Published:Updated:

IPL 2023 Daily Round Up: CSK -வின் மோசமான சாதனை முதல் தொடரிலிருந்து விலகிய வாஷிங்டன் சுந்தர் வரை!

ஐ.பி.எல் தொடரில் நேற்றைய தினத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களின் தொகுப்பு.

Published:Updated:

IPL 2023 Daily Round Up: CSK -வின் மோசமான சாதனை முதல் தொடரிலிருந்து விலகிய வாஷிங்டன் சுந்தர் வரை!

ஐ.பி.எல் தொடரில் நேற்றைய தினத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களின் தொகுப்பு.

ஜெய்ஸ்வால் vs சி.எஸ்.கே:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 43 பந்துகளில் 77 ரன்கள் அடித்து பட்டையை கிளப்பினார். இவர் கடந்த 2020 சீசனில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அறிமுக வீரராக சி.எஸ்.கே அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கினார். இவர் விளையாடிய முதல் ஐபிஎல் போட்டி இதுவாகும். 2021 தொடரில் இதே சி.எஸ்.கே அணிக்கு எதிராக தனது முதல் அரைசதத்தை 21 பந்துகளில் அடித்திருந்தார். இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்றார். இதன் மூலம், இந்த தொடரில் 2வது முறையாக ஆட்ட நாயகன் விருதை அவர் வென்றுள்ளார்.

யாஷஸ்வி ஜெய்ஸ்வால்
யாஷஸ்வி ஜெய்ஸ்வால்

ராஜஸ்தான் ராயல்ஸின் சாதனை:

ஜெய்ப்பூர் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தனது 200 வது போட்டியில் விளையாடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஜெய்ப்பூர் மைதானத்தில் முதன்முறையாக 200 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. இப்போட்டியில் 202 ரன்கள் எடுத்தது. ஐ.பி.எல் வரலாற்றில் ஜெய்ப்பூரின் சவாய்மான்சிங் மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவே ஆகும். இதற்கு முன்பு 2012 சீசனில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணி எடுத்த 197 ரன்கள் தான் அதிகபட்சமாக இருந்தது. மேலும், சி எஸ்.கே அணிக்கு எதிரான கடந்த 7 போட்டிகளில் 6 முறை ராஜஸ்தான் அணியே வெற்றிபெற்று அசத்தியுள்ளது.

வாஷிங்டன் சுந்தர் விலகல்:

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆல்-ரவுண்டர் வீரரான வாஷிங்டன் சுந்தர், நடப்பு 2023 ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். இவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டுள்ளது.

வாஷிங்டன் சுந்தர் | SRH vs LSG
வாஷிங்டன் சுந்தர் | SRH vs LSG

இதனால் மீதமுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் போட்டிகளில் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. `விரைவாக குணமடையுங்கள், வாஷி!' என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

துணிவுடன் சண்டை செய்த துபே:

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக அதிரடியான ரன் குவிப்பில் ஈடுபட்டார், ஷிவம் துபே. சிஎஸ்கே அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் நிதானமாக விளையாடிய போது, இவர் அதிரடியாக 4 சிக்ஸர்களை பறக்க விட்டார். இதன் மூலம், டி20 கிரிக்கெட் போட்டிகளில் 100 சிக்ஸர்களை அடித்துள்ளார். இந்தப் போட்டியில் 33 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதேபோல், டி20 போட்டிகளில் 100 பௌண்டரிகளையும் கடந்துள்ளார். மேலும் இந்தத் தொடரில் ஹாட்ரிக் அரை சதங்களை அடித்துள்ளார், துணிச்சல் வீரர் துபே.

Dhoni
Dhoni

சி.எஸ்.கே-வின் மோசமான சாதனை:

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 32 ரன்கள் வித்தியாசத்தில் சி.எஸ்.கே அணி தோல்வியடைந்தது. முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, பவர்-பிளே ஓவர்களில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சி.எஸ்.கே அணியின் பௌலர்கள் 7 ஓவர்களில் 75 ரன்களை வழங்கினர். இந்த தொடர் முழுக்க பவர்-பிளேவில் ரன்களை வாரி வழங்கியுள்ளது. இதனால், பவர்-பிளே ஓவர்களில் மோசமான எக்கானமி ( ஒரு ஓவரில் 10 ரன்கள்) கொண்ட அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது, சி.எஸ்.கே அணி.