாரி வழங்கிவிட்டோம். பிட்ச்சும் அந்த சமயத்தில் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. மேலும், இறுதிக்கட்டத்தில் எட்ஜ் ஆகிய ஒரு ஐந்தாறு பவுண்டரிகள் சென்றிருந்தது. அதை தவிர்த்திருந்தால் ஸ்கோர் இன்னும் கொஞ்சம் கூட குறைந்திருக்கும். பேட்டிங்கிலும் பவர்ப்ளேவை சரியாக பயன்படுத்தத் தவறிவிட்டோம். ஒரு வீரரை ஸ்கோர்போர்டை வைத்து மட்டுமே மதிப்பிட முடியாது. பதிரனா அத்தனை மோசமாக பந்துவீசினார் என நினைக்கவில்லை. அவர் நன்றாகத்தான் வீசியிருந்தார்.

யாஷஸ்வி அவர்களுக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தார். பௌலர்களின் மீது அழுத்தம் உண்டாக்கும் வகையில் ரிஸ்க் எடுத்து ஆடினார். இறுதியில் ஜூரேலும் நல்ல ஒரு ஃபினிஷை கொடுத்தார்.'
யாஷஸ்வி
யாஷஸ்வி

என எதிரணி வீரர்களையும் பாராட்டிய தோனி அடுத்ததாக போட்டி நடைபெற்ற சவாய் மான்சிங் ஸ்டேடியத்தை பற்றிய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார்.

'என்னுடைய முதல் சதத்தை விசாகப்பட்டினத்தில் வைத்து அடித்திருந்தேன். அந்த சதம் எனக்கு ஒரு 10 போட்டிகளுக்கான வாய்ப்பை பெற்றுக்கொடுத்தது. ஆனால், இங்கே ராஜஸ்தானில் நான் ஆடிய 183* இன்னிங்ஸ்தான் எனக்கு இந்திய அணியில் வருடம் முழுவதற்குமான வாய்ப்பை பெற்றுக்கொடுத்தது' என தோனி பேசியிருந்தார்.

ஓடிஐ போட்டிகளில் தோனியின் அதிகபட்ச ஸ்கோர் 183* தான். இலங்கைக்கு எதிராக 2005 இல் அந்த இன்னிங்ஸை தோனி ஆடியிருந்தார். அந்த நினைவுகளைத்தான் இப்போது தோனி மீண்டும் அசைபோட்டிருக்கிறார்.