Published:Updated:

IPL 2023 Daily Round Up: CSK அணியின் கோப்பை ராசி முதல் வார்னரின் சாதனை வரை!

சி.எஸ்.கே

SRH vs RCB போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றால், சென்னை மற்றும் லக்னோ அணி உறுதியாக பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும். இதுவே, பெங்களூர் அணி வெற்றி பெற்றால்...

Published:Updated:

IPL 2023 Daily Round Up: CSK அணியின் கோப்பை ராசி முதல் வார்னரின் சாதனை வரை!

SRH vs RCB போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றால், சென்னை மற்றும் லக்னோ அணி உறுதியாக பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும். இதுவே, பெங்களூர் அணி வெற்றி பெற்றால்...

சி.எஸ்.கே

SRH vs RCB வெற்றி யாருக்கு?

ஹைதராபாத் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் லீக் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டிதான், சென்னை மற்றும் லக்னோ அணியின் ப்ளே- ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யும் ஆட்டமாக மாறியுள்ளது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றால், சென்னை மற்றும் லக்னோ அணி உறுதியாக பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும். இதுவே, பெங்களூர் அணி வெற்றி பெற்றால் கணிப்புகள் மாறலாம்.

SRH vs RCB
SRH vs RCB

கடந்த 2016 சீசனில் இதே நாளில், பஞ்சாப் அணியுடன் ஆர்.சி.பி அணி விளையாடியது. இதில் விராட் கோலி 50 பந்துகளில் 113 ரன்கள் எடுத்து அசத்தினார். பெங்களூர் அணி இந்த போட்டியில் 15 ஓவர்களில் மட்டுமே விளையாடியது. இந்த போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது, பெங்களூர் அணி. ஐபிஎல் வரலாற்றிலேயே 15 ஓவர்கள் கொண்ட போட்டியில் சதம் அடித்த ஒரே வீரர், விராட் கோலி தான். இந்த நாளில், பெங்களூர் அணி என்ன செய்யப் போகிறது என்பதை இன்றிரவு காண்போம்.

வார்னரின் அதிரடி:

நேற்றைய ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனான டேவிட் வார்னர், 31 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஒரு நல்ல இன்னிங்ஸை அமைத்துக் கொடுத்தார். இந்த தொடர் முழுக்கவே இது போன்ற சீரான ஆட்டத்தையே விளையாடி வருகின்றார், வார்னர். இந்த சீசனில் 13 போட்டிகளில் விளையாடி 430 ரன்களை எடுத்துள்ளார். இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் 400+ ரன்களை அதிக முறை (9) அடித்த வீரர்கள் பட்டியலில் வார்னரும் இணைந்துள்ளார். இவருக்கு முன்னதாக சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான் மற்றும் விராட் கோலி இதே சாதனையை படைத்துள்ளனர்.

வார்னர்
வார்னர்

கடைசில தான் வந்தாரு 'விநாயக்'!

ஐபிஎல் வரலாற்றில், தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 4 முறை (2010,2011,2018,2021) கோப்பையை வென்றுள்ளது. இந்த நான்கு சீசன்களிலும் சி.எஸ்.கே, முதல் அணியாக ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றதே இல்லை. 2010 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியும், 2011 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், 2018 சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், 2021 சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய அணிகள் தான் முதலாவதாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன. அதே போன்று நடப்பு 2021 சீசனிலும் குஜராத் டைட்டன்ஸ் அணி, முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த 2023 சீசனிலும், இதே ராசி கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 சி.எஸ்.கே
சி.எஸ்.கே

சாதித்துக் காட்டிய ரிலீ ரோசோவ்:

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், முதல் இன்னிங்ஸில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 213 ரன்கள் எடுத்து அசத்தியது. இந்த 2023 தொடரில், டெல்லி அணியின் முதல் 200+ ஸ்கோர் இதுவாகும். டெல்லி அணியின் நம்பிக்கை நாயகனாக விளையாடிய ரிலீ ரோசோவ், 37 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து அசத்தினார். இவரின் முதல் ஐபிஎல் அரைசதம் இதுவாகும். தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேனான இவரை 4.60 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது, டெல்லி அணி. இந்த தொடரில் 8 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 209 ரன்களை எடுத்துள்ளார். இவர் கடைசியாக 2015 ஐபிஎல் சீசனில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிலீ ரோசோவ்
ரிலீ ரோசோவ்

தோல்வி குறித்து தவான்:

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. போட்டிக்குப் பிறகு பேசிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் தவான், "இந்த தோல்வி வருத்தமடைய செய்கிறது. பவர் பிளே ஓவர்களில் நாங்கள் சரியாக பந்து வீசவில்லை, பவர் பிளேயில் இரண்டு விக்கெட்டுகளை எடுத்திருக்க வேண்டும். கடைசி ஓவரை ஸ்பின்னர் வீச வேண்டும் என்ற எனது முடிவு தவறானது, இந்த முடிவு அவர்களுக்கு சாதகமானதாக மாறியது. வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசவில்லை." என தெரிவித்தார். இந்த தோல்வியின் மூலம், பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வது கேள்விக்குறியாக மாறியுள்ளது.