Published:Updated:

IPL 2023 Daily Round Up: ரோஹித் படைத்த சாதனை முதல் குஜராத் அணியின் புதிய ஜெர்ஸி வரை!

குஜராத் அணியின் புதிய ஜெர்ஸி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்ஸ்மேனான ரியான் பராக்கின் பழைய புகைப்படம் ஒன்றை ரசிகர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Published:Updated:

IPL 2023 Daily Round Up: ரோஹித் படைத்த சாதனை முதல் குஜராத் அணியின் புதிய ஜெர்ஸி வரை!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்ஸ்மேனான ரியான் பராக்கின் பழைய புகைப்படம் ஒன்றை ரசிகர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

குஜராத் அணியின் புதிய ஜெர்ஸி

திரும்பி வந்துட்டேன்னு சொல்லு!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், முதல் இன்னிங்ஸில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்தது. தொடர்ந்து மோசமான விமர்சனங்களைச் சந்தித்து வந்த கேப்டன் ரோஹித் இந்த முறை சாதிப்பாரா என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருந்தது. நேற்றைய ஆட்டத்தின் மூலம் தான் மீண்டு வருவதை பறைசாற்றியுள்ளார் ரோஹித். 2 சிக்ஸர்களும், 3 பவுண்டரிகளும் அடித்து பழைய ஹிட் மேனை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார். இந்த சிக்ஸர்களின் மூலமாக ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள் (152) அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை டிவில்லியர்ஸை முறியடித்துப் பெற்றுள்ளார் ரோஹித். இந்தப் பட்டியலில் கிறிஸ் கெயில் (357) முதலிடத்தில் உள்ளார். மேலும், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக களமிறங்கி 200 சிக்ஸர்களை அடித்து, புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

ரோஹித்
ரோஹித்

RCB ரசிகராக ரியான் பராக்:

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்ஸ்மேனான ரியான் பராக்கின் பழைய புகைப்படம் ஒன்றை ரசிகர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கடந்த 2017 ஐபிஎல் சீசனில், மே 7-ம் தேதி சின்னசாமி மைதானத்தில் RCB vs KKR இடையேயான போட்டி நடைபெற்றது. ரியான் பராக், இந்த போட்டியைக் காண்பதற்காக ஆர்.சி.பி அணியின் கொடியுடன் மைதானத்திற்கு வந்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் இது.

ரியான் பராக்
ரியான் பராக்

ரசிகர் பதிவிட்ட இந்தப் படத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார், ரியான் பராக். இந்த 2023 தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 3.80 கோடி ரூபாய்க்கு இவர் எடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஸ்வரூபம் எடுத்த ரஷித் கான்:

'விஸ்வரூபம்' படத்தில் கமல், தொடக்க சண்டை காட்சியில் அதுவரை இல்லாத விஸ்வரூபத்தை எடுத்திருப்பார். அந்த மாதிரியான உருமாற்றம்தான், நேற்றைய போட்டியில் ரஷித் கான் செய்த பேட்டிங்கும். பௌலிங்கில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பேட்டிங் செய்த போது, 3 பவுண்டரிகளும் 10 சிக்ஸர்களும் அடித்து அசத்தினார். 32 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து மிரள வைத்தார். ஐபிஎல் வரலாற்றில், இன்னிங்ஸின் 8வது பேட்ஸ்மனாகக் களமிறங்கி அதிக ரன்கள் அடித்த முதல் வீரரராக ரஷித் கான், சாதனை படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில், ரஷித் கான் அடித்த முதல் அரைசதமும் இதுவே. இதுவரை 403 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 550 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். "எந்த ரூபம் எடுப்பான், எவருக்குத் தெரியும்? சொந்த ரூபம் மாற்றி மாற்றி எடுப்பான், விஸ்வரூபம்."

ரஷித் கான்
ரஷித் கான்

LSG அணியின் முதல் கிரிக்கெட் அகாடமி:

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் ஒரு புதிய கிரிக்கெட் அகாடமியைத் தொடங்கியுள்ளது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி. அந்த அணி தொடங்கியுள்ள முதல் கிரிக்கெட் அகாடமியும் இதுதான். உத்தரப்பிரதேசம் மற்றும் நாடு முழுவதும் உள்ள இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில், இங்கிலாந்தைச் சேர்ந்த CricFitSport (CFS) கிரிக்கெட் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து இதனை உருவாகியுள்ளது. லக்னோ அணியின் பயிற்சியாளர்களான கௌதம் கம்பீர், மோர்னே மோர்கல், ஜான்டி ரோட்ஸ், பிரவின் டாம்பே உள்ளிட்ட பலரும் இந்த அகாடமியின் வழிகாட்டிகளாகச் செயல்படுவார்கள் என LSG அணி அறிவித்துள்ளது.

பிங்க் ஜெர்ஸியில் குஜராத்
பிங்க் ஜெர்ஸியில் குஜராத்

பிங்க் ஜெர்ஸியில் குஜராத்:

குஜராத் டைட்டன்ஸ் அணி வருகின்ற மே 15-ம் தேதி, நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி, தங்களின் நீல ஜெர்ஸிக்குப் பதிலாக பிங்க் நிற ஜெர்ஸியில் விளையாடவுள்ளது. புற்றுநோய்க்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக குஜராத் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.