Published:Updated:

DC v CSK: `வந்துட்டோம்னு சொல்லு!' - வாள் வீசிய கான்வே - ருத்துராஜ் இணை; ப்ளே ஆஃப்பில் சென்னை!

DC v CSK - தோனி

DC v CSK: இன்று ருத்துராஜ் தனது வழக்கமான பழைய பாணிக்கு திரும்பியிருந்தார். பவர்ப்ளேயில் நின்று நிதானமாக மெதுவாக ஆடிவிட்டு, மிடில் ஓவர்களிலிருந்து அதிரடியைத் தொடங்கினார்.

Published:Updated:

DC v CSK: `வந்துட்டோம்னு சொல்லு!' - வாள் வீசிய கான்வே - ருத்துராஜ் இணை; ப்ளே ஆஃப்பில் சென்னை!

DC v CSK: இன்று ருத்துராஜ் தனது வழக்கமான பழைய பாணிக்கு திரும்பியிருந்தார். பவர்ப்ளேயில் நின்று நிதானமாக மெதுவாக ஆடிவிட்டு, மிடில் ஓவர்களிலிருந்து அதிரடியைத் தொடங்கினார்.

DC v CSK - தோனி
டாஸை வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பேட் செய்யப்போவதாக அறிவித்தார். இதுவரை கொஞ்சம் முன் பின்னாக பெர்ஃபார்ம் செய்து கொண்டிருந்த ருத்துராஜ் கெய்க்வாட் இன்று வாளேந்தி வந்த வீரனை போல தக்க சமயத்தில் முரட்டுத்தனமான இன்னிங்ஸை ஆடினார்.
தோனி
தோனி

கூடவே கான்வேவும் Daily Routine போல கச்சிதமான இன்னிங்ஸை ஆடினார். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 141 ரன்களை எடுத்திருந்தனர். இந்த சீசன் முழுவதும் தனது வழக்கமான பாணியிலிருந்து பின் வாங்கி தொடக்கத்திலிருந்தே கொஞ்சம் அக்ரஸிவ்வாக ஆட நினைத்திருந்தார் ருத்துராஜ். இதனாலயே பல போட்டிகளில் அவரால் பெரிய இன்னிங்ஸ்களை ஆட முடியாமல் போனது. ஆனால், இன்று ருத்துராஜ் தனது வழக்கமான பழைய பாணிக்கு திரும்பியிருந்தார். பவர்ப்ளேயில் நின்று நிதானமாக மெதுவாக ஆடிவிட்டு, மிடில் ஓவர்களிலிருந்து அதிரடியைத் தொடங்கினார்.

DC v CSK
DC v CSK

பவர்ப்ளேயில் 21 பந்துகளில் 22 ரன்களை மட்டுமே ருத்துராஜ் எடுத்திருந்தார். ஆனால், கடைசியில் 50 பந்துகளில் 79 ரன்களை அடித்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 158 ஆக இருந்தது. ருத்துராஜ் கெய்க்வாட் அவுட் ஆன பிறகும் கான்வே நின்று ஆடிக்கொண்டிருந்தார். ருத்துராஜ் தவறவிட்ட சதத்தை கான்வே அடிப்பார் என எதிர்பார்த்தோம். ஆனால், கான்வேயாலும் சதமடிக்க முடியவில்லை. துபே வழக்கம் போல உள்ளே வந்து இரண்டு - மூன்று சிக்சர்களை பறக்கவிட்டார். இறுதியில் ஜடேஜாவும் தோனியும் வந்து கொஞ்சம் அதிரடியான ஃபினிஷ் கொடுக்க, சென்னை அணி 20 ஓவர்களில் 223 ரன்களை எடுத்தது.

டெல்லிக்கு 224 ரன்கள் டார்கெட். டெல்லிக்கு இந்தப் போட்டியை வெல்வதால் எந்த பிரயோஜனமும் இல்லை. அதனாலயே அவர்களுக்கு எந்த அழுத்தமும் இல்லை. இதனால் டெல்லி தில்லுக்கு துட்டாக இறங்கி அடித்து சர்ப்ரைஸ் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. பாலிட்டிக்ஸ்ல மட்டும்தான் டெல்லிக்கு பவரு. மத்த எல்லா இடத்துலயும் தவறுதான் என்பது போல வழக்கம் போல தவறு மேல் தவறு செய்து சொதப்பியது டெல்லி. பவர்ப்ளேக்குள்ளாகவே டெல்லி 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. பிரித்திவி ஷா, ரூஸொ, சால்ட் என மூன்று அடிதடி வீரர்களும் அவசரகதியில் வெளியேறியிருந்தனர்.

DC v CSK
DC v CSK

தீபக் சஹார் இரண்டு விக்கெட்டுகளையும் துஷார் தேஷ்பாண்டே 1 விக்கெட்டையும் பவர்ப்ளேக்குள் வீழ்த்தியிருந்தனர். வார்னர் மட்டும் தனியாக ஒரு பக்கம் நின்று போராடியிருந்தாலும் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. கடைசி வரை நின்று 86 ரன்களில் அவுட் ஆனார். 20 ஓவர்களில் 146 ரன்களை மட்டுமே டெல்லி அணியால் எடுக்க முடிந்தது.

DC v CSK
DC v CSK

சென்னை அணி 77 ரன்களில் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றி மூலம் சென்னை அணி ப்ளே ஆப்ஸ் சுற்றுக்கும் தகுதிப்பெற்றது. சென்னை அணி இரண்டாம் இடத்தை தக்கவைத்துக் கொள்ளுமா என்பது மட்டுமே இப்போது இருக்கும் ஒரே கேள்வி. அதற்கு எஞ்சியிருக்கும் சில போட்டிகள் குறிப்பாக லக்னோ vs கொல்கத்தா போட்டியின் முடிவு தெரிய வேண்டும்.

'எங்களின் சீரான வெற்றிக்கு எந்த ரகசியமும் இல்லை. வீரர்களுக்கு உகந்த சௌகரியமான சூழலையும் இடத்தையும் உறுதி செய்து கொடுக்கிறோம். அணி நிர்வாகமும் எங்களுக்கு ஒத்துழைக்கிறது. பயிற்சியாளர்கள் குழுவிலிருக்கும் அத்தனை பேரும் வீரர்களுக்கு ஊக்கமாக இருக்கிறார்கள்.' என தங்களின் வெற்றிக்கான காரணம் குறித்து தோனி பேசினார்.

விசில் போடுங்க பாஸ்!