Published:Updated:

IPL 2023 Daily Round Up: `பயமறியா சிங்கம் ரெண்டு' RCB கூட்டணியின் சாதனை முதல் LSG -ன் புதுமுகம் வரை!

நேற்றைய ஆட்டத்தில் 63 பந்துகளில் சதமடித்த விராட் கோலி

நேற்றைய ஆட்டத்தில் 63 பந்துகளில் சதமடித்து, அதிரடியாக விளையாடி அசத்தினார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக சதங்கள் (6) அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் விராட் கோலி!

Published:Updated:

IPL 2023 Daily Round Up: `பயமறியா சிங்கம் ரெண்டு' RCB கூட்டணியின் சாதனை முதல் LSG -ன் புதுமுகம் வரை!

நேற்றைய ஆட்டத்தில் 63 பந்துகளில் சதமடித்து, அதிரடியாக விளையாடி அசத்தினார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக சதங்கள் (6) அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் விராட் கோலி!

நேற்றைய ஆட்டத்தில் 63 பந்துகளில் சதமடித்த விராட் கோலி

லக்னோ அணியின் புது ஜெர்ஸி:

நாளை ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ள போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் லக்னோ அணியினர், சிவப்பு நிற ஜெர்ஸியை அணிந்து விளையாடவுள்ளனர். கொல்கத்தாவை சேர்ந்த ATK மோஹுன் பேகன் கிளப் அணியின் சிவப்பு நிற ஜெர்ஸியை பிரதிபலிக்கும் விதமாக இப்போட்டியில் விளையாடவுள்ளது, லக்னோ அணி. நடப்பு 2023 ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் இந்த அணியே சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனால் மோஹுன் பேகன் FC அணியை பெருமைப்படுத்தும் விதமாக, இந்த இரு அணிகளின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா முடிவெடுத்துள்ளார்.

LSG Team
LSG Team

RCB பிளே-ஆஃப் செல்ல முடியுமா?

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில், பெங்களூர் ராயல் சேலஞ்சர் அணி அதிரடியாக வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றாலும் பிளே ஆஃப் செல்ல, நாளை மறுநாள் நடைபெறவுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும். இது நிகழ்ந்தால் ஆர்.சி.பி அணி உறுதியாக பிளே ஆஃப் சுற்றுக்கு சென்று விடும். 

RCB
RCB

RCB vs GT இடையேயான போட்டி தான் தீர்மானிக்கும். எப்படி இருந்தாலும் பெங்களூர் அணிக்கு இது வாழ்வா? சாவா? போட்டி தான்.

லக்னோ அணியில் மாற்று வீரர்:

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜெயதேவ் உனத்கட்டிற்கு, கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வலைப்பயிற்சியின் போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால், நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து வெளியேறினார். தற்போது, இவருக்கு மாற்றாக சூர்யன்ஷ் ஷெட்ஜ் என்ற வீரரை அறிவித்துள்ளது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி. ஆல் ரவுண்டர் வீரரான இவரை 20 லட்ச ரூபாய்க்கு வாங்கியுள்ளது. நாளை நடைபெறவுள்ள லக்னோ அணியின் கடைசி லீக் போட்டியில் இவர் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளது. கொல்கத்தா அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே, லக்னோ அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். 

சூர்யன்ஷ் ஷெட்ஜ்
சூர்யன்ஷ் ஷெட்ஜ்

விராட் கோலியின் 'விடா முயற்சி':

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான கடந்த இரு போட்டிகளிலும், விராட் கோலி முதல் பந்திலேயே டக் அவுட் ஆகியிருந்தார். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் 63 பந்துகளில் சதமடித்து, அதிரடியாக விளையாடி அசத்தினார். இது கோலியின் 6வது ஐபிஎல் சதமாகும். ஐபிஎல் தொடரில் அதிக சதங்கள் (6) அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இவருக்கு முன்னதாக, ஐபிஎல் தொடரில் கிறிஸ் கெயில் 6 சதங்களை அடித்துள்ளார். இந்த 2023 சீசனில் இதுவரை 538 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில், அதிக சீசன்களில் (6) 500+ ரன்களுக்கு மேல் எடுத்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இதன் மூலம், டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்துள்ளார். மேலும், ஆர்.சி.பி அணிக்காக விளையாடி இதுவரை 7,500 ரன்களை அடித்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில், ஒரு அணிக்காக விளையாடி அதிக ரன்கள் எடுத்த வீரரும் விராட் கோலி தான். ஒரே போட்டியின் மூலம் இந்த சாதனைகளை படைத்துள்ளார், 'கிங்' கோலி.

நேற்றைய ஆட்டத்தில் 63 பந்துகளில் சதமடித்த விராட் கோலி
நேற்றைய ஆட்டத்தில் 63 பந்துகளில் சதமடித்த விராட் கோலி

பயமறியா சிங்கம் ரெண்டு, நரம்புக்குள்ளே நட்பு உண்டு!

இந்தத் தொடரில் ஆர்.சி.பி அணியின் KGF கூட்டணி (கோலி, மேக்ஸ்வெல், ஃபாப் டுப்ளேசிஸ்)  சிறப்பாக விளையாடி வருகின்றனர். இதில் யாராவது இருவர் பார்ட்னர்ஷிப்பை அமைத்து விட்டாலும், இவர்களை பிரிப்பது மற்ற அணிகளுக்கு சவாலான காரியம் தான். நேற்றைய போட்டியிலும், விராட் கோலி மற்றும் ஃபாப் டுப்ளேசிஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி விளையாடினர். ஐபிஎல் வரலாற்றிலேயே, தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி ஒரு தொடரில் அதிக ரன்கள் அடித்த ஜோடி, இவர்கள் தான். நடப்பு தொடரில் மட்டும் 872 ரன்களை தொடக்க பார்ட்னர்ஷிப்பின் மூலம் எடுத்துள்ளனர்.