Published:Updated:

IPL 2023 RoundUp: ஐ.பி.எல் -ஐ விட்டு வெளியேறிய வீரர் முதல் சேப்பாக்கத்தில் ஆட்டம் காட்டிய நாய் வரை!

Ruturaj

ஐ.பி.எல் போட்டியில் நேற்றைய தினத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களின் தொகுப்பு.

Published:Updated:

IPL 2023 RoundUp: ஐ.பி.எல் -ஐ விட்டு வெளியேறிய வீரர் முதல் சேப்பாக்கத்தில் ஆட்டம் காட்டிய நாய் வரை!

ஐ.பி.எல் போட்டியில் நேற்றைய தினத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களின் தொகுப்பு.

Ruturaj

ஷகிப் அல் ஹசன் விலகல்!

வங்கதேச அணியின் நட்சத்திர வீரரான ஷகிப் அல் ஹசன், இந்த நடப்பு 2023 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 1.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். தற்போது இந்த ஐ.பி.எல் 2023 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து வெளியேறியுள்ளார். இன்று வங்கதேச அணிக்கும் அயர்லாந்துக்கு அணிக்கும் இடையே நடைபெறவுள்ள ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார். ஏற்கெனவே, இத்தொடரில் காயம் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் பங்கேற்காத நிலையில், ஷகிப் அல் ஹசனும் வெளியேறியது, கொல்கத்தா அணிக்கு மற்றொரு பின்னடைவாக அமைந்துள்ளது.

Dhoni
Dhoni

அவருக்கு இணை அவரே!

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு 2023 ஐபிஎல் தொடரின் முதல் வெற்றியை அதிரடியாக பதிவு செய்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 217 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரில் களமிறங்கிய தோனி, அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை பறக்க விட்டார். அவர் களமிறங்கியவுடன் ஜியோ சினிமா ஆப்-ல் பார்வையாளர்களின் எண்ணிக்கை 1.7 கோடியாக உயர்ந்தது. இதற்கு முந்தைய போட்டியில் தோனியின் பேட்டிங்-ஐ 1.6 கோடி பார்வையாளர்கள் பார்த்தனர். இந்த நடப்பு 2023 ஐபிஎல் சீசனில் இதுவரை அதிகம் பேரால் பார்க்கப்பட்ட போட்டி இதுவே.

வெல்கம் மில்லர்!

தென்னாப்பிரிக்க வீரரான டேவிட் மில்லர் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இணைந்துள்ளதாக, அணிநிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. டேவிட் மில்லர், நெதர்லாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தென்னாப்பிரிக்க அணியில் விளையாடியதால், ஐபிஎல் தொடக்கப் போட்டியில் விளையாட முடியவில்லை. கடந்த மார்ச் 31ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் 2023 சீசனின் தொடக்க போட்டியின் போது, குஜராத் டைட்டன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சனுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக நடப்பு தொடரிலிருந்து வெளியேறினார். இந்நிலையில் டேவிட் மில்லர் அணியில் இணைந்துள்ளது, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஆசுவாசத்தை கொடுத்துள்ளது.

CSK
CSK

வேடிக்கை காட்டிய நாய்!

சேப்பாக்கம் மைதானத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. ஆட்டம் தொடங்கவிருந்த சமயத்தில் நாய் ஒன்று மைதானத்திற்குள் நுழைந்தது. ஆவேஷ் கான், கான்வே மற்றும் அம்பயர் எல்லாம் நாயை பிடிக்க முயற்சி செய்து நாயோடு கபடி ஆடிக்கொண்டிருந்தனர். நாயை வெளியேற்ற தாமதமானதால், ஆட்டம் 5 நிமிடத்திற்கு மேலாக தடைபட்டது. இந்நிகழ்வுக்கு கருத்து தெரிவித்த சுனில் கவாஸ்கர் அவர்கள், "இதுபோன்ற விஷயங்களால் தாமதம் ஏற்படாமல் இருக்க, மைதான பராமரிப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும்." என தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, கடந்த மார்ச் 22 ஆம் தேதி இதே சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா vs இந்தியா இடையேயான ஒருநாள் போட்டியின் போதும் நாய் குறுக்கிட்டது, குறிப்பிடத்தக்கதாகும்.

ஆரஞ்சு தொப்பியோடு ருத்துராஜ்.!

நேற்று நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அட்டகாசமான வெற்றியைப் பெற்றது. நேற்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரரான ருதுராஜ் கெய்க்வாட், 31 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து அசத்தினார்.

Ruturaj
Ruturaj

இதற்கு முந்தைய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் 50 பந்துகளில் 92 ரன்கள் எடுத்தார். இந்த இரண்டு ஆட்டங்களில் விளையாடிய இவர், மொத்தம் 149 ரன்களுடன் ஆரஞ்சு நிறத் தொப்பியை கைப்பற்றியதுடன், இந்த "ஐபிஎல்-லில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள்" பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.