Published:Updated:

IPL 2023 Round Up: சிக்ஸர் நாயகன் ரோஹித் முதல் ஆர்சிபியின் ஏப்ரல் 23 ராசி வரை!

Rohit Sharma

ஐபிஎல் தொடரில் நேற்றைய தினத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களின் தொகுப்பு.

Published:Updated:

IPL 2023 Round Up: சிக்ஸர் நாயகன் ரோஹித் முதல் ஆர்சிபியின் ஏப்ரல் 23 ராசி வரை!

ஐபிஎல் தொடரில் நேற்றைய தினத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களின் தொகுப்பு.

Rohit Sharma

'சிக்ஸர் நாயகன்' ரோஹித்:

வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர் கொண்டது. இதில் இரண்டாவது இன்னிங்ஸில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோஹித் சர்மா, 27 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 4 பௌண்டரி மற்றும் 3 சிக்ஸர்களையும் அடித்திருந்தார். இதன் மூலம், ஐபிஎல் தொடரில் 250 சிக்ஸர்களை அடித்துள்ளார். ஐபிஎல் தொடரில் 250 சிக்ஸர்களை அடித்த முதல் இந்திய வீரரானார், ரோஹித். ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெய்ல் (357) முதலிடத்திலும், ஏபி டிவில்லியர்ஸ் (251) இரண்டாவது இடத்திலும், ரோஹித் சர்மா (250) மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

ரோஹித் ஷர்மா | PBKS vs MI
ரோஹித் ஷர்மா | PBKS vs MI

மலிங்கா-வை சமன் செய்த மிஸ்ரா:

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, தனது சொந்த மண்ணில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர் கொண்டது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்தது, குஜராத் டைட்டன்ஸ். இதில் லக்னோ அணியின் வீரரான அமித் மிஸ்ரா 2 ஓவர்களை வீசியதில், 9 ரன்களைக் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். இதன் மூலம், இவர் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் (170) வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். மேலும், மும்பை இந்தியன்ஸ் வீரரான லஷித் மலிங்காவின் (170) சாதனையை சமன் செய்துள்ளார், அமித் மிஸ்ரா. இப்பட்டியலில் ட்வெய்ன் பிராவோ 183 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

ஆர்.சி.பி vs ஏப்ரல்-23:

ஐபிஎல் வரலாற்றில் ஏப்ரல் 23 என்ற தேதிக்கும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் ஒரு மிகப்பெரிய பந்தம் உள்ளது. கடந்த 2013 ஐபிஎல் சீசனில் ஏப்ரல் 23ஆம் தேதியில் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக 263 ரன்களை எடுத்தது. ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவே ஆகும். 2017 ஐபிஎல் சீசனிலும் இதே நாளில் தான், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 49 ரன்களை எடுத்து 9.4 ஓவர்களில் ஆல்-அவுட் ஆகியது. ஐபிஎல் தொடரில் ஒரு அணி எடுத்த குறைந்தபட்ச ஸ்கோர் இதுவே ஆகும். இதே நாளில் தான், இந்த இரண்டு சாதனைகளையும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி படைத்துள்ளது.

கடந்த 2022 சீசனிலும் ஏப்ரல் 23ஆம் தேதியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 68 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆகியது, ஆர்.சி.பி அணி. பெங்களூர் அணி, 2012 சீசனிலும் இதே தேதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் விளையாடியது. இப்போட்டியில் பெங்களூர் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்றைய போட்டியில் ஆர்.சி.பி அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடவுள்ளதால், எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

RCB டீம்
RCB டீம்
File Photo

கோலியின் சாதனையை முறியடித்த கே.எல். ராகுல்:

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனான கே.எல்.ராகுல், நேற்றைய போட்டியில் 61 பந்துகளில் 68 ரன்கள் எடுத்திருந்தார். இதன் மூலம் டி20 போட்டிகளில் 7,000 ரன்களைக் கடந்துள்ளார். மேலும், டி20 போட்டிகளில் இன்னிங்ஸ் அடிப்படையில் வேகமாக 7,000 ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இவருக்கு முன்பாக விராட் கோலி, 212 இன்னிங்ஸ்களில் 7,000 ரன்கள் அடித்து இச்சாதனையை படைத்திருந்தார்.

அசரவைத்த அர்ஷ்தீப் சிங்:

மும்பை இந்தியன்ஸ் அணியை சொந்த மண்ணிலேயே வீழ்த்தியது, பஞ்சாப் கிங்ஸ் அணி. இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்களின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார், அர்ஷ்தீப் சிங்.

IPL 2023 Round Up: சிக்ஸர் நாயகன் ரோஹித் முதல் ஆர்சிபியின் ஏப்ரல் 23 ராசி வரை!

4 ஓவர்களை வீசிய இவர், நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி 29 ரன்களை விட்டுக் கொடுத்தார். கடைசி ஓவரில் இவர் வீசிய இரண்டு பந்துகள் ஸ்டம்பை பதம் பார்த்தது. இவர், இந்த ஆட்டத்தின் மூலமாக ஐபிஎல் தொடரில் விக்கெட்டுகளில் அரைசதத்தை (53) கடந்துள்ளார். மேலும், இந்த தொடரில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி ஊதா தொப்பியைக் கைப்பற்றியுள்ளார், அர்ஷ்தீப் சிங் எனும் அதிரடி நாயகன்.