Published:Updated:

IPL 2023 RoundUp: குசும்பான கேமரா மேன் முதல் மும்பை இந்தியன்ஸின் ரூ.29,999 கேமிங் சேர் வரை!

மும்பை இந்தியன்ஸின் கேமிங் சேர்

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடந்த சுவாரஸ்ய சம்பவங்களின் தொகுப்பு இதோ...

Published:Updated:

IPL 2023 RoundUp: குசும்பான கேமரா மேன் முதல் மும்பை இந்தியன்ஸின் ரூ.29,999 கேமிங் சேர் வரை!

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடந்த சுவாரஸ்ய சம்பவங்களின் தொகுப்பு இதோ...

மும்பை இந்தியன்ஸின் கேமிங் சேர்

தட்டித் தூக்கிய தவான்!

நேற்றைய ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடின. கடைசி ஓவர் வரை விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 5 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி த்ரில் வெற்றியைப் பெற்றது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் 56 பந்துகளில் 86 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிகமுறை 50 ரன்களுக்கு மேல் அடித்த, 'இரண்டாவது இந்திய வீரர்' என்ற பெருமையை அவர் பெற்றார். இந்தப் பட்டியலில் முதலிடத்தில் விராட் கோலி உள்ளார். 

Dhawan
Dhawan

சஹாலின் அடுத்த சாதனை!

நேற்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இறுதிவரை போராடி தோல்வியுற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளரான சஹால், 4 ஓவர்கள் வீசியதில் 50 ரன்கள் கொடுத்து, ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இந்த ஒரேயொரு விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் "ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய இரண்டாவது வீரர்" என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதுவரை 133 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியுள்ள இவர், 171 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

மும்பை இந்தியன்ஸ் அறிமுகப்படுத்திய புதிய சேர்!

மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், 'மும்பை இந்தியன்ஸ் சேர்' என்றொரு புதிய கேமிங் சேரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேர், ரூபாய் 29,999/-க்கு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேர், கேமிங் அனுபவத்தை மேலும் சிறப்பானதாக மாற்றக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். இது முதுகெலும்புக்கு நல்ல இதமான அனுபவத்தைக் கொடுக்கும் என்று விளம்பரப்படுத்தப்படுகிறது. சாதாரண லெதரைவிட, 10 மடங்கு வலிமையான லெதரைக் கொண்டு இந்தச் சேர் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. 

தவானைப் பயமுறுத்திய அஷ்வின்!

நேற்றைய போட்டியில் பஞ்சாப் பேட்டிங் செய்தபோது 7வது ஓவரை ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் வீசினார். ஓவரின் நான்காவது பாலை வீச வரும்போது, பிரப்சிம்ரன் சிங் ஸ்ட்ரைக்கராக நின்று கொண்டிருந்தார். மறுமுனையில் நான்-ஸ்ட்ரைக்கராக ஷிகர் தவான் நின்றுக் கொண்டிருந்தார். அஸ்வின் தனது ரன்-அப்பை நிறுத்திவிட்டு, தவானைப் பார்க்கத் திரும்பினார். தவான், கிரீஸை விட்டு வெளியேறாததைப் பார்த்த அஷ்வின் எதுவும் செய்யவில்லை. உடனே டெலிவிஷன் கேமராமேன், பட்லரின் முகத்தைக் காண்பித்தார். இந்த வீடியோவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, தனது ட்விட்டர் பக்கத்தில் நகைச்சுவையாகப் பதிவிட்டுள்ளது. பட்லருக்கும் அஷ்வினுக்கும் நடந்த மேன்கட் (இப்போது ரன் அவுட்) சம்பவத்தை இது நினைவுபடுத்தியது.

Ashwin
Ashwin

சிஎஸ்கே-வில் இணைந்த தென்னாப்பிரிக்க வீரர்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தென் ஆப்பிரிக்க வீரரான சிசண்டா மகாலா இணைந்துள்ளார். சிஎஸ்கே அணியின் பந்துவீச்சாளர்கள் குறித்து விமர்சனம் எழுந்து வந்த நிலையில், சிசண்டா மகாலா அணியில் இணைந்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.