Published:Updated:

IPL 2023 Daily Round Up: `மும்பைகூட பைனல்ஸ் வேண்டாம்'- பிராவோ பேட்டி முதல் மாம்பழ சர்ச்சை வரை!

பிராவோ

'விராட்..! விராட்..!' என ரசிகர்கள் கோஷமிட்டனர். நேற்றைய போட்டியில் நவீன் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு, ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கையை காதில் வைத்து போஸ் கொடுத்தார்.

Published:Updated:

IPL 2023 Daily Round Up: `மும்பைகூட பைனல்ஸ் வேண்டாம்'- பிராவோ பேட்டி முதல் மாம்பழ சர்ச்சை வரை!

'விராட்..! விராட்..!' என ரசிகர்கள் கோஷமிட்டனர். நேற்றைய போட்டியில் நவீன் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு, ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கையை காதில் வைத்து போஸ் கொடுத்தார்.

பிராவோ

சச்சின் சாதனையை முறியடித்த ருத்துராஜ்:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ருத்துராஜ் கெய்க்வாட், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி இருந்தார். ஐபிஎல் போட்டிகளில் 50 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள இவர், 1771 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார். ஐபிஎல் வரலாற்றில், 50 இன்னிங்ஸ்களில் விளையாடி அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார், ருத்துராஜ். இதற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய சச்சின் டெண்டுல்கர், 50 இன்னிங்ஸ்களில் 1683 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். இதன் மூலம், சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார், ருத்துராஜ் கெய்க்வாட்.

ருத்துராஜ் கெய்க்வாட்
ருத்துராஜ் கெய்க்வாட்
IPL

MI-யின் புது கூட்டணி:

இந்த 2023 ஐபிஎல் சீசனில், எலிமினேட்டர் போட்டி நேற்று நடைபெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் விளையாடின. இரண்டாவது இன்னிங்ஸில் மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீசியது.

இதில் 16வது ஓவரை மெய்டனாக வீசினார், கிறிஸ் ஜோர்டன். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக, மெய்டன் ஓவரை வீசிய முதல் மும்பை வீரர் என்ற பெருமையையும் கிறிஸ் ஜோர்டன் பெற்றுள்ளார். அதே போல், ஆகாஷ் மேத்வால் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியிருந்தார். ஐபிஎல் வரலாற்றிலேயே, எலிமினேட்டர் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார், ஆகாஷ் மேத்வால். இதன் மூலம்,  மும்பை இந்தியன்ஸ் அணியில் புதிய பௌலிங் கூட்டணி உருவாகியுள்ளது. 

Akash Madhwal |ஆகாஷ் மத்வால்
Akash Madhwal |ஆகாஷ் மத்வால்

வைரலாகும் மாம்பழ சண்டை:

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு, லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் பந்துவீச்சாளரான நவீன்-உல்-ஹக், விராட் கோலி அவுட் ஆகிய போது மாம்பழங்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டு இருந்தார். நேற்றைய போட்டியிலும் வழக்கம் போல நவீன் பந்து வீசிய போது, 'விராட்..! விராட்..!' என ரசிகர்கள் கோஷமிட்டனர். நேற்றைய போட்டியில் நவீன் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு, ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கையை காதில் வைத்து போஸ் கொடுத்தார்.

ஆனால், நேற்றைய போட்டியில் லக்னோ தோல்வியடைந்தது. போட்டிக்கு பிறகு மும்பை அணி வீரர்களான சந்தீப் வாரியர், குமார் கார்த்திகேயா மற்றும் விஷ்ணு வினோத் ஆகிய மூன்று பேரும் மாம்பழத்தை டேபிளில் வைத்து போஸ் கொடுத்தனர். இந்த புகைப்படத்தை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியிருந்தனர். பின்னர், இந்த பதிவை நீக்கிவிட்டனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

இன்ஸ்டாகிராம்  பதிவு
இன்ஸ்டாகிராம் பதிவு

ஜடேஜாவுக்கு என்ன தான் ஆச்சு!

கடந்த சில வாரங்களாக ரவீந்திர ஜடேஜாவுக்கும், சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கும் இடையே சில பிரச்னைகள் இருந்து வருவதாக சமூக வலைதளங்களில் பேச்சு அடிபடுகிறது. கடந்த 21 ஆம் தேதி தனது டிவிட்டர் பக்கத்தில், "Karma will get back to you, sooner or later it surely will." என்ற வாசகத்தைப் பதிவிட்டிருந்தார். இதுவும் சற்று சலசலப்பை ஏற்படுத்தியது. குஜராத் அணியுடனான போட்டிக்குப் பின்னர், 'போட்டியில் மிகவும் மதிப்புமிக்க வீரர்' என்ற விருதை அப்ஸ்டாக்ஸ் நிறுவனம் ஜடேஜாவிற்கு வழங்கியது. இதைக் குறிப்பிட்டு ட்வீட் செய்த ஜடேஜா, "அப்ஸ்டாக்ஸுக்கு தெரிகிறது, ஆனால் சில ரசிகர்களுக்கு தெரியவில்லை" என நகைச்சுவையாக பதிவிட்டிருந்தார். 'நான் பேட்டிங் செய்யும்போது, ரசிகர்கள் "தோனி..! தோனி..!" எனவும் கோஷமிடுவதையும், நான் அவுட் ஆக வேண்டும் வேண்டிக் கொள்கிறார்கள்' என ஏற்கனவே பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் கடந்த போட்டிக்கு பிறகு, சி.எஸ்.கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன், ஜடேஜாவுடன் தனியாக பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைராலகி வருகின்றது. இதில் ஜடேஜாவை சமாதானம் செய்வது போல அழைத்துச் செல்கிறார், காசி விஸ்வநாதன் எனப் பதிவிட்டு வருகின்றனர்.

மும்பை கூட ஃபைனல்ஸ் வேண்டாம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பௌலிங் பயிற்சியாளரான ட்வைன் பிராவோ, கடந்த போட்டிக்கு பிறகு ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். இதில் பேசிய அவர், ``உண்மையிலயே, ஃபைனல்ஸ் மும்பை கூட விளையாடுறதுல எனக்கு விருப்பம் இல்லை. என்னோட நண்பர் பொல்லார்டுக்கு அது தெரியும்." என சிரித்துக் கொண்டே கூறினார்.

ட்வைன் பிராவோ
ட்வைன் பிராவோ

மேலும் பேசிய அவர், "நகைச்சுவைகள் ஒருபுறம் இருக்க, மூன்று அணிகளும் ஆபத்தான அணிகள்தாம். நாங்க யாருக்கூட, விளையாட போறோம் என்பதை தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கோம், மற்ற அணிகளுக்கு ஆல் தி பெஸ்ட்." என்று தெரிவித்தார்.