Published:Updated:

IPL 2023 Daily Round Up: தோனியின் சாதனையை முறியடித்த ரிங்கு சிங் முதல் டேவிட் வார்னரின் அதிரடி வரை!

Rinku Singh

ஐ.பி.எல் தொடரில் நேற்றைய தினத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களின் தொகுப்பு.

Published:Updated:

IPL 2023 Daily Round Up: தோனியின் சாதனையை முறியடித்த ரிங்கு சிங் முதல் டேவிட் வார்னரின் அதிரடி வரை!

ஐ.பி.எல் தொடரில் நேற்றைய தினத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களின் தொகுப்பு.

Rinku Singh

ரியல் ஹீரோவான ரிங்கு சிங்:

நேற்றைய போட்டியில் கொல்கத்தா தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது. இந்தத் தொடர் முழுவதும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஒற்றை வீரனாக விளையாடி வந்தார், ரிங்கு சிங். நேற்றைய போட்டியிலும், இன்னிங்ஸின் கடைசி 2 ஓவர்களில் அதிரடியாக விளையாடினார். 33 பந்துகளில் 67 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டத்தை உயிர்ப்புடன் இருக்க வைத்தார். ஐபிஎல் வரலாற்றில் சேஸிங் செய்யும் போது, கடைசி 2 ஓவர்களில் அதிக ரன்கள் எடுத்த வீரர், ரிங்கு சிங்தான்.

Rinku Singh
Rinku Singh

இந்தத் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில், கடைசி 2 ஓவரில் 41 ரன்கள் எடுத்து சாதனை படைத்திருந்தார். நேற்று நடைபெற்ற லக்னோ எதிரான போட்டியில் கடைசி 2 ஓவர்களில் 36 ரன்கள் எடுத்தார். இதற்கு முன்னதாக சி.எஸ்.கே அணியின் கேப்டன் தோனி, கடைசி 2 ஓவரில் 33 ரன்களை எடுத்ததே சாதனையாக இருந்தது. இந்த ஒரே சீசனில் இந்தச் சாதனையை முறியடித்துள்ளார். மேலும், இந்த 2023 தொடரில் 14 போட்டிகளில் விளையாடி 474 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல்லில் 5வது பேட்ஸ்மேனாகக் களமிறங்கி ஒரு தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரரும், ரிங்கு சிங்தான்.

வார்னரின் சாதனை:

டெல்லி கேப்பிடல்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் நேற்றைய ஆட்டத்தில் மோதியது. இதில் டெல்லி அணி இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கியது. இதில் டெல்லி அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் வழக்கம் போல அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆனால், 'எவர் வீழ்ந்தாலும் நான் வீழ மாட்டேன்' என போர்ப்படைத் தளபதியைப் போல, அணிக்காகக் கடைசி வரை ஆடினார். மொத்தம் 58 பந்துகளில் 86 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

David Warner
David Warner

இந்த 2023 தொடரில் 14 போட்டிகளில் விளையாடி 516 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார். இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை 500 ரன்களுக்கு மேல் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் டேவிட் வார்னர். இதுவரை 7 சீசன்களில் 500 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார்.

இதுக்கு இல்லையா சார், ஒரு எண்டு!

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. இதில் லக்னோ அணியின் வீரரான நவீன்-உல்-ஹக் பந்து வீசியபோது 'கோலி..! கோலி..!' என்ற கோஷம் மைதானம் முழுவதும் எழுந்தது. இந்த இன்னிங்ஸின் 14வது ஓவரில் ரஹ்மானுல்லா குர்பாஸ் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இந்த விக்கெட்டுக்கு பிறகு, நவீன் செய்த ரியாக்ஷன் இணையத்தில் வைரலாகி வருகின்றது. விராட் கோலியுடனான சண்டைக்குப் பிறகு, இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதே போல, கடந்த போட்டிகளில் கம்பீருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Virat Kohli
Virat Kohli

CSK-வின் போர்கண்ட சிங்கங்கள்!

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிரடியாக வெற்றி பெற்று, ப்ளேஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களான ருத்துராஜ் மற்றும் டெவான் கான்வே, ஜோடி அதிரடியாக விளையாடினர். இந்த ஜோடி, ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே அணிக்காக 1000 ரன்களை எடுத்து அசத்தியுள்ளது. மேலும் இவர்கள், சி.எஸ்.கே அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடி, 8வது முறையாக (20 இன்னிங்ஸ்) 50+ ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பை உருவாக்கியுள்ளனர்.

CSK v GT
CSK v GT

இவர்களுக்கு முன்னர், சிஎஸ்கே அணிக்காக முரளி விஜய் மற்றும் மைக்கேல் ஹஸ்சி இருவரும் இணைந்து, 13 முறை (34 இன்னிங்ஸ்) 50+ ரன்களுக்கு பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்தியுள்ளனர். இந்தப் போட்டியின், முதல் இன்னிங்ஸில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 223 ரன்கள் எடுத்தது. இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை (28) 200+ ஸ்கோர்களை அடித்த அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

தோனி குறித்து கான்வே & ருதுராஜ்:

நேற்றைய போட்டிக்கு பிறகு பேசிய டெவான் கான்வே, "தோனியின் குழுவில் இருப்பது எங்களுக்குக் கிடைத்த அதிர்ஷ்டம். இது அவரது கடைசி சீசன் அல்ல. இன்னும் அவரால் குறைந்தது ஐந்து வருடங்கள் விளையாட முடியும், அவருடைய முழங்கால் நன்றாக உள்ளது" என்று தெரிவித்தார்.

டெவான் கான்வே
டெவான் கான்வே

மேலும் ருத்துராஜ் கெய்க்வாட் பேசிய போது, "நான் மஹி பாயின் கீழ் விளையாடுவதற்கு நன்றி தெரிவிக்கின்றேன். அவர் இன்னும் 5 வருடங்கள் விளையாடுவார். என்னால் அவரிடம் சென்று, எதை வேண்டுமானாலும் கேட்க முடியும். அவர் மிகவும் பணிவாகவே இருப்பார், எனக்கு ஆதரவாவும் உள்ளார்" என தோனி பற்றி நெகிழ்ந்திருந்தார்.